பி.ஜே. தமிழ் குர்ஆனில் உள்ள பொழிபெயர்ப்பு தவறுகள்
http://onlinepj.com/trindex.html
http://onlinepj.com/trindex.html
- சுலைமான் நபியை சடலமாக சிம்மாசனத்டில் போடுதல்
- சொர்க்கம், நரகம் உருவாக்கப்படும், அவை வானத்தில் இல்லை
- முதஷாபிஹாத் ஆயத்துகளுக்கு கல்வியில் தேர்ந்தவர்கள் பொருள் காண முடியும்
- பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்!
- சூனியத்தை மறுத்தல் , ஹதீஸ் நிறாகரிப்பு
38:24. ''உமது ஆட்டைத் தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதி இழைத்து விட்டார். உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள் மிகவும் குறைவு தான்'' என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத் விளங்கிக் கொண்டார். தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார். திருந்தினார்.337
337. தாவூத் நபி செய்த தவறு
தாவூத் நபியவர்கள் மன்னராக இருந்ததால், அரண்மனையை விரிவுபடுத்துவதற்காக சாதாரண மக்களின் நிலத்தைக் கையகப்படுத்தியது போன்ற ஒரு தவறைச் செய்திருக்கக் கூடும். இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டி இறைவன் அவரை திருத்தியிருக்கக் கூடும்.
Ref: http://onlinepj.com/vilakkam/vilakkam7.htm
2.) சுலைமான் நபியை சடலமாக சிம்மாசனத்டில் போடுதல்
38:34. ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார்
338. இவ்வசனத்திற்கு (திருக்குர்ஆன் 38:34) பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழிபெயர்த்துள்ளனர்.
ஸுலைமானின் சிம்மாசனத்தின் மீது முண்டத்தைப் போட்டோம்; சடலத்தைப் போட்டோம் என்று தங்கள் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கேற்ப கட்டுக்கதைகளையும் விளக்கவுரை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வசனத்தில் ''ஸுலைமானை ஒரு சடலமாகப் போட்டோம்'' என்று கூறப்படுகிறது. இது, நோயுற்று பலவீனப்பட்டு படுக்கையில் விழுந்து கிடக்கும் நிலையைக் குறிக்கும் சொல்லாகும்.ஸுலைமான் நபி ஒரு தவறு செய்ததாகவும் அத்தவறிலிருந்து பின்னர் திருந்திக் கொண்டதாகவும் இவ்வசனமும் இதற்கு அடுத்த வசனமும் கூறுகிறது.சோதிக்கும் முகமாக ஸுலைமான் நபிக்கு நோயை ஏற்படுத்தினோம் என்பது தான் அவரைச் சடலமாகப் போட்டோம் என்பதன் கருத்து.நடைப்பினமாக இருக்கிறான் என்று தமிழில் நாம் கூறுவது போன்ற வார்த்தைப் பிரயோகமே இந்தச் சொல்.
இவ்வாறு நோயுற்று செயல்பட முடியாத நிலையை அடைந்தவுடன் அவர் திருந்தினார். இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார் என்பது இதன் கருத்து.
Ref: http://onlinepj.com/vilakkam/vilakkam7.htm No:338
Correct Meaning:-
[038:034] And indeed, We did try Sulaimân (Solomon) and We placed on his throne Jasad (a devil, so he lost his kingdom for a while) and he did return (to Allâh with obedience and in repentance, and to his throne and kingdom by the Grace of Allâh).
---- Interpretation of the Meaning of The Noble Qur'aan in the English Language By Dr. Muhammad Taqiuddeen al-Hilaalee, Ph.D. and Dr. Muhammad Muhsin Khan, Published by DARUSSALAM ©,Riyadh ,Saudi Arabia
3. சொர்க்கம், நரகம் உருவாக்கப்படும், அவை வானத்தில் இல்லை
7: 40. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது.177 ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்
11:108. நற்பாக்கிய சாலிகளோ சவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.
11:108. நற்பாக்கிய சாலிகளோ சவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.
177. வானத்தில் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது
இவ்வசனத்தில் (7:40) வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பல விதமான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. வானத்தில் தான் சொர்க்கம் உள்ளது. எனவே அங்கே போக மாட்டார்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்களின் விளக்கம் நிராகரிக்கத் தக்கது.ஏனெனில் சொர்க்கம் மட்டுமின்றி நரகமும் சொர்க்கத்தின் அருகில் தான் உள்ளது. இரண்டுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் தான் இருக்கும். இதனாலேயே தடுப்புச் சுவர் என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது. இவர்கள் வாதப்படி சொர்க்கத்துக்கு மட்டுமின்றி நரகத்திற்கும் செல்ல மாட்டார்கள் என்ற கருத்து வந்து விடும்.இறை வசனங்களை மறுத்துப் பெருமையடித்தவர்கள் இவ்வுலகில் வாழும் போது செய்யும் பிரார்த்தனைகள் வானத்தை அடையாது; இவ்வுலகிலும் நஷ்டமடைவார்கள்; மறுமையில் நரகத்தையும் அடைவார்கள்; என்பது தான் இதன் கருத்தாக இருக்க முடியும்.
225. வானங்களும், பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம்
சொர்க்கம், நரகம் உருவாக்கப்படும் போது இந்தப் பூமி வேறு பூமியாகவும், வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்படும். எனவே இங்கே (திருக்குர்ஆன் 11:107,108) கூறப்படுவது மாற்றப்பட்ட அந்த வானம் பூமியைத் தான். அவை என்றென்றும் நிலையாக இருப்பது போல் அவர்களும் நிலையாக இருப்பார்கள் என்பது இதன் கருத்தாகும்.
12. சொர்க்கம்
12. சொர்க்கம்
திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் ''ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்'' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இரு வேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன. 'சொர்க்கம்' என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் 'ஜன்னத்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
* மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையும் 'ஜன்னத்' எனக் கூறப்படுகிறது.
* இவ்வுலகில் அமைந்துள்ள தோட்டங்களும் 'ஜன்னத்' எனக் கூறப்படுகிறது.
* மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையும் 'ஜன்னத்' எனக் கூறப்படுகிறது.
* இவ்வுலகில் அமைந்துள்ள தோட்டங்களும் 'ஜன்னத்' எனக் கூறப்படுகிறது.
திருக்குர்ஆனில் இரண்டு கருத்துக்களிலும் இந்தச் சொல பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதம் (அலை) நபி சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றனர்.
ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டதாகத் திருக்குர்ஆன் (2:30) கூறுவதாலும், சொர்க்கத்தில் ஷைத்தான் நுழைந்து வழி கெடுக்க முடியாது என்பதாலும், பூமியில் ஆதமுக்காக அமைக்கப்பட்ட சோலையில் தான் தங்க வைக்கப்பட்டார்; அங்கிருந்து தான் வெளியேற்றப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ, இந்நிகழ்ச்சியிலிருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டதாகத் திருக்குர்ஆன் (2:30) கூறுவதாலும், சொர்க்கத்தில் ஷைத்தான் நுழைந்து வழி கெடுக்க முடியாது என்பதாலும், பூமியில் ஆதமுக்காக அமைக்கப்பட்ட சோலையில் தான் தங்க வைக்கப்பட்டார்; அங்கிருந்து தான் வெளியேற்றப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ, இந்நிகழ்ச்சியிலிருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
முன்னுக்கு பின் முறண்பாடு:-
Pj quran: 330. தியாகிகளுக்கு உடனே சொர்க்கம்
ஒரு நல்ல மனிதர் இறைத் தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென 'சொர்க்கத்திற்குச் செல்' எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 36:26)
சுவர்க்கம் முன்பே படைக்கபட்டது என் பல ஆயத்துக்கள் உள்ளன:
57:21. உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள், அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன். (தமிழாக்கம்: ஜான் டிரஸ்ட் நிறுவனம்)
4.) முதஷாபிஹாத் ஆயத்துகளுக்கு கல்வியில் தேர்ந்தவர்கள் பொருள் காண முடியும்
3: 7. (முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற86 மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் ''இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.
86: ஆனால் இந்த வசனத்தைப் பெரும்பாலான விரிவுரையாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் தவறாகவே கையாண்டுள்ளனர்.
'முதஷாபிஹாத்' என்ற இரு கருத்துடைய வசனங்களை, ''அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது'' என்று அவர்களில் பெரும்பாலோர் கூறுகின்றனர். ''அல்லாஹ்வையும், அறிவுடையோரையும் தவிர யாரும் அறிய மாட்டார்கள்'' என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.இலக்கண விதியின் படி இரு விதமாகப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் புறச்சான்றின் அடிப்படையில் நாம் செய்த தமிழாக்கம் தான் சரியானது.
குர்ஆனில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த, எந்த மனிதருக்கும் தெரியாத வசனங்களும் உள்ளன என்பது அவர்களின் வாதம். ஒரே ஒரு மனிதனுக்குக் கூட புரியாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா? போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு அவர்களால் விடை கூற முடியாது. ஒரு மனிதருக்கும் புரியாத வசனங்கள் இருந்தால், மனிதர்களின் பார்வையில் அது உளறல் என்றே கருதப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து எதிரிகள், இது போன்ற வசனங்களைக் காட்டி ''முஹம்மது உளறுகிறார்'' என்று நிலை நாட்டியிருப்பார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை.எந்த மனிதராலும் விளங்க முடியாத வசனங்கள் உள்ளன என்று வாதிடுவோரிடம் அந்த வசனங்கள் யாவை? என்று பட்டியலைக் கேட்டால் திருதிரு என முழிப்பார்கள்.ஒருவருக்கும் விளங்காத ஐந்தாறு வசனங்களைக் கூட அவர்களால் எடுத்துக் காட்ட முடியாது. இதிலிருந்து அவர்கள் விதண்டாவாதம் செய்வது தெளிவாகும். ஏராளமான தமிழ் மற்றும் பிற மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. அம்மொழி பெயர்ப்புகளில் எல்லா வசனங்களுக்கும் மொழி பெயர்ப்புச் செய்துள்ளனர். ''இது எங்களுக்குப் புரியவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டும் தான் புரியும்'' எனக் கூறி ஒரே ஒரு வசனத்தைக் கூட அவர்கள் மொழி பெயர்ப்புச் செய்யாமல் விடவில்லை. இதிலிருந்து அவர்கள் தமக்குத் தாமே முரண்பட்டு இவ்வசனத்திற்கு பொருத்தமற்ற விளக்கம் கூறுகிறார்கள் என்பது உறுதியாகிறது.
சரியான அர்த்தம் தமிழாக்கம்: ஜான் டிரஸ்ட் நிறுவனம
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத்
தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
5.) பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்!
அல் பகரா :2:1 2. அலிஃப், லாம், மீம்.2
2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்!
2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்!
திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித் தனி எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும். தனித் தனி எழுத்துக்களுக்கு எந்த மொழியிலும் பொருள் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். உதாரணமாக நமச (சன்) எனக் கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். ந.ம.ச (எஸ், யு, என்) எனத் தனித் தனியாகக் கூறினால் மூன்று எழுத்துக்களைக் கூறியுள்ளோம் என்பதைத் தவிர இதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.
இது போலவே அரபு மொழியில் 'அலம''என்று கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். அலிஃப், லாம், மீம் என அச்சொல்லின் எழுத்துக்களைத் தனித் தனியாகக் கூறினால் அரபு மொழியில் உள்ள மூன்று எழுத்துக்களைக் கூறினோம் என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இதற்கு இருக்காது.
இது போல் பொருள் செய்ய முடியாத வகையில் எழுத்துக்களைக் கொண்டு ஆரம்பமாகும் 29 அத்தியாயங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவைகளாவன:
2, 3, 7, 10, 11, 12, 13, 14, 15, 19, 20, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 38, 40, 41, 42, 43, 44, 45, 46, 50, 68
Correct meaning:-
[002.001] Alif-Lâm-Mîm.
[These letters are one of the miracles of the Qur'ân and none but Allâh (Alone) knows their meanings.] Interpretation of the Meaning of The Noble Qur'aan in the English Language By Dr. Muhammad Taqiuddeen al-Hilaalee, Ph.D. and Dr. Muhammad Muhsin Khan
6.) சூனியத்தை மறுத்தல் , ஹதீஸ் நிறாகரிப்பு
http://onlinepj.com/vilakkam/vilakkam8.htm
113 :1-5: 357. நபிகள் நாயகத்துக்கு சூனியம் (இந்த தலைப்பில் பல ஹதீஸ்கல் மறுக்கபட்டுள்ளன)http://onlinepj.com/vilakkam/vilakkam8.htm