Monday, March 16, 2009

ரமலான் - ஒற்றுமையின் நினைவூட்டல்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ரமலான் - ஒற்றுமையின் நினைவூட்டல்
ஆசிரியர் முஹம்மத் நாஸிருத்தீன் அல்-அல்பானி
மூலம் : ஸில்ஸிலத்துல்- அஹதீத் அஸ்-ஸஹீஹ் (224தமிழில் : அபூஅஜ்ரா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"அவர்கள் நோன்பு பிடிக்கும் போது நோண்பு பிடியுங்கள், அவர்கள் நோன்பை விடும்போது நீங்கள் நோன்பை விடுங்கள், அவர்கள் குர்பானி கொடுக்கும் போது நீங்களும் குர்பானி கொடுங்கள்"
(ஸஹீஹ் திர்மிதீ 2/37)
அல்-பைஹகி, இமாம் அபூஹனீஃபா (ரஹ்) வாயிலாக அறிவிப்பதாவது: அலீ இப்னு அக்மர் (ரலி) அவர்கள் கூறினார்கள: "நான் அரஃபா தினத்தன்று ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர்கள் "மஸ்ரூகிற்கு இனிப்பு அதிகபடுத்திய பதார்தத்தைக் கொடுங்கள்" என்றார்கள். அதற்கு மஸ்ரூக்(ரலி) "இந்நாள் குர்பானி கொடுக்கும் நாளோ என்ற அச்சத்தை தவிர இன்று நோன்பு பிடிக்க என்னை எதுவும் தடுக்கவில்லை" என கூறினார். எனவே ஆயிஷா(ரலி) "எந்த நாளில் மக்கள் குர்பானி கொடுக்கிறார்களோ, அதுவே குர்பானி கொடுக்கும் நாள், எந்த நாளில் நோன்பை விடுகிறார்களோ, அதுவே நோன்பை முடிக்கும் நாள்" என்றார்கள். இது முற்றிலும் நம்மதகுந்த ஹதீஸ் ஆகும்.
______________________________________________________________________________________
மொழிபெயர்பாளர் குறிப்பு:-
இமாம் இப்னு ஹஜர்(ரஹி) தனது நூலான புலூகுல் மராமில் 510 ஆவது ஹதீஸாக கீழ்கண்ட ஹதீஸை குறிப்பிடுகின்றார்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفِطْرُ يَوْمَ يُفْطِرُ النَّاسُ وَالْأَضْحَى يَوْمَ يُضَحِّي النَّاسُ 
"
எந்த நாளில் மக்கள் நோன்பை நிறைவு செய்து நோன்பு நோற்காமல் பெருநாள் கொண்டாடுகிறார்களோ, அதுவே ஈதுல் ஃபித்ருடைய நாளாகும். எந்த நாளில் மக்கள் குர்பானி கொடுக்கிறார்களோ அதுவே குர்பானிப் பெருநாளாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ :802, இப்ன் மாஜா: 1660 
 (புலூகுல் மராம்:510 தமிழாக்கம் மவ்லவி M.M. அப்துல் காதிர் உமரி)
______________________________________________________________________________________

ஹதீஸ் பற்றிய விளக்கம்:-
இமாம் திர்மிதீ (ரஹ்) விளக்கமளிக்கையில் "மார்க்க அறிஞர் ஒருவர், இந்த ஹதீஸை விளக்கும் போது: இதன் பொருள் 'ஜமாத்தாருடன் (பெரும்பான்மை மக்களுடன்) நோண்பு பிடித்து, ஜமாத்தாருடன் நோன்பை விடுவதே ஆகும்" என்று கூறுகிறார்" என்றார்கள்.

அஸ்-ஸன்ஆனி சுபுலுஸ்-ஸலாமில்(2/72): "ஈதுப்பெருநாள் கொண்டாடுவதில் மக்களோடு ஒத்துபோக வேண்டும், என்பதற்கு மேற்குறபட்ட ஹதீஸ் ஆதாரமாக உள்ளது", எனக் கூறுகிறார். மேலும் தனிநபர் பிறையை பார்த்து, அன்று ஈத் என்று நம்பும்போது, பெருபான்மை மக்களின் கருத்துக்கு ஒத்துபோவதே அவர்மீது கடமையாகும். மேலும் தொழுகை, நோன்பை முடித்தல், குர்பானி கொடுத்தல் ஆகிய விஷயங்களில் ஜமாத்தார்களின் கருத்தை ஏற்பது அவர்மீதுள்ள பொறுப்பாகும்.
இமாம் இப்ன்-அல்-கய்யூம, தஹ்தீபுஸ்-ஸூனன்(3/214) என்ற நூலில்: வானவியல் ஆராய்ச்சிகள் மூலம் ஒருவர், சாதாரண மக்களுக்கு தெரியாத பிறையின் நிலைபாட்டை அறிந்து கொண்டால், அவருக்கு நோன்பை பிடிக்கவும் நோன்பை விடவும் அனுமதி இருக்கிறது, என்பது மறுக்க வேண்டிய விஷயமாகும். மேலும், ஒரு தனி நபர் பிறையை பார்த்திருந்தாலும், காஜி (நீதிபதி) அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், மற்றமக்களுக்கு எப்படி நோன்பு இல்லையோ அதேபோல் அவருக்கு நோன்பு இல்லை" எனக் கூறுகிறார்.
திர்மிதீயில் அபூஹுரைரா(ரலி) ஹதீஸ் குறித்து, இப்னு மாஜாவில் அபுல்ஹஸன் அஸ்-ஸிந்தி கூறுவதாது: "இது போன்ற(தொழுகை நோன்பு, குர்பானி) விஷயங்களில் ஒருவருடைய சுயகருத்துக்கு இடமளிப்பதோ, சுயமாக நடந்து கொள்வதோ அனுமதிக்கதக்கது அல்ல என்பதே இதன் நேரடியான அர்த்தமாகும். ஆயினும் இந்த விஷயங்கள் குறித்த முடிவு இமாம் ஜமாத்தாரிடமே விடப்படும். இமாம் ஜமாத்துடைய முடிவுக்கு கட்டுபடுவதே தனிபட்ட நபரின் கடமை. இதன் மூலம் தெரிவிக்கபடுவது என்னவென்றால் ஒருவர் பிறை பார்த்திருந்தாலும், காஜி ஒப்புகொள்ளாத பட்சத்தில் தனிப்பட செயல்படுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஜமாத்தையே அவர் பின்பற்ற வேண்டும்.
மேற்குறபட்ட ஹதீஸின் மூலம் தெளிவாகும் அர்த்தம் இதுவே. மஸ்ரூக்(ரலி) குர்பானி கொடுக்கும் நாளாக இருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாகவே நோன்பு வைக்காமல் தடுத்துக் கொண்டதாக கூறியபோது, ஆயிஷா(ரலி) அவர்களும் இந்த கருத்தையே வலியுறுத்துகிறார்கள். அதாவது தனி நபரின் கருத்துக்கு இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. மஸ்ரூக் (ரலி) ஜமாத்தையே பின்பற்ற வேண்டும்.
மக்கள் குர்பானி கொடுக்கும் நாளே, குர்பானி கொடுக்கும் நாளாகும்
மக்கள் நோண்பை விடும் நாளே, நோன்பை முடிக்கும் நாளாகும்
"
என்று விளக்கினார்கள்.

ஷரியாவின் குறிக்கோள் ஒற்றுமையேயாகும்:-

வரையறுக்கப்பட்ட இஸ்லாமிய ஷரீயத்தின் குறிக்கோள், மக்களை ஒன்றுபடுத்துவதும், அவர்களது தரத்தை ஒன்றுபடுத்துவதும், ஒற்றுமையை சீர்குலைக்கும் காரணிகளை(சுயகருத்துள்) மக்களை விட்டும் தூரப்படுத்துவதுமே ஆகும். 'இபாதா ஜாமியா' (கூட்டு வழிபாட்டுமுறைகள், அதாவது நோன்பு நோற்றல், பெருநாள் மற்றும் இதர கொழுகைகளைப்) பொறுத்தமட்டில் சுயகருத்துக்களுக்கு, அவை ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது சரியானதாக இருந்தாலும், ஷரீஅத் எந்த முக்கியத்துவம் அளிக்காது. பெருநபி தோழர்கள் (ரலி), ஒருவர் பின் ஒருவராக நின்று தொழுவதை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்களில் சிலர் ஒரு பெண்ணை தொட்டாலும், உடலில் இருந்து இரத்தம் வடிந்தாலும் 'உளு' முறிந்துவிடும் என்ற கடருத்து உடையவரும் இருந்தனர். இதனை ஏற்காத மற்றவர்களுடன் சேர்ந்தே தொழுதனர்.இன்னும் அவர்களில் பயணத்தின் போது கஸ்ர் (சுருக்கி தொழுதல்) தொழாமல், முழுவதுமாக தொழுபவர்களாக இருந்தனர் என்ற போதிலும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இமாம் ஒருவரின் பின் நின்று அனைவரும் சேர்ந்து தொழுவதை எதுவும் தடுக்கவில்லை. இது ஏற்றுக்கொள்ளதக்கதே என்றும் கருதினர். ஏனெனில் அவர்கள் தஃபர்ருக் (பிளவு படுதல்), இக்திலாஃபை (கருத்துவேறுபடுதலை) விட மிகவும் தீயது என அறிந்திருந்தார்கள்.
உண்மையில் ஒரு நபித்தோழர் ஹஜ்ஜின்போது மினாவில் கூடும் ஜமாத் போன்ற பெரும் கூட்டங்களுக்குரிய இமாம் அவர்களின் கருத்துக்கு மாறுபடும் ஒரு சிறிய எண்ணத்தைக் கூட மனதில் கொள்ளாதவராக திகழ்ந்தார். தமது சொந்த்தகருத்தில் செயல்பட மறுத்தார். ஏனெனில் அதன் மூலம் ஏற்படும் தவற்றிலிருந்த்து விலகி செல்ல விழைந்ததே காரணமாகும். இதற்க்கு சான்றாக கீழ்வரும் ஹதீஸ் அமைகிறது.
ஹதீஸ் நூல் அபூதாவூத் (1960) கூருவதாவது:
உதுமான் (ரலி) மினாவில் தங்கிய போது 4 ரக்காத்துகள் தொழுதார்கள். இதை கண்ட இப்ன் மஸ்ஊத் (ரலி) "நான் நபிகளாருடன் இரண்டு ரக்காத்துகள், அபூபக்கர்(ரலி) அவர்களுடன் இரண்டு ரக்காத்துகள், உமர்(ரலி) அவர்களுடன் இரண்டு ரக்த்துகளே தொழுதுள்ளேன். அனால் தங்களால் இது மாற்றபட்டுவிட்டதே. இந்த 4 ரக்காத்துகளில் 2 ரக்காத்துகள் இறைவனால் ஏற்றுக்கொளப்படும் என நம்புகிறேன்" என்று கடிந்து கூறினார். பிறகு இப்ன் மஸ்ஊத் (ரலி) 4 ரக்காத்துகள் தொழுதார்கள். "தாங்கள் உதுமான்(ரலி) அவர்களை கடிந்துகொண்டீர்கள். ஆனால் தாங்கள் 4 ரக்காத்துகள் தொழுதீர்களே?" என்று வினவியபோது "மாறுடுதல் தீயது!" என்று பதில் அளித்தார்கள்.
இந்த ஹதீஸின் தொடர்பு ஸஹீஹானது. இதைபோன்றே இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் முஸ்னத்(5/155) அபூதர்தா(ரலி) அவர்களிடமிருந்த்து மற்றொரு ஹதீஸும் அறிவுக்கபட்டுள்ளது.
மார்கத்தை பிளவு படுத்தி தங்கள் பள்ளிகளில் இமாமுக்கு கட்டுபடாமல் , குறிப்பாக ரமளான் மாதத்தில் வித்ரு தொழுகை விஷயத்தில் இமாம்களோடு (மத்ஹபை காரணம் கூறி) வேறுபடும் மக்கள், மேற்கூறபட்ட ஹதீஸை மனதில் கொள்ள வேண்டும். அதே போல் வானவியல் ஆராய்சிகளின் மூலம், பெருபான்மை மக்களை விட முந்தியோ, பிந்தியோ நோன்பு பிடிப்பதிலும் எந்த தவறும் இல்லை என நினைப்பவர்கள், இந்த ஹதீஸை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே அனைவரும் மேற்கூறபட்ட கருத்துக்களை சிந்தித்துணர வேண்டும். இதன் மூலம் தங்களது அறியாமையில் இருந்தும் தவறான சுயகருத்துக்களில் இருந்தும் விடுபட முடியும். இதன் காரணமாக மற்ற முஸ்லிம் சகோதரர்களுடன் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயல்படுவது எளிதாக அமையும்.


(( إِنَّ يَدَ اللَّهِ عَلَى الْجَمَاعَةِ ))
நிச்சயமாக அல்லாஹ்வின் கரம்ஜமாத்தின் மீதே உள்ளது.
(ஸஹீஹ் ஸுனன் அன்நஸாயீ :4032)


سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها
الألباني

224 - " الصوم يوم تصومون، والفطر يوم تفطرون، والأضحى يوم تضحون ".

أخرجه الترمذي (2 / 37 - تحفة) 
" وفسر بعض أهل العلم هذا الحديث، فقال: إنما معنى هذا الصوم والفطر مع
الجماعة وعظم الناس ". وقال الصنعاني في " سبل السلام " (2 / 72) :
" فيه دليل على أنه يعتبر في ثبوت العيد الموافقة للناس، وأن المتفرد بمعرفة
يوم العيد بالرؤية يجب عليه موافقة غيره، ويلزمه حكمهم في الصلاة والإفطار
والأضحية ".
وذكر معنى هذا ابن القيم رحمه الله في " تهذيب السنن " (3 / 214) ، وقال:
" وقيل: فيه الرد على من يقول إن من عرف طلوع القمر بتقدير حساب المنازل جاز
له أن يصوم ويفطر، دون من لم يعلم، وقيل: إن الشاهد الواحد إذا رأى الهلال
ولم يحكم القاضي بشهادته أنه لا يكون هذا له صوما، كما لم يكن للناس ".
وقال أبو الحسن السندي في " حاشيته على ابن ماجه " بعد أن ذكر حديث أبي هريرة
عند الترمذي:
" والظاهر أن معناه أن هذه الأمور ليس للآحاد فيها دخل، وليس لهم التفرد
فيها، بل الأمر فيها إلى الإمام والجماعة، ويجب على الآحاد اتباعهم للإمام
والجماعة، وعلى هذا، فإذا رأى أحد الهلال، ورد الإمام شهادته ينبغي أن لا
يثبت في حقه شيء من هذه الأمور، ويجب عليه أن يتبع الجماعة في ذلك ".
قلت: وهذا المعنى هو المتبادر من الحديث، ويؤيده احتجاج عائشة به على مسروق
حين امتنع من صيام يوم عرفة خشية أن يكون يوم النحر، فبينت له أنه لا عبرة

برأيه وأن عليه اتباع الجماعة فقالت:
" النحر يوم ينحر الناس، والفطر يوم يفطر الناس ".
قلت: وهذا هو اللائق بالشريعة السمحة التي من غاياتها تجميع الناس وتوحيد
صفوفهم، وإبعادهم عن كل ما يفرق جمعهم من الآراء الفردية، فلا تعتبر الشريعة
رأي الفرد - ولو كان صوابا في وجهة نظره - في عبادة جماعية كالصوم والتعبيد
وصلاة الجماعة، ألا ترى أن الصحابة رضي الله عنهم كان يصلي بعضهم وراء بعض
وفيهم من يرى أن مس المرأة والعضو وخروج الدم من نواقض الوضوء، ومنهم من
لا يرى ذلك، ومنهم من يتم في السفر، ومنهم من يقصر، فلم يكن اختلافهم هذا
وغيره ليمنعهم من الاجتماع في الصلاة وراء الإمام الواحد، والاعتداد بها،
وذلك لعلمهم بأن التفرق في الدين شر من الاختلاف في بعض الآراء، ولقد بلغ
الأمر ببعضهم في عدم الإعتداد بالرأي المخالف لرأى الإمام الأعظم في المجتمع
الأكبر كمنى، إلى حد ترك العمل برأيه إطلاقا في ذلك المجتمع فرارا مما قد ينتج
من الشر بسبب العمل برأيه، فروى أبو داود (1 / 307) أن عثمان رضي الله عنه
صلى بمنى أربعا، فقال عبد الله بن مسعود منكرا عليه: صليت مع النبي صلى الله
عليه وسلم ركعتين، ومع أبي بكر ركعتين، ومع عمر ركعتين، ومع عثمان صدرا
من إمارته ثم أتمها، ثم تفرقت بكم الطرق فلوددت أن لي من أربع ركعات ركعتين
متقبلتين، ثم إن ابن مسعود صلى أربعا! فقيل له: عبت على عثمان ثم صليت
أربعا؟ ! قال: الخلاف شر. وسنده صحيح. وروى أحمد (5 / 155) نحو هذا عن
أبي ذر رضي الله عنهم أجمعين.
فليتأمل في هذا الحديث وفي الأثر المذكور أولئك الذين لا يزالون يتفرقون في
صلواتهم، ولا يقتدون ببعض أئمة المساجد، وخاصة في صلاة الوتر في رمضان،
بحجة كونهم على خلاف مذهبهم! وبعض أولئك الذين يدعون العلم بالفلك، ممن يصوم
ويفطر وحده متقدما أو متأخرا عن جماعة المسلمين، معتدا برأيه وعلمه، غير

مبال بالخروج عنهم،
فليتأمل هؤلاء جميعا فيما ذكرناه من العلم، لعلهم يجدون
شفاء لما في نفوسهم من جهل وغرور، فيكونوا صفا واحدا مع إخوانهم المسلمين فإن

يد الله مع الجماعة.


https://www.youtube.com/watch?v=Aok2XcrZLEA
https://www.youtube.com/watch?v=iMpDbwMt4EY
https://www.youtube.com/watch?v=ELJrfKX7MKs

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...