Thursday, March 8, 2018

பள்ளிக்குச் செல்கின்ற போது (கூறப்படும்) துஆ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُوراً، وَفِي لِسَانِي نُوراً، وَفِي سَمْعِي نُوراً، وَفِي بَصَرِي نُوراً، وَمِنْ فَوقِي نُوراً، وَمِنْ تَحْتِي نُورًا ، وَعَنْ يَمِينِي نُوراً، وَعَنْ شِمَالِي نُوراً، وَمِن أَمَامِي نُوراً، وَمِنْ خَلْفِي نُوراً، وَاجْعَلْ فِي نَفْسِي نُوراً، وَأَعْظِمْ لِي نُوراً، وَعَظِّمْ لِي نُوراً، وِاجْعَلْ لِي نُوراً، وَاجْعَلْنِي نُوراً، اللَّهُمَّ أَعْطِنِي نُوراً، وَاجْعَلْ فِي عَصَبِي نُوراً، وَفِي لَحْمِي نُوراً، وَفِي دَمِي نُوراً، وَفِي شَعْرِي نُوراً، وَفِي بَشَرِي نُوراً،" ["اللَّهُمَّ اجْعَلْ لِي نُوراً فِي قَبْرِي.. وَنُوراً فِي عِظَامِي"] ["وَزِدْنِي نُوراً، وَزِدْنِي نُوراً، وَزِدْنِي نُوراً"] ["وَهَبْ لِي نُوراً عَلَى نُور

பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என்  நாவில் ஒளியை ஏற்படுத்துவாயாக , என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக.  எனக்கு கீழிலிருந்தும் ஒளியை ஏற்படுத்துவாயாக.  என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் மனதிலும் ஒளியை  ஏற்படுத்துவாயாக. எனக்கு ஒளியை பெரிதாக்குவாயாக! ஒளியை எனக்குப் பிரம்மாண்டமானதாகவும் ஆக்குவாயாக! எனக்கு ஒளியை நல்குவாயாக!
என்னையே ஒளியாக்கி வைப்பாயாக. என் நரம்பிலும், என் சதையிலும் என் இரத்தத்திலும், என் ரோமத்திலும் என் சருமத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக
என்னுடைய கப்ரில் ஒளியை மற்றும் எலும்புகளில், ஒளியை நீ ஆக்குவாயாக! எனக்கு ஒளியை அதிகமாக்கிடுவாயாக! (மும்முறை). ஒளிக்கு மேல் ஒளியை எனக்கு அன்பளிப்பு செய்வயாக!

[புகாரி:6316, முஸ்லிம்:1399,திர்மிதி: 3419, அதபுல் முஃப்ரத்: 695, பத்ஹுல் பாரீ:11/118]


The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...