Sunday, November 11, 2012

ஸாலிம்(ரலி) ,ஸஹீஹான ஹதீஸ்

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என பல காரணங்கள் கூறி , அப்படி ஒதுக்கினால் இறை மறுப்பிற்கு அதுவே ஆதாரமாக அமையாதா???
http://onlinepj.com/books/hadith_kuranirku_muranpaduma/
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ - وَهُوَ حَلِيفُهُ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَرْضِعِيهِ ‏"‏ ‏.‏ قَالَتْ وَكَيْفَ أُرْضِعُهُ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ‏"‏ قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ ‏"‏ ‏.‏ زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا ‏.‏ وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي عُمَرَ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ [http://sunnah.com/muslim/17/33]
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், சஹ்லா பின்த் சுஹைல் என்ற பெண்மணி அல்லாஹ்வின் தூதரிடதிலே வந்து அல்லாஹ்வின் தூதரே ஸாலிம் (ரலி) எங்கள் வீட்டிற்கு வந்து போய் இருப்பதை அபு ஹுதைபாவாகிய என் கணவர் முகத்தில் ஒரு வெறுப்பு தெரிவதை நான் பாக்கிறேன் " வ ஹுவ கலீபுஹூ" அவர் (ஸாலிம்) எங்களோடு இருப்பவர் எனக் கூற அதற்கு இறை தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "அர்லாயி ஹூ" அவர்களுக்கு பாலூட்டி விடுங்கள் எனக்கூற, அத்தகு " அகைபா அர்லீயுஹூ?" அவர்களுக்கு நான் எவ்வாறு பாலூட்டுவது? அவர் பெரியவராயிற்றே? "அஹுவ ராஜுலுன் கபீருன்?" எனக் கேட்க, அதற்கு இறைதூதரவர்கள் சிரித்தார்கள். "கத் அலிம்து அன்னகும் கபீருன்" அவர் பெரிய மனிதர் என்று எனக்கு தெரியும் என்றார்கள்.   [ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் 2636]
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ أَنَّ سَهْلَةَ بِنْتَ سُهَيْلِ بْنِ عَمْرٍو جَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ سَالِمًا - لِسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ - مَعَنَا فِي بَيْتِنَا وَقَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ وَعَلِمَ مَا يَعْلَمُ الرِّجَالُ ‏.‏ قَالَ ‏ "‏ أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِ ‏"‏ ‏.‏ قَالَ فَمَكَثْتُ سَنَةً أَوْ قَرِيبًا مِنْهَا لاَ أُحَدِّثُ بِهِ وَهِبْتُهُ ثُمَّ لَقِيتُ الْقَاسِمَ فَقُلْتُ لَهُ لَقَدْ حَدَّثْتَنِي حَدِيثًا مَا حَدَّثْتُهُ بَعْدُ ‏.‏ قَالَ فَمَا هُوَ فَأَخْبَرْتُهُ ‏.‏ قَالَ فَحَدِّثْهُ عَنِّي أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْنِيهِ ‏.‏
மேலே குறிப்பிட்ட இதே செய்தி கூடுதலாக இங்கே அவர் எங்களோடு தான் வீட்டிலிருந்து வருகிறார், ஸாலிம் என்பவர் அபூஹுதைபாவின் அடிமை என்றும் அவர் சிறு வயது முதல் வாலிப வயதை அடைந்து பிறகு ஒரு ஆணுக்கு தெரிய வேண்டிய அணைத்து விசயங்களும் தெரிந்து கொண்டவர் என சஹ்லா (ரலி) நபிகளிடம் கூறிய போது அவர்கள் "அர்லாயி ஹீ" அவருக்கு பாலூட்டுங்கள் பிறகு அவர் உங்களுக்கு மகரமாகி விடுவார் என கூறுகிறார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம்: 2638]
முஸ்லிம் 2639 , அதே செய்தி இதிலும்.முஸ்லிம் 2640 ,  அதே செய்தி பதிவாகயுள்ளது. மேலும் அபூஹுதைபாவின் முகத்திலிருந்த நெருடல்களை கண்டு நபியிடத்தில் கேட்கப் பட்டபோது அவர் "தாடி வளர்ந்தவராயிற்றே?" என்பதற்கு "அர்லாயி ஹிய்" அவருக்கு பாலூட்டுங்கள் பிறகு இவரின் சஞ்சலம் போய் விடும் என்றார்கள்.
*இங்கே இது பொய்யான ஹதீஸ் என்று கூறுபவர்கள் மறைத்தது...* ஸாலிம் அவர்கள் அபூஹுதைபாவின் அடிமை என்பதை..* ஸாலிம் அவர்களில் வீட்டிலேயே சிறு வயது முதல் வளர்ந்து வந்தவர் என்பது...* ஏதோ மூன்றாவது மனுஷன் வந்துட்டு போனது போல் பேசுவது...
(அறிந்து கொள்ளுங்கள், ஸாலிம் என்பவர் பத்ரு போரில் கலந்து கொண்டவர், ஒரு குரான் ஹாபிஸ்',, இவர் அந்நிய பெண்ணிடம் அடிக்கடி பேசிகொள்கிறாரா........????)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّ سَلَمَةَ أَنَّ أَبَا حُذَيْفَةَ بْنَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ كَانَ تَبَنَّى سَالِمًا وَأَنْكَحَهُ ابْنَةَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَهُوَ مَوْلًى لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ كَمَا تَبَنَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْدًا وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلاً فِي الْجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَوُرِّثَ مِيرَاثَهُ حَتَّى أَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى فِي ذَلِكَ ‏{‏ ادْعُوهُمْ لآبَائِهِمْ ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ ‏}‏ فَرُدُّوا إِلَى آبَائِهِمْ فَمَنْ لَمْ يُعْلَمْ لَهُ أَبٌ كَانَ مَوْلًى وَأَخًا فِي الدِّينِ فَجَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلِ بْنِ عَمْرٍو الْقُرَشِيِّ ثُمَّ الْعَامِرِيِّ - وَهِيَ امْرَأَةُ أَبِي حُذَيْفَةَ - فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا نَرَى سَالِمًا وَلَدًا وَكَانَ يَأْوِي مَعِي وَمَعَ أَبِي حُذَيْفَةَ فِي بَيْتٍ وَاحِدٍ وَيَرَانِي فُضْلاً وَقَدْ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِمْ مَا قَدْ عَلِمْتَ فَكَيْفَ تَرَى فِيهِ فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَرْضِعِيهِ ‏"‏ ‏.‏ فَأَرْضَعَتْهُ خَمْسَ رَضَعَاتٍ فَكَانَ بِمَنْزِلَةِ وَلَدِهَا مِنَ الرَّضَاعَةِ فَبِذَلِكَ كَانَتْ عَائِشَةُ - رضى الله عنها - تَأْمُرُ بَنَاتِ أَخَوَاتِهَا وَبَنَاتِ إِخْوَتِهَا أَنْ يُرْضِعْنَ مَنْ أَحَبَّتْ عَائِشَةُ أَنْ يَرَاهَا وَيَدْخُلَ عَلَيْهَا وَإِنْ كَانَ كَبِيرًا خَمْسَ رَضَعَاتٍ ثُمَّ يَدْخُلَ عَلَيْهَا وَأَبَتْ أُمُّ سَلَمَةَ وَسَائِرُ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ يُدْخِلْنَ عَلَيْهِنَّ بِتِلْكَ الرَّضَاعَةِ أَحَدًا مِنَ النَّاسِ حَتَّى يَرْضَعَ فِي الْمَهْدِ وَقُلْنَ لِعَائِشَةَ وَاللَّهِ مَا نَدْرِي لَعَلَّهَا كَانَتْ رُخْصَةً مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم لِسَالِمٍ دُونَ النَّاسِ 
http://sunnah.com/abudawud/12/16

சூனன் அபூதாவூத்.-1764 :::நீண்ட சஹீஹான ஹதீஸ், இதில் இந்த சம்பவம் எந்த வருடம், எந்த காலகட்டத்தில் என்பன போன்ற எல்லா செய்திகளையும் தாங்கி வருகிறது...
* ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு...!!! இந்த ஆண்டில் தான் பர்தா கடமையாக்கப்பட்டது.
* நபிகள் (ஸல்) அவர்களின் வளர்ப்பு பிள்ளையாக இருந்த ஜைது (ரலி) அவர்களுக்கு ஜைனப் (ரலி) அவர்களுக்கும் திருமணம் முடித்து திருப்பி ஜைது (ரலி) அவர்கள் தலாக் விட்ட பிறகு நபி (ஸல்) திருமணம் முடிக்கிறார்கள், இதே 6 ஆம் வர்டத்தில் தான்.
* அபூஹுதைபா (ரலி) அவர்கள் ஸாலிம்(ரலி) அவர்களை சிறு வயது முதலே எவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஜைது (ரலி) அவர்களை வளர்த்தார்களோ அதே போல வளர்த்தார்கள். அந்த ஸாலிமிற்கு அவருடைய சகோதரடுடைய மகளை திருமணம் செய்தும் வைக்கிறார்கள். அவர்கள் ஹிந்து பின் வலீத் என்பவராவார், அவர் அன்சார் பெண்ணுடைய ஒரு அடிமை,
அந்நேரத்தில் இறைவசனம் இறங்கியது எப்போது எனில் ஜைது (ரலி) அவர்களை ஜைது இபுனு முஹம்மத் என்று முஹம்மதின் மகன் என்று தான் அழைப்பார்கள் அச்சமயம் இறைவசனம் இறங்கியது.
(குரான் 33 : 5 ) எந்த ஒரு நபர் ஜாஹிலிய்யா காலத்திலிருந்து ஒரு பிள்ளையை எடுத்து வளர்கிராரோ, அவரை அவரின் உண்மையான தந்தையின் பெயரைக் கொண்டு அழையுங்கள், அப்படி தாய் தந்தையரை அறியவில்லையாயின் அவர்கள் மார்க்கத்தின் சகோதரர்கள் ஆகிவிடிகிரார்கள், என்ற ஆயத்து இறங்கியது.
மேலும் குரான் (24: 31 ) பர்தா வசனமும் இறங்கியது.
சஹ்லா (ரலி) அவர்கள் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் ஸாலிமை எங்கள் பிள்ளையாக பார்த்து வளர்த்து வந்தோம், (கவனிக்க,,,) (அந்நிய வாலிபரா...?? வந்துட்டு போனவரா...??) என் மற்றும் அபூஹுதைபாவாகிய என் கணவருடனான எங்கள் வீட்டில் தங்குகிறார், என்னை வீட்டிலிருக்கும் போது அணிவிக்க கூடிய ஆடையில் என்னை அவர் காண்பார், "அல்லாஹ் குல்லில் லில் முமிநாத்" என்ற வசனம் இறங்கிய பின் இவர் தன் சொந்த பிள்ளையாக இல்லாது இருப்பதினால் எனக்கு கூச்சமாகி விட்டது என நபிகளாரிடம் கேட்க அதற்கு இறை தூதர் (ஸல்) அவர்கள், அப்போது நீங்கள் அவர்களுக்கு பாலூட்டி விடுங்கள் எனக் கூறுவதை கேட்டு விட்டு ஐந்துமுறை பாலை பீச்சினேன், அதன் பிறகு ஸாலிம் என் மகனாகி விட்டார் என்கிறார்கள்.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்:::
* ஸாலிம்(ரலி) சொந்த பிள்ளை போல் வளர்க்கப் பட்டவர்கள்.* வசனம் இறங்கிய உடன் உள்ளம் உறுத்துகின்றது,*பிள்ளையா? அல்லாஹ்வின் வசனமா???அவர் நம்மால் வளர்த்த பிள்ளையாயிற்றே, எங்கே அனுப்புவது?? யோசனைக்கு பின் நபிகளை பார்க்க விரைகிறார்கள்...* மனைவியுடன் கொண்ட சந்தேகதிலா அபூஹுதைபா மனம் கடு கடுத்தார்???
ஒரு போதும் இல்லை, தன் மகன் அல்லாஹ்வின் பர்தா வசனம் இறங்கியபின் தான் இறைவன் முன் குற்றவாளியாக ஆகிவிடுவதை பயந்தார், அந்த பயத்தினால் தான்..!
*இந்த சந்தர்பத்தில் தான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது "பால் கொடுத்திடுங்க" ("அர்லஈஹூ") என்கிறார்கள். பால் கொடுக்கப்படுகிறது, பிறகு நபி (ஸல்) அவர்களே ஸாலிம்(ரலி) பால் குடி பிள்ளையாகி விடுகிறார் என்கிறார்கள்.

வாலிபர் பெண்ணிடம் பால் குடிக்க முடியுமா..?
அம்ரா (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : 'அபூஹுதைபாவின் மனைவியான ஸஹ்லா அவர்கள் நபியவர்களிடம் தனது கணவரின் அடிமையான ஸாலிம் அவர்கள் தன்னிடம் வருவதாக கூறிய போது அவருக்கு பால்கொடுக்குமாறு நபியவர்கள் பணித்தார்கள்.  ஸாலிம் அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட பெரிய ஒருவராக இருந்த நிலையில் ஸஹ்லா அவர்கள் அவருக்கு பால்கொடுத்தார்கள்'.
- ஒரு தடவை பால் குடிப்பதற்கு அளவாக ஒரு பாத்திரத்தில்  ஸாலிம் அவர்கள் பாலை பெறுவார்கள். இவ்வாறு ஐந்துநாட்கள் தொடராக பால்குடித்துவந்தார்கள். அதன் பின்னர் ஸஹ்லா அவர்கள் தலை திறந்திருக்கும் நிலையிலேயே அவர்களிடம் ஸாலிம் அவர்கள் சென்றுவருபவர்களாக இருந்தார்கள். இது நபியவர்கள் ஸஹ்லா (றழி) வழங்கிய சலுகையாக இருந்தது. நூல் : 'தபகாது இப்னி ஸஃத்'  , பக்: 257
Muhammad Ibn ‘Umar told us: Muhammad Ibn ‘Abdullah, Az-Zuhri’s nephew, told us on authority of his father that he said: an amount of one milk drink was collected in a pot or glass, so Salem used to drink it every day, for five days. After this, he used to enter at her while her head is uncovered. This was permission from Messenger of Allah to Sahla bint Suhail.  (Ibn Sa’d, Kitab At-Tabaqat Al-Kabir, Volume 10, page 257. Also, Ibn Hajar, Al-Isabah, Volume 7, page 717)
https://ia800206.us.archive.org/5/items/Tabaqat_Kabir_Ibn_Saad/tisaad10.pdf page 257
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏன் பால் கொடுக்க கூறினார்கள்??ஏன் எனில் அந்த வளர்ப்பு தாய்க்கும் அவர் மகன் ஸாலிமிற்கும் இருந்த தொடர்பு அரவணைப்பை பற்றி நபிகள் அறிந்திருந்ததினால் தான் அவர்களுக்கு நபிகளிடமிருந்து அனுமதி கொடுத்தார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي رَجُلٌ قَاعِدٌ فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِ وَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ أَخِي مِنَ الرَّضَاعَةِ ‏.‏ قَالَتْ فَقَالَ ‏ "‏ انْظُرْنَ إِخْوَتَكُنَّ مِنَ الرَّضَاعَةِ فَإِنَّمَا الرَّضَاعَةُ مِنَ الْمَجَاعَةِ‏"  http://sunnah.com/muslim/17/39
 நபிகள் (ஸல்) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஒரு பால் குடி சகோதரர் உட்காரும் போது நபிகள் முகம் சிவக்கிறது, அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், இவர் என் பால் குடி சகோததர் எனும் போது அவர் ஒரு முழுமையான பால் குடி சகோதரரா? எனும் கேள்வியை வைக்கிறார்களே? அப்படி கேட்ட நபிகள், ஸாலிம் விஷயத்தில் சஹ்லாவிடம் ஏன் கூற வில்லையெனில் சஹ்லா (ரலி) ஸாலிமை தன் பிள்ளையாகவே பாவித்து வளர்த்து வந்தார்கள் என்பது நபிகளுக்கு தெரிந்ததுனால் தான்...!!!
அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்த முறையை அனு மதித்தார்கள்
 இந்த ஹதீஸில் இன்னொரு வாசகமும் வருகிறது--- இதை தவறாக புரிந்தவர்களும் சஹாபாக்களில் ஆயிஷா (ரலி) அவர்களும் அடங்கும்.
باب رَضَاعَةِ الْكَبِير
المقصود بالرضاعة هنا أن تفرغ المرأة لبنها في إناء وترسله للرجل ليشربه وتكرر ذلك خمس مرات وبذلك تحرم عليه.
حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ، خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ قَالَ أَخْبَرَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، أَنَّ أُمَّهُ، زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ أُمَّهَا أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَتْ تَقُولُ أَبَى سَائِرُ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ يُدْخِلْنَ عَلَيْهِنَّ أَحَدًا بِتِلْكَ الرَّضَاعَةِ وَقُلْنَ لِعَائِشَةَ وَاللَّهِ مَا نَرَى هَذَا إِلاَّ رُخْصَةً أَرْخَصَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِسَالِمٍ خَاصَّةً فَمَا هُوَ بِدَاخِلٍ عَلَيْنَا أَحَدٌ بِهَذِهِ الرَّضَاعَةِ وَلاَ رَائِينَا.
ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுவார்கள்: (ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர) நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் எவரும் பால்குடிப் பருவத்தைக் கடந்த ஒருவருக்குப் பால் கொடுத்து ("செவிலித் தாய் - மகன்" என்ற) உறவை ஏற்படுத்தி, அவரைத் தங்களது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும், நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்த முறையை அனுமதித்தார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். (பால்குடிப் பருவத்தைக் கடந்த பின்) பால்குடி உறவை ஏற்படுத்தும் இந்த முறைப்படி யாரும் எங்களது வீட்டிற்குள் வந்ததுமில்லை; எங்களை(த்திரையின்றி)ப் பார்த்துமில்லை" என்று கூறினர். [ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் : 2883  http://www.sunnah.com/muslim/17/38 , http://sunnah.com/abudawud/12/16
***இந்த ஹதீஸிக்கு முதல் ஆதாரம்...!!!! ...ஆய்ஷா (ரலி) அவர்கள் இந்த சட்டத்தை தவறாக விளங்கி இருப்பினும் அதை தெரியாமல் நிறை வேற்ற முற்பட்டது. பிறகு இது மற்ற மனைவிமார்களால் அவருக்கு தெளிவுபடுத்தப் பட்டது.
ஆக இவ்வாறு தெளிவு படுத்தப்பட்ட ஒரு செய்தியை எப்படி அசிங்கமா சொல்றீங்க? என்று கூறி  "Build up " கொடுத்தா அது நியாயமாங்க???
இப்படி அதிகாரபூர்வமான ஹதீஸை தன் ஓர வஞ்சனையால் ஒதுக்கலாமா?
* அபூ ஹுதைபாவிற்கு மன வருத்தமா???
(முஸ்லிம் 2640 )----* நீங்கள் பால் கொடுங்க, பின் அபூஹுதைபாவின் முகத்திலிருந்த வெறுப்பு மாறிவிடும் என்று நபிகள்(ஸல்) சொல்கிறார்கள், உடனே சஹ்லா(ரலி) சொல்கிறார்கள், அல்லாஹ்வின்மீது சத்தியமாக "மா அரப்துஹூ பீ வஜ்ஹிஹீ அபி ஹுதைபா"நான் பால் கொடுத்த பிறகு அபூஹுதைபாவின் முகத்தில் எந்த வெறுப்பையும் அதன் பின் பார்கவில்லை."
وَقُلْنَ لِعَائِشَةَ وَاللَّهِ مَا نَرَى هَذَا إِلاَّ رُخْصَةً أَرْخَصَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِسَالِمٍ خَاصَّةًஆய்ஷா((ரலி)) விடம் சொல்கிறார்கள்,,,வகுல்னலி ஆயிஷா, "வல்லாயி, மா நரா ஹாதா இல்லா ருக்ஷதன் அர்கச ஹுல்லாஹு லிஸாலிமன், காஸ்ஸதன்" இது ஸாலிமிற்கு மட்டும் தான் என்பதை தவிர வேறு எதையும் நாங்கள் கருதவில்லை. நீங்கள் செய்தது தவறு என கூறிவிட்டு, இந்த பால் குடி விசயத்தை வைத்துக் கொண்டு வேரவரும் எங்களிடம் வந்து விட முடியாது என மனைவிமார்கள் கூறுகிறார்கள். ***காசாதன்" என்பது "விதி விளக்கு"...ஸாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இது....!!!!  [முஸ்லிம் 2883]
சரிங்க, எல்லாத்தையும் விடுங்க...இந்த விசயங்களை பாசிடிவா எடுக்கணுமா?  நெகட்டிவா எடுக்கணுமா?.....
ஒரு செய்தியை பார்போம்,, லூத் (அலை) சமூகத்தில் ஆணோடு ஆண் இணையும் கேவலமான நிகழ்ச்சிக்கிடையில் இரு வானவர்கள் அழகிய சிறுவர்கள் வடிவத்தில் வருகிறார்கள், இதை அச்சமூகம் நெருங்க, உடனே லூத் அவர்கள் வெளியே வந்து என்னுடைய விருந்தாளிகளை கேவலப்படுத்த முனையாதீர்கள்,  இதோ, என் பெண்மக்கள் இருக்கிறார்கள் அவர்களை பெற்றுகொன்டு  அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் எனக்கூறினார் [குரான், 11:78-79]

இச் செய்தியை மேலோட்டமாக பார்த்தால் என்ன நினைக்க தோன்றும், விபசாரத்திற்கு அழைக்கிறார் போலும் என்று தோன்றுமா இல்லையா?? (அவ்வாறு இல்லை, அல்லாஹ் காப்பானாக).
இங்கே எவ்வாறு பாசிடிவாக எடுத்து தன் மக்களை மணமுடித்து இறைவனை பயந்து வாழுங்கள் என்று சொன்னார் என்று எடுத்து கொள்கிறோம். அவ்வாறு தான் பால் கொடுத்த விவகாரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, தன் சுய மூளைக்கு சரி வரவில்லை என்று ஒதுக்கி தள்ள கூடாது...!
அல்லாஹ் காப்பாற்றவேண்டும்..!!!
வல்லாஹு அஹ்லம்.!
Note:
PJ Has the same view as this Jew : http://www.answering-islam.org/Shamoun/nursing_of_adults.htm  and it was refuted in  http://www.answering-christianity.com/shamoun-nursing.htm 
Also see : http://islamqa.org/hanafi/daruliftaa/8424

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...