அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
[ஸூரத்துல் அஃராஃப் 7:31]
ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
அப்துர் ரஸ்ஸாக் எனும் நூலில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: "உபை இப்னு கலஃப்(ரலி) அவர்களுக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களுக்கும் ஒரு தடவை விவாதம் ஏற்பட்டது. ஒர் ஆடை அணிந்து தொழுவது மக்ரூஹ் அல்ல; கூடும் என்று உபை(ரலி) கூற, அதற்கு இப்னு மஸ்ஊத்(ரலி), அது ஆடை குறைவாக இருந்த காலத்தில் என்று கூறினார்.
உடனே உமர்(ரலி) அவர்கள் மிம்பரில் ஏறி இவ்வாறு கூறினார்: உபை கூறியதுதான் உண்மை. ஆயினும் இப்ன் மஸ்ஊத் தவறிழைக்கவில்லை.
'அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். சிலர் எல்லா ஆடைகளையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதார்கள். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டை, மேல் போர்வையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் சட்டையும் அணிந்தவராகச் சிலர் தொழுதார்கள். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள். வேஷ்டியும் சட்டையும் என்பதற்குப் பதிலாக வேஷ்டியும் மேல் போர்வையும்' என்று உமர்(ரலி) கூறியதாக நான் நினைக்கிறேன்" என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். (மற்றும் புகாரி :365)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எல்லோரிடமும் இரண்டு ஆடைகள் இருக்கவில்லை
'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டதற்கு, 'உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [ஸஹீஹுல் புகாரி: 358]
ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள் தொழுகைக்காக நிற்கும் போது அவரிடம் இருக்கும் மிகச் சிறந்த ஆடையை அணிந்து தொழுவார். இதை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது இவ்வாறு கூறினார்:
"அல்லாஹ் அழகானவன்! அழகை விரும்முகின்றான்! ஆகவே, என் இறைவனுக்காக என்னை நான் அலங்கரித்துக் கொள்கின்றேன். ஏனெனில், ' தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்!' என்று அவன் கூறியிருக்கின்றான்
தோளை மூடி தொழுதல்
'உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி :359)
பட்டு மற்றும் காவி நிற ஆடையை ஆண்கள் அணிவதற்கு வந்துள்ள தடை.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் காவி நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டபோது, "இவை இறைமறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளவையாகும். எனவே, இதை நீர் அணியாதீர்" என்று சொன்னார்கள். (முஸ்லிம்:4218)
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, காவி நிற ஆடை ஆகியவற்றை அணியவேண்டாம் என்றும், பொன் மோதிரம் அணிய வேண்டாமென்றும், (தொழுகையில்) ருகூஉவில் குர்ஆனை ஓத வேண்டாமென்றும் தடை செய்தார்கள் (முஸ்லிம்:4220)
முஸ்லிம் (கண்ணைக் கவரும்) வேலைப்பாடு மிக்க ஆடை அணிந்து தொழுவது வெறுக்கப் பட்டதாகும் .
963. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடித்ததும்,) இதன் வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்துவிட்டன. எனவே, இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் சேர்த்துவிட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.
வெள்ளை ஆடைகளை அணியுங்கள்
அப்துல்லாஹ் இப்ன் அப்பாஸ்(ரழி) அறிவிக்கின்றார்கள்: "உங்கள் ஆடைகளில் வெள்ளை ஆடைகளை அணியுங்கள். உங்கள் ஆடைகளில் அதுதான் சிறத்ததாகும். உங்களில் இறந்தவர்களுக்கு அதிலேயே
கஃபன் அணிவியுங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதாவூத்: 3878, திர்மிதி:994. இது "ஹஸன் ஸஹீஹ்" என திர்மிதி இமாம் கூறுகிறார்கள் - ரியாழுல் ஸாலிஹீன் 779,780)
அஸ்மா பின்த் யஸித் பின் சகன் அல் அன்சாரியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய முழுநீளச் சட்டையின் கை, மணிக்கட்டு வரை இருந்தது (திர்மிதி: 1687 ஹஸன் கரீப் என இமாம் திர்மிதி கூறுகிறார்கள், அபுதாவூது:4027)