அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
சிலர் தமிழ் தாயிக்கள் பெண்கள் காது குத்த கூடாது எனக் கூறுகின்றனர்.
இதற்கு கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாக கொள்கின்றனர்.
ஸஹீஹுல் புகாரி - பாடம் : 82 அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்கள்.119
5931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
பச்சை குத்திவிடும், பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கி விலகியிருங்கள்' (என்பதே அந்த (திருக்குர்ஆன் 59:7 வது) வசனம்).
இதில் காது குத்த கூடாது என எங்கு உள்ளது? “இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள்” என்ற ஹதீஸின் வாக்கியத்தின் அடிப்படையில் இவர்களின் புரிதலின் அடிப்படையில் ஃபத்வா கொடுக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் காதணிகள் அணிந்து தான் இருந்தனர். எப்பொழுதும் நபி( ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவ்வாறாக தடுத்தது இல்லை.
அதற்கான ஆதரங்கள்:
'பெண்களுக்கு (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருதி, பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்' இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். [ஸஹீஹுல் புகாரி :98]
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். [ஸஹீஹுல் புகாரி :964. ,ஸஹீஹ் முஸ்லிம் :1616]
ஆயிஷா(ரலி) அறிவித்தார் : பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.
பதினொன்றாவது பெண் கூறினார்:
என் கணவர் (பெயர்) அபூ ஸர்உஅபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். [[ஸஹீஹுல் புகாரி : 5189]
பெண்கள் காது குத்தி காதணிகள் அணிந்திருந்ததை அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்ததாக எவ்வித அறிவிப்பும் இல்லை! பெண்கள் காது குத்தி காதணிகள் அணிந்திருந்ததைக் கண்ட நபித்தோழர்கள் எவரும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள் என அறிவித்து பெண்களை எச்சரிக்கை செய்ததாகவும் அறிவிப்புகள் இல்லை!
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன். [ஸூரத்துல் ஹஷ்ர் 59:7]
Shaykh Muhammad al-Saalih al-‘Uthaymeen (may Allaah have mercy on him) was asked about piercing a girls’ nose or ear for the sake of beautification.
He replied:
The correct view is that there is nothing wrong with piercing the ear, because one of the aims that is achieved by that is wearing permissible jewelry. It is known that the women of the Sahaabah had earrings that they wore in their ears. The pain is light, and if the piercing is done when the girl is small, it heals quickly.
With regard to piercing the nose, I do not remember that the scholars said anything about it, but it is a kind of mutilation and deforming the appearance as we see it, but perhaps others do not see it that way. If a woman is in a country where putting jewelry in the nose is seen as a kind of adornment and beautification, there is nothing wrong with piercing the nose.
Majmoo’ Fataawa Ibn ‘Uthaymeen (11/ question no. 69).
Shaykh Saalih al-Fawzaan (may Allaah preserve him) said:
There is nothing wrong with piercing the ears of a girl in order to put jewelry in her ears. This is still done by many people, and even at the time of the Prophet (peace and blessings of Allaah be upon him) women used to wear jewelry in their ears and elsewhere without being rebuked for it.
With regard to it hurting the girl, the purpose of it is in her interests, because she needs jewelry, and to adorn herself. Piercing the ears serves a permissible purpose and is allowed because of need. Just as it is permissible to carry out surgery and cauterize her if that is needed on medical grounds, it is also permissible to pierce her ear in order to put jewelry in it, because it is something that she needs, and it is something that does not hurt very much, and does not have a great effect on her.
Fataawa al-Shaykh al-Fawzaan (3/324).
And Allaah knows best.
الصحيح : أن ثقب الأذن لا بأس به ؛ لأن هذا من المقاصد التي يتوصل بها إلى التحلي المباح ، وقد ثبت أن نساء الصحابة كان لهن أخراص يلبسنها في آذانهن ، وهذا التعذيب تعذيب بسيط ، وإذا ثقب في حال الصغر صار برؤه سريعاً .
وأما ثقب الأنف : فإنني لا أذكر فيه لأهل العلم كلاماً ، ولكنه فيه مُثلة وتشويه للخلقة فيما نرى ، ولعل غيرنا لا يرى ذلك ، فإذا كانت المرأة في بلد يعد تحلية الأنف فيها زينة وتجملاً فلا بأس بثقب الأنف لتعليق الحلية عليه .
" مجموع فتاوى ابن عثيمين " ( 11 / السؤال رقم 69 ) .
وقال الشيخ صالح الفوزان – حفظه الله - :
لا بأس بثقب أذن الجارية لوضع الحلي في أذنها ، ومازال هذا العمل يفعله الكثير من الناس ، حتى كان في عهد النبي صلى الله عليه وسلم ، فإن النساء كن يلبسن الحلي في آذانهن وغيرها من غير نكير .
وأما كونه يؤلم الجارية : فالمقصود بهذا مصلحتها ؛ لأنها بحاجة إلى الحلي ، وبحاجة إلى التزين ؛ فثقب الأذن لهذا الغرض مباح ومرخص فيه لأجل الحاجة ، كما أنه يجوز جراحتها للحاجة وكيها للحاجة والتداوي ، كذلك يجوز خرق أو ثقب أذنها لوضع الحلي فيه ؛ لأنه من حاجتها ، مع أنه شيء لا يؤلم كثيراً ، ولا يؤثر عليها كثيراً .