بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
தொழுகைக்கு பிறகு ஓத வேண்டிய திக்ர்கள்
(3 முறை) أَسْتَغْفِرُ اللهَ
அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறேன் [முஸ்லிம்]
اللَّهُمَّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَمِ
அல்லாஹ்வே! நீயே ஈடேற்றம் தருபவன்; உன்னிடமிருந்தே ஈடேற்றம் கிடைக்கிறது; நீ வளமிக்கவன்! கண்ணியமும் சங்கையும் மிக்கவன் [ஸஹீஹ் முஸ்லிம் 1/414]
لا الهَ اِلَّا اللّهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهْ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَئ ٍ قَدِيْرٌ لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ، لا إِلَهَ إِلاَّ اللَّهُ، وَلا نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لا إِلَهَ إِلاَّ اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الكَافِرُوْنَ
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை; அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரித்தானது; அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது; அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.பாவத்திலிருந்து மீளவோ, நன்மையின் மீது ஆற்றல் பெறவோ முடியாது, அல்லாஹ்வை கொண்டே தவிர! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; அவனைத்தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கே அருட்கொடை அனைத்தும் உரிமையானது; அவனுக்கே அழகிய புகழ் அனைத்தும் சொந்தமானது; வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை. வணக்க வழிபாட்டை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி வைக்கிறோம்; காஃபிர்கள் வெறுத்தாலும் சரியே! [முஸ்லிம் 1/415]
اللَّهُمَ لا مَانِعَ لِمَا أعْطَيْتَ ، وَلا مُعْطِيَ لِمَا مَنَعْتَ ، وَ لا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
அல்லாஹ்வே! நீ கொடுப்பதை தடுப்பவர் எவரும் இல்லை; நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது; எந்த செல்வந்தனின் செல்வமும் உன்னை விட்டு அவனுக்கு எப்பலனையும் அளிக்க முடியாது. [புகாரி 1/255, முஸ்லிம் 1/414]
سُبْحَانَ اللَّه
الْحَمْدُ للَّه
اللَّهُ أَكْبَرُ
الْحَمْدُ للَّه
اللَّهُ أَكْبَرُ
அல்லாஹ்வே தூய்மையானவன் (33 தடவை)
அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே! (33 தடவை)
அல்லாஹ்வே மிகப் பெரியவன் (33 தடவை)
அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே! (33 தடவை)
அல்லாஹ்வே மிகப் பெரியவன் (33 தடவை)
لا الهَ اِلَّا اللّهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهْ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَئ ٍ قَدِيْرٌ
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை; அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரித்தானது; அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது; அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். [முஸ்லிம் 1/418]
اللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
அல்லாஹ்வே! உன்னை நினைவு கூர்வதற்க்கும்; உனக்கு நன்றி செலுத்துவதற்க்கும்; உன்னை அழகிய முறையில் வணங்குவதற்க்கும் எனக்கு நீ உதவி செய்! [அபூதாவூத் 2/86,அந்-நஸயீ 3/53]
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அத்தியாயம்-2(சூரத்துல் பகரா):255 அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் 'ஆயத்துல் குர்சி'யை ஓதிவருபவர் சொர்க்கம் செல்வதற்க்கு மரணம் தான் தடையாக உள்ளது. [இப்ன் ஹிப்பான், இப்ன் மர்தவைஹி, தப்ரானி]
அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் 'ஆயத்துல் குர்சி'யை ஓதிவருபவர் சொர்க்கம் செல்வதற்க்கு மரணம் தான் தடையாக உள்ளது. [இப்ன் ஹிப்பான், இப்ன் மர்தவைஹி, தப்ரானி]
سُوْرَةُ الاِخْلاَصِ
سُوْرَةُ الْفَلَقِ
سُوْرَةُ النَّاس
سُوْرَةُ الْفَلَقِ
سُوْرَةُ النَّاس
அத்தியாயம்-112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)
அத்தியாயம்-113ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)
அத்தியாயம்-114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)
ஆகிய சூராக்களை ஒரு முறை ஓத வேண்டும்.
ஃபஜ்ர் மற்றும் மக்ரிப் தொழுகைகளுக்குப் பிறகு மட்டும் மூன்று முறை ஓத வேண்டும்[அபூதாவூத் 2/86,அந்-நஸயீ 3/68,ஸஹீஹ் அத்-திர்மிதி 2/8]
அத்தியாயம்-113ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)
அத்தியாயம்-114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)
ஆகிய சூராக்களை ஒரு முறை ஓத வேண்டும்.
ஃபஜ்ர் மற்றும் மக்ரிப் தொழுகைகளுக்குப் பிறகு மட்டும் மூன்று முறை ஓத வேண்டும்[அபூதாவூத் 2/86,அந்-நஸயீ 3/68,ஸஹீஹ் அத்-திர்மிதி 2/8]
(தொகுப்பு: ஸவூதி அரபியாவின், மார்க்க தீர்ப்பு தலைவராக இருந்த்த அஷ்ஷேக் அப்துல் அஜீஸ் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள்)