بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ஸஹீஹுல் புகாரி பாடம் : 7 தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் ஒருவர் விரும்புவது இறைநம்பிக்கை யின் ஓர் அம்சம் ஆகும்.
13. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்பு வதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.
நாம் விரும்புதை பிறருக்கு விரும்முவது போல், நாம் விரும்மாதை பிறருக்கு விருப்பாததும் ஈமானின் பகுதியாகும். ஆம் நோயை யாரும் விரும்புவத்ல்லை. தும்மலும், இருமலும் கொராணா போண்று தொற்று வியாதி தான் என விஞ்யானம் கூறுகிறது. இருப்பினும் தும்மல், இருமல் வரும் ஒருவர் வயை மூடுவதில்லை என்பதும், அவருடைய நோயை பிறருக்கும் பறப்புகிறார் என்று என்னுகையில் வருத்தமாக உள்ளது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا عَطَسَ غَطَّى وَجْهَهُ بِيَدِهِ أَوْ بِثَوْبِهِ وَغَضَّ بِهَا صَوْتَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் தும்மும் போது தமது கையாலோ, அல்லது தம் கையிலுருக்கும் துணியாலோ தன் வாயில் வைத்துக் கொள்வார்கள். தமது குரலை தாழ்த்துக்கொள்வார்கள் (திர்மிதி:2666, அபுதாவூத்:5029)
சட்டம்:
தும்மும் போது தும்மும் சப்தத்தை குறைத்து அல்ஹம்துலில்லாஹ் என்ற சப்தத்தை உயர்தவேண்டும். அந்நேரம் மூக்கிலிருந்து அழுக்கு, கிருமிகள் வெளிவந்து பக்கத்திலிருப்பவர்களைத் துண்பத்துக்குள்ளாக்காமலிருக்க முகத்தை கையாலோ, துணியாலோ மூடிக்கொள்வது நல்ல பண்பாகும். வலப் புறமோ, இடப் புறமோ திரும்மக் கூடாது. அதனால் தும்மியவருக்கு உடலில் வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பக்கத்தில் பாதிக்க வாய்ப்புண்டு. (அல்ஹாஃபிழ் இப்னுல் அரபீ)