بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
நபி (ஸல்) அவர்கள், சல்மான் அல்ஃபாரிஸீ (ரலி) அவர்களையும் அபுத் தர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று அவரிடம் சல்மான் கேட்டார்.
அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், ‘‘உங்கள் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை” என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் அங்கு வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், ‘உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, ‘‘நான் நோன்பு நோற்றிருக் கிறேன்” என்றார். சல்மான், ‘‘நீர் உண்ணாமல் நான் உண்ணமாட்டேன்” என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவு வந்ததும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் (தொழுவதற்கு) எழுந்திருக்கப் போனார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், ‘உறங்குவீராக!’ என்று கூறியதும் அபுத்தர்தா உறங்கினார்கள்.
பின்னர் (சிறிது நேரத்தில் மீண்டும் தொழுவதற்காக) அபுத்தர்தா எழுந்திருக்கப்போனார். அப்போதும் சல்மான், ‘உறங்குவீராக!’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், ‘‘இப்போது எழுவீராக!” என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், ‘‘நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவீராக!” என்று கூறினார்கள்.
பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த
விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘சல்மான் உண்மையையே
கூறினார்” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 1968)
நீச்சல்
التخريج : أخرجه النسائي في ((السنن الكبرى)) (8940)، والبزار كما في ((مجمع الزوائد)) للهيثمي (5/272)، والطبراني (2/193) (1785) باختلاف يسير
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் நிணைவுகூர்தல் இல்லாத அனைத்தும் வீண்விளையாட்டுகளே; நான்கை தவிர; ஒருவர் தம் இல்லாளோடு விளையாடுதல், குதிரையேற்ற பயிற்சி, ஓட்டப்பந்தயம், நீச்சல் ஆகியவையாகும். (நஸயீ அவர்களின் சுனன் அல்-குப்ரா (8889) அல்பானியின் ஸஹீஹ் 315, திர்மிதி:1561)
சுற்றுலா செல்லுதல்
நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள், அவர் (காட்டிலுள்ள கனிகளை) நன்கு புசித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார், நிச்சயமாக, நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருக்கிறோம்' என்று கூறினார்கள் (12:11,12)பாடம்:
சுற்றுலா செல்வதால் நன்மைகள், விளையாடலாம் புசிக்கலாம். சிறு பிள்ளைகளை அவ்வாறு அழைத்துச் செல்வது நலமாக இருக்கும்.
அனுமதிக்கப்பட்ட ஆடல்
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَبَّاحٍ الْبَزَّارُ، قَالَ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ عَبْدِ اللَّهِ ابْنِ سُلَيْمَانَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسًا فَسَمِعْنَا لَغَطًا وَصَوْتَ صِبْيَانٍ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا حَبَشِيَّةٌ تُزْفِنُ وَالصِّبْيَانُ حَوْلَهَا فَقَالَ " يَا عَائِشَةُ تَعَالَىْ فَانْظُرِي " . فَجِئْتُ فَوَضَعْتُ لَحْيَىَّ عَلَى مَنْكِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلْتُ أَنْظُرَ إِلَيْهَا مَا بَيْنَ الْمَنْكِبِ إِلَى رَأْسِهِ فَقَالَ لِي " أَمَا شَبِعْتِ أَمَا شَبِعْتِ " . قَالَتْ فَجَعَلْتُ أَقُولُ لاَ لأَنْظُرَ مَنْزِلَتِي عِنْدَهُ إِذْ طَلَعَ عُمَرُ قَالَ فَارْفَضَّ النَّاسُ عَنْهَا قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لأَنْظُرُ إِلَى شَيَاطِينِ الإِنْسِ وَالْجِنِّ قَدْ فَرُّوا مِنْ عُمَرَ " . قَالَتْ فَرَجَعْتُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்ககள் உட்கர்ந்திர்ந்தார்கள். அந்நிலையில் ஆரவாரத்தையும், சிறுவர்களின் ஓசையையும் கேட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அங்கு அபிசீனிய பெண்ணொருத்தி ஆடிக் கொண்டிருந்தாள். சிறுவர்கள், அவளைச் சுற்றி நின்று (வேடிக்கை பார்த்துக்) கொண்டிருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், "ஆயிஷாவே! (இங்கு) வந்துபார்" என்று கூறினார்கள். உடனே நான் (அங்கு) சென்றேன். எனது முகவாய்க் கட்டையயை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் தோள்பட்டைக்கும் தலைக்கும் மத்தியிலிருந்து அவளைப் பார்க்கலானேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், "மனநிறைவு கொண்டாயா? மனநிறைவு கொண்டாயா?" எனக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் என்மீது கொண்டிருக்கும் (உயர்ந்த) அந்தஸ்தையும் நேசத்தையும் பார்க்கும் நேரத்தில் "இல்லை" என்று கூறினேன். அந்நிலையில் திடீரென உமர்(ரலி) அவர்கள் அங்கு வருகை தந்தார்கள். உடனே அங்கிருந்த மக்கள் அவளை விட்டும் பிரிந்து கலைந்து சென்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்கள் உமரைப் பார்து விரண்டோடிய காட்சியை நான் காண்கின்றேன்" என்றியம்பினார்கள். உடனே நானும் அங்கிருந்து திரும்மி வந்துவிட்டேன். (திர்மிதி 3614)
உமர்(ரலி) அவர்களின் மீது மக்கள் கொண்டிருந்த அச்சம் கலந்த மரியாதையின் காரணமாக அவளை விட்டும் பிரிந்து சென்றனர். அந்த நிகழ்வு கேளிக்கையாகவும், வீண்விளையாட்டாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, நபி(ஸல்) அவர்கள், "ஜின் மற்றும் மனிதர்களிலுள்ள ஷைத்தான்கள் விரண்டோடியதை நான் காண்கின்றேன்" என்று கூறினார்கள் போலும். அதில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது எனினும் அது ஹராமானதாக தடை செய்யப்பட்டதாக இல்லை. இல்லாவிட்டால் நபி(ஸல்) அவர்கள் எப்படி தாமும் கண்டு, ஆயிஷா(ரலி) அவர்களையும் கான அனுமதித்திருப்பார்கள்.(துஹ்ஃபதுத்துல் அஹ்வதி)
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ كَانَتْ الْحَبَشَةُ يَزْفِنُونَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَرْقُصُونَ وَيَقُولُونَ مُحَمَّدٌ عَبْدٌ صَالِحٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَقُولُونَ قَالُوا يَقُولُونَ مُحَمَّدٌ عَبْدٌ صَالِحٌ
12131
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்:
அபிஸீனியர்களில் சிலர் நபி(ஸல்) முன்னிலையில் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்கள், "முஹம்மது ஸாலிஹான அடிமை" எனக் கூறினார்கள். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் வினவினார்கள். அதற்கு அவர்கள், "முஹம்மது ஸாலிஹான அடிமை" எனப் பதிலுரைத்தார்கள். (முஸ்னத் அஹமத் -12131)
குறிப்பு:
அங்க அசைவுகளையும், உடல் திரட்சியையும் மற்றவர்களுக்குக் காட்டுவது கலை என்றால் அந்தக் கலையில் இஸ்லாத்திற்கு உடன்பாடு கிடையாது.
அதை போன்று ஆண் பெண் கலப்பு, இசை, அருவருப்பான நடனங்கள், கடமையான ஆடைகளை கலைதல் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்கிறது.
அனுமதிக்கப்பட்ட பாடல்
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக்கொண்டிருந்த காலித் பின் தக்வான் (ரஹ்) அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பதுபோல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ர் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்லிக்கொள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி :4001)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் நடந்த) "புஆஸ்" எனும் போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
-(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?" என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்), அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1619,1622)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே!” என்றார்கள்.(ஸஹீஹுல் புகாரி : 5162)
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)" என்றேன். "பாடு" என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு" என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு"என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன். (ஸஹீஹ் முஸ்லிம்:4540)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்திய செய்தியை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 2868, 2869, 2870, 7336)
நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் நடத்திய போது நான் அவர்களை முந்தி விட்டேன். சில காலம் கழித்து எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்ட போது மீண்டும் ஓடினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை முந்தி விட்டு, அதற்கு இது சரியாகி விட்டது என்றார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
விளையாட்டுகள்
அம்பெய்தல்
"(இறைநம்பிக்கையாளர்களே!) உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தையும் குதிரைப் படையையும் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்திருங்கள். அதன்மூலம், அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்களின் பகைவர்களையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். " (8:60)
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம் பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை, நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள்.அப்போது இரு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்திக்கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி: 2899)
"பலத்தையும் குதிரைப் படையையும் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்திருங்கள்" என்ற அல்லாஹூத்தஆலாவின் கட்டைளையிலிருந்து, இந்த விளையாட்டுக்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறுபடும் எனத் தெரிகிறது.
பாடம் : 69 பள்ளிவாச-ல் ஈட்டி வீரர்கள் (வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாச-ல் நின்றுகொண்டிருப்பதையும் அப்போது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் (வீரவிளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருப்பதையும் நான் பார்வையிட்டேன்.
அவர்களின் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியால் (மற்றவர்கள் என்னைப் பார்க்காத வகையில்) மறைத்துக் கொண்டி ருந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி: 454, 455, 950, 988, 2907, 3530, 5190)
குதிரை போட்டி
ஓட்டப் பந்தயம்
https://www.islamweb.net/en/fatwa/81604/ruling-on-dancing