அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
நபி(ஸல்) அவர்களின் பகல் நேரக் கூடுதல் தொழுகைகள்
நபி(ஸல்) அவர்களின் பகல் நேரக் கூடுதல் தொழுகைகள் எவ்வாறு இருந்தன
ஆஸிம் பின் ளம்ரா(ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
நாங்கள் அலீ(ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பகல் நேர(கூடுதல்) தொழுகைகள் குறித்து கேட்டோம். அதற்கு அலீ(ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று நிரந்தரமாக தொழுவதற்கு நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்" என்று கூறினார்கள்.
நாங்கள், "அவ்வாறு தொழுவதற்கு எங்களில் சக்தி உள்ளவர் (அதைக் கடைபிடிக்க வாந்ப்பு இருக்கலாம்)" என்றோம். அப்போது அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், 'அஸர் நேரத்தில் சூரியன் அங்கு (மேற்கே) எந்த அளவுக்கு (உயரமாக) இருக்குமோ, அதே அளவுக்கு இங்கு (கிழக்கே) இருக்கும்போது (காலையில்) இரண்டு ரக்அத்துகள் (இஷராக்) தொழுவார்கள்.
மேலும், "லுஹர் நேரத்தில் சூரியன் அங்கு(மேற்கே) எந்த அளவுக்கு இங்கு (கிழக்கே) இருக்கும்போது (சூரியன் உச்சி சாய்வதற்குமுன்) நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள்.
(திர்மிதி:544 தரம்:ஹஸன்)
இரண்டு ரக் அத்கள் (இஷ்ரக்) தொழுதல்
அனஸ் இப்ன் மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், 'ஒருவர் அதிகாலைத் தொழுகையை ஜமாத்துடன் தொழுதுவிட்டு, சூரியன் உதயமாகும்வரை (அந்த இடத்திலேயே) இறைவனை நினைவுகூர்ந்த வண்ணம் அமர்ந்துவிட்டுப் பிறகு இரண்டு ரக் அத்கள் (இஷ்ரக்) தொழுதால், அவருக்கு ஒரு ஹஜ், ஒர் உம்ராவின் நன்மை போன்றது கிடைக்கும்' என்று கூறினார்கள். (திர்மிதி: 535, இந்த ஹதீஸை ஹஸன் என இமாம் அல்பானி(ரஹி) ஸஹீஹ் திர்மிதியில் கூறுகிறார்கள்)
நபி (ஸல்) அவர்கள் சுப்{ஹத் தொழுகைக்குப் பின் (சூரிய உதயம்வரை) தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள்
சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், 'நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்{ஹத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். (முஸ்லிம்:1188)
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதுவிட்டு தொழுத இடத்திலேயே சூரியன் நன்கு உதயமாகும்வரை அமர்ந்திருப்பார்கள். [ஸஹீஹ் முஸ்லிம்:1189]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்.' இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!' என்று அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவருக்குச் சிறு துடக்கு ஏற்படாமல் இருந்தால். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்வரை அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். (முஸ்லிம்:1175, புகாரி:477,647)