Tuesday, January 29, 2019

மவ்லித் ஓதும் இமாம் பின் தொழலாமா, பித் அத்வாதி இமாம் பின் தொழலாமா

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

மவ்லித் ஓதும் இமாம் பின் தொழலாமா, பித் அத்வாதி இமாம் பின் தொழலாமா?
தவ்ஹீத் சிந்தனை உள்ள சகோதரர்கள் அடிக்கடிக் கேட்கும் கேள்வி தான், மவ்லித் ஓதும் இமாம் பின் தொழலாமா, பித் அத்வாதி இமாம் பின் தொழலாமா என்று? அதற்கான ஆதாரங்கள் என்ன.  ஆதலால் அதற்கான சில ஆதாரங்களையும் தொடர்புடைய சில இடுக்கைகளையும் குறிப்புட விரும்புகிறேன்.

1. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமிடமிருந்து பொதுப்படையான அனுமதி:
ஸஹீஹுல் புகாரி  694. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள்; அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்'. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى الأَشْيَبُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ ‏"‏‏.‏

2. இமாம் புகாரி (ரஹி) இவ்வாறு ஸஹீஹ் புகாரியில் தலைப்பு இடுகிறார்கள்.
ஸஹீஹுல் புகாரி :பாடம் : 56 குழப்பக்காரர், (மார்க்க அடிப்படையற்ற) நூதனக் கருத்துக்கள் உடையவர் (பித்அத் வாதி) ஆகியோர் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது.
 நீ (அவன் பின்னால்) தொழுதுகொள்! அவனுடைய நூதனக் கொள்கை (பித்அத்) அவனுக்கே பாதகமாகும் என்று ஹஸன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
باب إِمَامَةِ الْمَفْتُونِ وَالْمُبْتَدِعِ
وَقَالَ الْحَسَنُ صَلِّ وَعَلَيْهِ بِدْعَتُهُ.

தலைப்பு இட்டு கீழ்கண்ட ஹதீஸை பதிவிடுகிறார்கள்:
695. உபைதுல்லா இப்னு அதீ கூறினார்:
உஸ்மான்(ரலி) முற்றுகையிடப் பட்டிருந்தபோது, நான் அவர்களிடம் சென்று 'நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிற இமாமாக இருக்கின்றீர்கள். உங்களின் மீது சோதனை ஏற்பட்டிருப்பதை காண்கிறோம். இந்நிலையில் எங்களுக்குக் குழப்பம் விளைவிக்கிறவர். இமாமாகத் தொழுகை நடத்துகிறார். அதனால் நாங்கள் மனவேதனை அடைகிறோம்' என்று கூறினேன். அதற்குத் தொழுகை, மக்கள் செய்கிற செயல்களில் மிகச் சிறந்த செயலாகும். மக்கள் அதை அழகான முறையில் செய்யும்போது நீயும் அவர்களோடு தொழு. அவர்கள் அதில் தவறிழைக்கிறபோத அத்தவறுகளைவிட்டும் நீ ஒதுங்கிக் கொள்' என உஸ்மான்(ரலி) கூறினார்.
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ لَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ خِيَارٍ، أَنَّهُ دَخَلَ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ ـ رضى الله عنه ـ وَهْوَ مَحْصُورٌ فَقَالَ إِنَّكَ إِمَامُ عَامَّةٍ، وَنَزَلَ بِكَ مَا تَرَى وَيُصَلِّي لَنَا إِمَامُ فِتْنَةٍ وَنَتَحَرَّجُ‏.‏ فَقَالَ الصَّلاَةُ أَحْسَنُ مَا يَعْمَلُ النَّاسُ، فَإِذَا أَحْسَنَ النَّاسُ فَأَحْسِنْ مَعَهُمْ، وَإِذَا أَسَاءُوا فَاجْتَنِبْ إِسَاءَتَهُمْ‏.‏ وَقَالَ الزُّبَيْدِيُّ قَالَ الزُّهْرِيُّ لاَ نَرَى أَنْ يُصَلَّى خَلْفَ الْمُخَنَّثِ إِلاَّ مِنْ ضَرُورَةٍ لاَ بُدَّ مِنْهَا‏.‏

696. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
'உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர் சொல்வதைக் கேட்டு நடங்கள்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
'பேடியை (ஆணும் பெண்ணுமற்றவர்) பின்பற்றி அவசியமேற்பட்டால் தவிர தொழக் கூடாது' என ஸுஹ்ரி கூறுகிறார்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي ذَرٍّ ‏ "‏ اسْمَعْ وَأَطِعْ، وَلَوْ لِحَبَشِيٍّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ ‏"

3.
 நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபுதுல்லாஹ் இப்ன் உமர்
(ரலி) அறிவிக்கிறார்கள்,
" எவர் "உண்மையில்  வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்மல" என்று கூறுகிறாரோ அவர் பின்னால் தொழுங்கள், எவர், "உண்மையில்  வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்மல"  என்று கூறுவாரோ அவருக்கு  இறுதி தொழுகை நடத்துன்க்கள். [தாரகுத்னீ :1737]

1737 \ 3 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا أَبُو عَمْرٍو مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَصْرِيُّ بِحَلَبَ ، ثَنَا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ ، ثَنَاعُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " صَلُّوا عَلَى مَنْ قَالَ لَا إِلَهَ إلََّا اللَّهُ وَصَلُّوا خَلْفَ مَنْ قَالَ لَا إِلَهَ إلََّا اللَّهُ "
4. ஸஹாபாக்களின் செயல்கள்
ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்  ஒரு கொடுங்கோளனானகவும், குழப்பவாதியாகவும் இருந்தார். இருப்பினும் அப்துல்லாஹ் இப்ன் உமர்(ரலி), அனஸ் இப்ன் மாலிக் (ரலி) அவரின் பின்னால் தொழுதுள்ளார்கள்.

ஸுபைர் இப்னு அதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். [
புகாரி  7068]

ஸயீத் இப்னு ஜுபைர் அறிவித்தார்: இப்னு உமர்(ரலி) உடைய பாதத்தின் மையப் பகுதியில் அம்பு தாக்கி அவர்களின் பாதம் வாகனத்துடன் ஒட்டிக் கொண்ட சமயத்தில் நான் அவர்களுடன் இருந்தேன். நான் (கீழே) இறங்கி அதைப் பிடுங்கினேன். இது மினாவில் இருந்தபோது நடந்தது.
இச்செய்தி ஹஜ்ஜாஜு(பின் யூஸுஃபு)க்குக் கிடைத்து அவர் நோய் விசாரிக்க வந்தார். 'உம்மைத் தாக்கியவர் யாரென்று தெரிந்தால் (நடவடிக்கை எடுப்போம்)' என்று அப்போது குறிப்பிட்டார்.
அதற்கு இப்னு உமர்(ரலி) 'நீர் தாம் தாக்கினீர்' என்றார்கள். 'அது எப்படி?' என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். 'ஆயுதம் கொண்டு செல்லக் கூடாத நாளில் நீர் தாம் ஆயுதம் தரித்தீர்! ஹரம் எல்லையில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படக் கூடாது என்ற நிலையில் நீர் ஹரம் எல்லையில் ஆயுதங்களை நடமாட விட்டீர்' என்று இப்னு உமர்(ரலி) குறிப்பிட்டார். [
புகாரி  966]

அபூஸயீதில் குத்ரி(ரழி) அவர்கள் பெரும்குழப்பவாதியாக இருந்த'மர்வான்'என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகைதொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும் மற்றும் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ முதலியோரும் தமது நூல்களில்வெளியிட்டுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்கள் காலத்தில் இப்னு உமர்(ரழி)அவர்கள் கஷ்பிய்யா,காரிஜிய்யா ஆகிய பெரும் குழப்பவாதிகளுக்குப் பின்னால்,அவர்கள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள்.


وفي صحيح البخاري أن عبد الله بن عمر رضي الله عنهما كان يصلي خلف الحجاج بن يوسف الثقفي وكذا أنس بن مالك ، وكان الحجاج فاسقًا ظالمًا. وفي صحيحه أيضًا أن النبي صلى الله عليه وسلم قال:  يصلون لكم فإن أصابوا فلكم وإن أخطئوا فلكم وعليهم  ، وعن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال:  صلوا خلف من قال لا إله إلا الله، وصلوا على من قال: لا إله إلا الله  أخرجه الدارقطني من طرق وضعفها.

4. ஷைக் அல்பானி (ரஹி) சுஃபி கொள்கையில் இருந்த இமாமிற்கு பின் தொழுதுள்ளார்கள்.
ஷைக் அல்பானி கூறுகிறார்கள்: ஷிர்க் பல வகை படும். அவற்றில் ஒன்று ஷிர்க் கல்பி - அதாவது இதையத்தில் நம்புவது, மற்றொன்று ஷிர்க் லஃப்தி (நாவினால் மட்டும் மொழிவது). ஒருவர் ஷிர்க் செய்தால் அவரிடம், அதை பற்றி தீர விசாரிக்க வேண்டும். அவரிடம் பதில் கோர வேண்டும். அவருக்கு ஆதாரங்களை தெளிவாக்க வேண்டும். அவ்வாறு செய்தும் அவர் அதில் மூழ்கி இருந்த்தால் அவரை ஒதுக்க வேண்டும். [அல்பானி (ரஹ்) அல் ஹூதா வன் நூர்:574.]


5. ஃபத்வாக்கள்:
1. சவூதி அரபியாவின் அல்-இஃப்தா
3. Praying Behind the People of Innovation By Sheik Albani (Rah) https://thealbaanisite.com/category/methodology-2/praying-behind-the-people-of-innovation/

4. ஷைக் ஆஸிம் அல்-ஹகீம் https://www.youtube.com/watch?v=L0lJOAfhafM

5.  மவ்லித் ஓதுபவர் முஷ்ரிக்கா - பிஜெ https://www.youtube.com/watch?v=NXpzNcM7BVM

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...