بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
அல்லாஹ்விற்கு இணைவைக்கும் செயலை, நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லாத நூதன செயல்களை தடுக்கும் சொற்களை கூறினால், அவர்களை வஹ்ஹாபி என பட்டம் கெட்டுவர்.
யார் அந்த வஹ்ஹாபி? அவரின் சரிதம் என்ன?
யார் அந்த வஹ்ஹாபி? அவரின் சரிதம் என்ன?
அவரின் முழு பெயர் முஹம்மத் இப்ன் அப்துல் வஹ்ஹாப்.
محمد بن عبد الوهّاب بن سليمان بن علي بن محمد بن أحمد بن راشد بن بريد بن محمد بن مشرف بن عمر بن معضاد بن ريس بن زاخر بن محمد بن علوي بن وهيب بن قاسم بن موسى بن مسعود بن عقبه بن سنيع بن نهشل بن شداد بن زهير بن شهاب بن ربيعه بن أبي سود بن مالك بن حنظله بن مالك بن زيد مناة بن تميم التميمي
அவர் சவூதி அரேபியாவில் நஜ்த் மாநிலத்தில் உஅய்னா என்ற ஊரில் பனூ தமீம். குலத்தில் பிறந்தார்கள். அவர்களின் குடும்பத்திலிருந்து வந்த மார்க அறிஞர்களை ஆல்-அல் ஷேக் (ஷேக்கின் குடும்பத்தவர்) என அழைக்க படுகின்றனர். அவர்களின் குலமான பனூ தமீம் குலத்தை பற்றிய சில ஹதீஸ்கள்.
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لاَ أَزَالُ أُحِبُّ بَنِي تَمِيمٍ بَعْدَ ثَلاَثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهَا فِيهِمْ " هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ ". وَكَانَتْ فِيهِمْ سَبِيَّةٌ عِنْدَ عَائِشَةَ فَقَالَ " أَعْتِقِيهَا فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ ". وَجَاءَتْ صَدَقَاتُهُمْ فَقَالَ " هَذِهِ صَدَقَاتُ قَوْمٍ، أَوْ قَوْمِي ".
ஸஹீஹ் புகாரி 4366.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங்கள் குடிகொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன்.
அவையாவன:
1. 'பனூ தமீம் குலத்தார் தாம் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர்கள்" என்று (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க் கைதி ஒருவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்தார். எனவே, (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், 'அவளை விடுதலை செய்துவிடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் உள்ளவள்" என்று கூறினார்கள்.
3. (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவை 'ஒரு (முக்கிய) சமுதாயத்தின்' அல்லது 'என் சமுதாயத்தின்' தானப் பொருள்கள்" என்று கூறினார்கள்.