Friday, September 8, 2017

தற்செயலாக துவா செய்வதும், ஆமீன் சொல்வது நபி வழியாகும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


ஒருவர் துவா செய்ய , அருகாமையில் உள்ளவர் ஆமீன் கூறுவது, கூட்டு துவா என்கிறோம். கூட்டு துவா என்றாலே பித்அத் என்பது சிலரின் கருத்து. ஒவ்வொரு தொழுக்கு பிறகும் அல்லது எதுக்ககெடுத்தாலும் கூட்டு துவா என்பது பலரின் கருத்து. இரண்டுமே Extreme views . எப்பொழுதாவது, சில தருணங்களில்  துவா செய்வதும், ஆமீன் சொல்வது நபி வழி.

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகு தனித்தனியாகவோ கூட்டாவாக்வோ வழமையாக துவா செய்ததாக எந்த ஆதாரம் இல்லை

எப்பொழுதாவது, சில தருணங்களில் துவா செய்வதும், ஆமீன் சொல்வது நபி வழியாகும் என்பதற்கு சில ஆதாரங்கள்
1. 
நபி (ஸல்) அவர்கள் அனைவரும் மிம்பருக்கு (அருகில்) வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அனைவரும் ஆஜரானோம்.  அப்போது முதல் படியில் ஏறும் போது "ஆமீன்'' என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் "ஆமீன்'' என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும் போதும் "ஆமீன்'' என்று கூறினார்கள். அவர்கள் இறங்கிய உடன் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்று கேட்டோம்.
நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து யார் இரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள் நான் ஆமீன் என்றேன். நான் இரண்டாவதில் ஏறும் போது யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள் நான் ஆமீன் என்று கூறினேன். நான் மூன்றாவதில் ஏறும் போது ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்கள் வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அந்த இருவரும் இவனை சுவர்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறிúன்ன் என்றார்கள்.
நூல் : ஹாகிம் (7256), ஸஹீஹ் இப்ன் குஸைமா: 1786,  ஸஹீஹ் இப்ன் ஹிப்பான் 414, 915, 916

(حديث مرفوع) حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، أنا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي سُلَيْمَانُ وَهُوَ ابْنُ بِلالٍ ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ ، عَنِ الْوَلِيدِ بْنِ رَبَاحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقِيَ الْمِنْبَرَ ، فَقَالَ : " آمِينَ ، آمِينَ ، آمِينَ " ، فَقِيلَ لَهُ : يَا رَسُولَ اللَّهِ ، مَا كُنْتَ تَصْنَعُ هَذَا ؟ ! فَقَالَ" قَالَ لِي جِبْرِيلُ : أَرْغَمَ اللَّهُ أَنْفَ عَبْدٍ أَوْ بَعُدَ دَخَلَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ ، فَقُلْتُ : آمِينَ . ثُمَّ قَالَ : رَغِمَ أَنْفُ عَبْدٍ أَوْ بَعُدَ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا لَمْ يُدْخِلْهُ الْجَنَّةَ ، فَقُلْتُ : آمِينَ . ثُمَّ قَالَ : رَغِمَ أَنْفُ عَبْدٍ أَوْ بَعُدَ ، ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ ، فَقُلْتُ : آمِينَ "


2.
فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَـفِرِينَ
காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக [ஸூரத்துல் பகரா 2:286]
அபூஇஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: முஆத் பின் ஜபன்(ரலி) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதி முடுக்கிம்போது 'ஆமீன்' கூறுவார்கள். இதை இப்ன் ஜரீர்(ரஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [தஃப்ஸீர் இப்ன் கதீர்]

3.
وَقَالَ مُوسَىٰ رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ ۖ رَبَّنَا اطْمِسْ عَلَىٰ أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ
قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا
மூஸா (தன் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன்னுடைய வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரையில், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்" என்று பிரார்த்தித்தார்.
அதற்கு (இறைவன், "மூஸா ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது.  [10:88-89]
மூஸா (தன் இறைவனை நோக்கி)… 
மூஸா(அலை) அவர்கள் பிரார்தனை செய்ய, அவர்களுடைய சகோதரர் ஹாரூன்(அலை) அவர்கள் அமினொ சொல, அல்லாஹ்வும் நித் பிரார்த்தனையை ஏற்றான். “உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது” ..  [தஃப்ஸீர் இப்ன் கதீர்]

4. 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، عَنْ هِلاَلِ بْنِ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلاَةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ إِذَا قَالَ "‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏ ‏.‏ مِنَ الرَّكْعَةِ الآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ 
நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், சுப்ஹ் ஆகிய அனைத்து தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்து ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். இரண்டாவது ரக்அத்தில் ஸமியல்லாஹுலிமன் ஹமிதா என்று அவர்கள் சொல்லும் போது பனூ சுலைம் கிளையினரைச் சார்ந்த ரிஃல், தக்வான் உஸைய்யா ஆகிய கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வார்கள். அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொல்வார்கள். (ஆதாரம்: அபூதாவூத் 1231 ஹஸன் (அல்பானி) ,அஹ்மத் 2610)

5.
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا حَزْمٌ قَالَ‏:‏ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ قُرَّةَ يَقُولُ‏:‏ لَمَّا وُلِدَ لِي إِيَاسٌ دَعَوْتُ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَطْعَمْتُهُمْ، فَدَعَوْا، فَقُلْتُ‏:‏ إِنَّكُمْ قَدْ دَعَوْتُمْ فَبَارَكَ اللَّهُ لَكُمْ فِيمَا دَعَوْتُمْ، وَإِنِّي إِنْ أَدْعُو بِدُعَاءٍ فَأَمِّنُوا، قَالَ‏:‏ فَدَعَوْتُ لَهُ بِدُعَاءٍ كَثِيرٍ فِي دِينِهِ وَعَقْلِهِ وَكَذَا، قَالَ‏:‏ فَإِنِّي لَأَتَعَرَّفُ فِيهِ دُعَاءَ يَوْمِئِذٍ‏.‏
முஆவியா இப்ன் குர்ரா ரஹிமஹுல்ல்லாஹ் கூறுகிறார்கள், "எனது பிள்ளை இயாஸ் பிறந்தபோது நபித்தோழர்கள் சிலரை அழைத்து விருந்தளித்தேன். பிறகு அவர்கள் எனது பிள்ளைக்காக துஆ செய்தார்கள். அதற்கு நான், "நீங்கள் துஆச் செய்தீர்கள். எனவே அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக! இப்பொழுது நான் சில துஆக்களைக் கேட்கிறேன், நீங்கள் ஆமீன் கூறுங்கள்", என்று கூறிவிட்டு குழந்தையின் மார்கம், இன்னும் அறிவு சார்ந்த பல விடயங்களுக்காக நான் துஆச் செய்தேன். நிச்சயமாக அன்றுதான் நான் அந்த விடயத்தில் துஆ உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். [இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் அதப் அல்முஃப்ரத் 1255  ஸஹீஹ் (அல்பானி)]


மேலும் காண்க: https://islamqa.info/en/93757

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...