Thursday, August 20, 2020

திக்ர் என்பது மணதிற்கு மட்டுமில்லை, உடலுக்கும் சிறந்தது

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 

ஸஹீஹ் முஸ்லிம் - 5273 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து முறையிட்டார். அப்போது போர்க் கைதிக(ளான அடிமைக)ள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். ஆகவே, (தம் பணிகளில் தமக்கு உதவ அடிமையொருவரைக் கேட்பதற்காக) நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணமுடியவில்லை. (எனவே,) ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, (தாம் வந்த நோக்கத்தை)த் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்த விவரத்தைத் தெரிவிக்கவே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியே இருங்கள்" என்று கூறிவிட்டு, எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். எனது நெஞ்சின் மீது அவர்களது பாதம் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணர்ந்தேன் (அந்த அளவுக்கு அவர்கள் எங்களிடையே நெருக்கமாக அமர்ந்தார்கள்).

பிறகு அவர்கள், "நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்" (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும் சொல்லுங்கள். அது உங்கள் இருவருக்கும் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.



இந்த ஹதிஸிலிருந்து நாம் கற்கும் பாடம்:

1. திக்ர் செய்வதின் சிறப்பை இந்த ஹதீஸ் உணர்துகிறது. திக்ர் என்பது மணதிற்கு மட்டுமில்லை, உடலுக்கும் சிறந்தது என அறியமுடிகிறது.

2. படுக்கைக்குச் செல்லும்போது, சுப்ஹானல்லாஹ் - 33, அல்ஹம்து லில்லாஹ் - 33 , அல்லாஹு அக்பர் - 34 தடவைகள் கூற வேண்டும். இதை நபி(ஸல்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்டதில்லை எனவும், ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூட ஓதாமல் இருந்ததில்லை எனவும் அலி(ரலி) அவர்கள் கூறியதாக மேலே கூறப்பட்ட ஹதீஸில் கூடுதல் தகவலாக, அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

3. பிள்ளைகளின் மீது அக்கறை உள்ள ஈமானிய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் இம்மை நலனைவிட மறுமைக்கு தேவையானதை கொடுப்பதிலும், மறுமை நலனின் மீதும் அக்கறை செலுத்துவார்கள். 

4. பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது ஊர் வழக்கமாக இருந்தால் அவ்வாறு செய்யட்டும். இதை இமாம் தபரி கூறுகிறார்கள்.

5. உடல் சோர்வு, மணச்சோர்வு குறித்து முறையிடுவது எந்த தவறும் இல்லை. ஏன் நபி மூஸா(அலை) அவர்களே தன் பணியாளரிடம், "இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்" என்று கூறினார்கள் [ஸூரத்துல் கஹ்ஃபு 18:62]

6. ஃபாத்திமா(ரலி), ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, (தாம் வந்த நோக்கத்தை)த் தெரிவித்தார்.இதன் மூலம் ஃபாத்திமா(ரலி) ஆயிஷா (ரலி) வின் மீது இருந்த தோழமை, நம்ம்பிக்கை ஆகியவற்றை உண்ர முடிகிறது. அதைப்போல நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்த விவரத்தைத் தெரிவித்தார்கள். 

7. விவரத்தைத் அறிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களின் வீட்டிற்கு விறைந்ததும், அவர்கள் மகளின் மீது வைத்திருந்த பாசத்தை அறிய முடிகிறது. 

8. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கும், ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கும் நடுவில் படுக்கையில் அமர்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பாதம், அலி(ரலி) அவர்களின் நெஞ்சின் மீது பட்டது. இதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் தன் மருமகண் மீது உள்ள நெருக்கத்தை அறியலாம். 

9. பெற்றோர் வயோதிகம் எட்டியதால், பிள்ளைகள் தான் பெற்றோரை காணச் செல்லவேண்டும் என்பதில்லை. முக்கியமான விடயம் என்றால், பெற்றோரும் பிள்ளைகளை காணச் செல்லலாம். 

10. வீட்டு வேலைகளின் சுமைகளை குறைக்க மணைவி வீட்டு வேலையாட்களை கேட்பது அவர் உரிமையாகும். 



The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...