بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிள்ளைகளிடையே நீதியாக நடப்பது கடமையாகும். அவர்களிடம் பாரபட்சம் காட்டுவது ஹராம் ஆகும். அது பிற ஹராமான செயல்களான உடன்பிறந்தோருக்கு தீங்கு செய்தல், உறவை துண்டித்தல் , பெற்றோருக்கு கீழ்படியாமை ஆகியவற்றிற்கு இழுத்து செல்லும்.
யூஸூஃப் நபியின் சகோதர்கள், யூஸூஃப் நபியை கொலை செய்ய திட்டம் தீட்டியதற்கு இதுவே காரணம்.
(யஅகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார். ஆகவே, "யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்திவிடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மனிதர்களாகி விடுங்கள்" என்றும் கூறினார்கள் (ஸூரத்து யூஸுஃப் 12- 8:9)
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:(நான் சிறுவனாக இருந்தபோது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை, "இல்லை" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பிவந்து, அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:3325)
மற்றொரு அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது தகாத செயலாகும். நான் நியாயத்திற்கு மட்டுமே சாட்சியாக இருப்பேன்"என்று கூறிவிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:3331)
https://www.rahmathpublications.com/muslim.php?start=3321
https://islamqa.info/en/answers/22169/ruling-on-differentiating-between-children-in-gift-giving