بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ஜூம்ஆ உரை நிகழ்த்துவதற்கு இமாம் வருகை தரும் போது, முஅத்தின்கையிலே அஸாவை ஏந்தியவாறு பின்வரும்செய்தியை சப்தமிட்டு கூறுவார்:
“முஸ்லிம்களே!அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! நபி (ஸல்) அவா்கள் கூறியசெய்தியை அபுஹூரைரா (ரலி) அவா்கள் அறிவிக்கிறார்கள். இது புகாரி,முஸ்லிம் என்ற ஹதீஸ் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூம்ஆ தொழுகை என்பது ஏழைகளுக்கு ஹஜ்ஜாகவும், மிஸ்கீன்களுக்கு பெருநாளாகவும் இருக்கின்றது. இதில் ஓதப்படும் குத்பா இரண்டு ரக்அத்துகளுக்கு சமமானது. இமாம் உரை நிகழ்த்த மிம்பரில் ஏறிவிட்டால் யாரும் பேசவோ, சைகையும் செய்யக்கூடாது கூட செய்யக் கூடாது என்றும், அதை யாராவ்து அனுசரிக்கவில்லை என்றால் அவர் ஜூம்ஆ தொழுகையை பூரணமாக வீனாக்கிவிட்டார்கள் என்றும் அரிவிக்கபடுகிறது"
الجمعة حج المساكين وعيد المؤمنين الخطبتان تقومان مقام ركعتين من الفرض فإذا ارتقى الخطيب على المنبر فلا يتحدثن أحدكم ومن تحدث فقد لغا ومن لغا فلا جمعة له
இந்த ஹதீஸை பற்றி உண்மை நிலை:
இப்படி ஒரு ஹதீஸ் புகாரி மற்றும் முஸ்லிமில் காணப்படவில்லை. மாறாக இதன் பொருளுடைய ஹதீஸ்கள் காணப்படுகின்றன.
வெள்ளிக்கிழமை, முஸ்லிம்களின் பெருநாள்
حَدَّثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ غُرَابٍ، عَنْ صَالِحِ بْنِ أَبِي الأَخْضَرِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ، جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ. فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ. وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ. وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ " .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருக்கின்றது. எனவே ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும், நறுமணம் பூசிக் கொள்ளட்டும், மிஸ்வாக் செய்து கொள்ளட்டும்
இதை இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு மாஜா:1098 இதை அல்பானி (ரஹ்) ஸஹீஹ் இப்னு மாஜாவில் ஹஸன் எனக் கூறுகிறார்கள்)
இப்ன் அல்-கய்யூம் (ரஹி) வெள்ளிக்கிழமையின் சிறப்புகளை கூறும்போது:
பதிமூண்று: இது ஒவ்வொரு வாரமும் வரும் பெருநாளாகும்
(ஜாத்-அல்-மஆத் 1/369)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும். (ஸஹீஹ் முஸ்லிம் :1549,1550,1551, 1552)
நல்ல ஆடைகளை அணிவது
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ زُهَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ خَطَبَ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ فَرَأَى عَلَيْهِمْ ثِيَابَ النِّمَارِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَا عَلَى أَحَدِكُمْ، إِنْ وَجَدَ سَعَةً، أَنْ يَتَّخِذَ ثَوْبَيْنِ لِجُمُعَتِهِ، سِوَى ثَوْبَىْ مِهْنَتِهِ " .
ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் நபி ஸல் அவர்கள் ஜூம்ஆவில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள் அப்போது தோழர்களின் கம்பளி ஆடைகள் அணிந்திருப்பதை பார்த்தார்கள் அப்போது உங்களில் ஒருவர் வசதி வாய்ப்பை பெற்றிருந்தால் ஏனைய நாட்களில் பணிக்காக பயன்படுத்தும் ஆடையை விட்டுவிட்டு ஜும் ஆ தொழுகைக்கு என இரண்டு ஆடைகளை அணிந்து கொள்வதில் எத்தவறும் இல்லை எனக் கூறினார்கள்
(இப்னு மாஜா:1096,1097 - ஹஸன், தாருஸ்ஸலாம்)
சொற் பொழிவு நிகழ்த்தும்போது மௌனமாக இருப்பது
ஸஹீஹுல் புகாரி பாடம் : 36 வெள்ளிக்கிழமை இமாம் சொற் பொழிவு நிகழ்த்தும்போது மௌனமாக இருப்பது ஒருவர் தமக்குப் பக்கத்திலிருப்பவரிடம், "மௌனமாக இரு" என்று கூறினாலும் அவர் வீண் பேச்சே பேசுகிறார். இமாம் உரையாற்றும்போது வாய்மூடி மௌனமாக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் பாடம் : 3 வெள்ளிக்கிழமை சொற்பொழிவின் போது மௌனமாக இரு(ந்து காது தாழ்)த்தல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ "மௌனமாக இரு" என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி 934, ஸஹீஹ் முஸ்லிம் 1541,1542)