بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1. பருவ வயது அடையாத குழந்தை சுவனப் பூங்காவில் நபி இப்ராஹீம்(அலை) அவர்களிடன் இருக்கும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: ....
பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், "இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)" என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்" என்று பதிலளித்தார்கள் (ஸஹீஹ் புகாரி 7047)
2. அவர்களின் பெற்றோர் காக்கும் பொருமைக்காக அவருக்கு சுவனத்தில் வீடு அமைக்கப்படும்
அபு மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவிக்கிறார்கள்:
ஒரு அடியானின் குழந்தை இறந்துவிட்டால், அல்லாஹ் தன் வானவர்களிடம்,
"என் அடியானின் குழந்தையைக் கைபற்றி விட்டீர்களா?" என்று கேட்பான். "ஆம் என்று அவர்கள் கூறுவார்கள்.
"என் அடியானின் இதையக் கனியை கைபற்றி விட்டீர்களா?" என்று கேட்பான். "ஆம்" என்பார்கள்.
"என் அடியான் என்ன கூறினான்" என்று கேட்பான். "உன்னை அவர் புகழ்ந்தார்". 'இஸ்திராஜ் (இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்) என்று கூறினார்" என்பார்கள்.
உட்னேயே அல்லாஹ், "சொர்கத்தில் என் அடியானுக்காக ஒரு வீட்டைக் கட்டுங்கள். அதற்கு "பைத்துல் ஹம்த்" (புகழுக்குரிய வீடு) என பெயரிடுங்கள்" என்பான்.
(திர்மிதி - 942 ஷைக் அல்பானி இதை ஹஸன் எனக் கூறுகிறார்கள் அல்-ஸில்ஸிலாஹ் அஸ்-ஸஹீஹாஹ் 1408)
3. "குழந்தைகள், சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவர்.அக்குழந்தைகளில் ஒன்று தனது தந்தையை, அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை, அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும். -(அபூஹஸ்ஸானே!) நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று- பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது; அல்லது விலகாது" என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 5132)