Monday, October 16, 2017

தொழுகக்கு பிறகு சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

தொழுகக்கு பிறகு எத்துணை முறை சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் கூற வேண்டும்.
பொதுவாக நாம் அறிந்தது 33 தடவை என்று. சிலர் மிக வேகமாக சு சு சு என்று மட்டும் கூறுவதையும் கேட்கலாம்.
1. சுப்ஹானல்லாஹ் -33 முறை அல்ஹம்து லில்லாஹ் -33 அல்லாஹு அக்பர் -33 லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" 1- தடவை
பலன்:: அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே! [ஸஹீஹ் முஸ்லிம் : 1048]
2. சுப்ஹானல்லாஹ்-33 அல்ஹம்து லில்லாஹ்-33 முறை அல்லாஹு அக்பர் -34 [ஸஹீஹ் முஸ்லிம் : 1046]
3. சுப்ஹானல்லாஹ்-33 அல்ஹம்து லில்லாஹ்-33 முறை அல்லாஹு அக்பர் -33 [ஸஹீஹ் முஸ்லிம் : 1044]
பலன்:: உங்களை முந்தி விட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது; உங்களைப் போன்று அவர்களும் செயல்படுத்தினால் தவிர
4. சுப்ஹானல்லாஹ்-25 அல்ஹம்து லில்லாஹ்-25 முறை அல்லாஹு அக்பர் -25 [நஸயி : 1351]
5. சுப்ஹானல்லாஹ்-10 அல்ஹம்து லில்லாஹ்-10 முறை அல்லாஹு அக்பர் -10 [ஸஹீஹ் புகாரி : 6329]

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...