Thursday, March 28, 2024

தொழுகையில் திருட்டு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் 


1. அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் :
ஒரு முறை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “திருட்டால் மிக மோசமான திருடன் தனது தொழுகையிலே திருடுபவன்தான்” என்றார்கள். அதற்கு (சஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எவ்வாறு தனது தொழுகையில் திருட முடியும்? என்று கேட்க, அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவன் தொழுகையில் தனது ருகூஃவை யும், ஸுஜூதையும் சரிவரச் செய்ய மாட்டான் என்றார்கள். (நூல்கள்: அஹ்மது, தாரகுத்னீ, தப்ரானீ)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَسْرَقَ النَّاسِ مَنْ سَرَقَ صَلاتَهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ ، وَكَيْفَ يَسْرِقُ صَلاتَهُ قَالَ لا يُتِمُّ رُكُوعَهَا وَلا سُجُودَهَا وَأَبْخَلُ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلامِ
336 المعجم الصغير للطبراني باب الجيم من اسمه جعفر
966 المحدث الألباني خلاصة حكم المحدث صحيح في صحيح الجامع

2.   அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காக்கையைப் போல் குத்துவதையும், காட்டுமிருகத்தைப் போல (முன்கைகளை) விரிப்பதையும், மசூதியில் ஒட்டகம் தன் இடத்தைப் பொருத்துவதைப் போல ஒரு இடத்தைப் பிடிப்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்   (அபுதாவூத்:862, அஹ்மத்)

، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَقْرَةِ الْغُرَابِ وَافْتِرَاشِ السَّبُعِ وَأَنْ يُوَطِّنَ الرَّجُلُ الْمَكَانَ فِي الْمَسْجِدِ كَمَا يُوَطِّنُ الْبَعِيرُ ‏.‏ هَذَا لَفْظُ قُتَيْبَةَ ‏.‏

3.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் வந்து, (ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை முழுமையாக்காமல்) தொழுதார். பிறகு அவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு முகமன் (சலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் (சலாம்) சொல்-விட்டு, “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.
அந்த மனிதர் (திரும்பிச் சென்று முன்பு போலவே அவசர அவசரமாகத்) தொழுது விட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘சலாம்’ சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.
இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர், “சத்திய (மார்க்க)த் துடன் உங்களை அனுப்பியவன் மீதாணை யாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த் தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
நீர் தொழுகைக்காக நின்றதும் (அல்லாஹு அக்பர் என) தக்பீர் கூறு வீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉ வில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு (ஆற அமர நிதானத்துடன்) ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் செய்வீராக!
பின்னர் (தலையை) உயர்த்தி, (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு அமர்வில் உட்காருவீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் (மீண்டும்) சிரவணக்கம் செய்வீராக! பிறகு இதையே (இதே வழிமுறையையே) உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக!
(புகாரி: 793)
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَدَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِ السَّلاَمَ فَقَالَ ‏"‏ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ‏"‏ فَصَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ‏"‏‏.‏ ثَلاَثًا‏.‏ فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ فَمَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي‏.‏ قَالَ ‏"‏ إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا ‏

4. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் (நிதானத்தோடு) முழுமையாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர் தொழுது முடித்ததும் அவரிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள், “நீர் தொழவே இல்லை” என்று கூறினார்கள். மேலும், “(இதே நிலையில்) நீர் இறந்து விட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான வழியிலேயே இறந்தவராவீர்” என்று அவர்கள் கூறிய தாகவே நான் கருதுகிறேன்.(புகாரி: 808)
حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلاً لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم‏.‏

5. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் முஹம்மத் (ஸல்) அவர்களது தொழுகையை ஊன்றிக் கவனித்தேன். தொழுகையில் அவர்களது நிற்றல் (கியாம்),குனிதல் (ருகூஉ), குனிந்து நிமிர்ந்த பின் நிலைகொள்ளல், அவர்களின் சிரவணக்கம் (சஜ்தா), இரு சிரவணக்கங்களுக்கிடையிலான அமர்வு, பிறகு சலாம் கொடுப்பதற்கும் எழுந்து செல்வதற்கும் இடையேயான இடைவெளி ஆகியவற்றின் கால அளவுகள் ஏறக்குறைய சம அளவில் அமைந்திருந்தன. [ஸஹீஹ் முஸ்லிம்:810]

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...