Thursday, June 5, 2025

குளிக்கும் முறை

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

குளிக்கும் முறை:


1.நிய்யத்
(குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்)
2. முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவ வேண்டும்
2. வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவ வேண்டும்
3. தமது கையைத் தரையில் தேய்க்க வேண்டும் (சோப்)
4. வுழூச் செய்ய வேண்டும்
(வாய்க் கொப்பளி,மூக்கையும் சுத்தம் செய், முகத்தை கழு,இரு கைகளையும் கழுவினார்கள், தலையை மூன்று முறை கழுவி, கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும்)
5. தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி, நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவ வேண்டும் (பெண்கள் பின்னல்முடி அவிழ்க தேவையில்லை)
6. மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.


தண்ணீரின் ஆளவு

"நபி(ஸல்) அவர்கள் நான்கு "முத்து"விலிருந்து ஐந்து "முத்து" வரை(0.75 - 5 லிட்டர்) உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு "முத்து" அளவு தண்ணீரில் உளூச் செய்வார்கள்" அனஸ்(ரலி) அறிவித்தார்.(புகாரி:201 )
1 முத் = 0.75 லிட்டர்

"ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு, "ஒரு ஸாவு" அளவு தண்ணீர் போதும்" என்று கூறினார். அப்போது ஒருவர் "அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது" என்றதற்கு, "உன்னை விடச் சிறந்த, உன்னை விட அதிகமான முடி வைத்திருந்த (நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது" என்று கூறினார். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவராக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்" என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.(புகாரி:252)


பெண்களின் பின்னல்முடி அவிழ்த்துவிட தேவையில்லை

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், அல்லாஹ்வின் தூதரே! நான் தலைமுடியை இறுக்கமாகப் பின்னிக்கொள்ளும் பெண் ஆவேன். பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது பின்னலை நான் அவிழ்த்துவிட வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை; நீ இரு கையளவுத் தண்ணீரை உன் தலைமீது மூன்று முறை ஊற்றினால் போதும். பிறகு உன் (உடல்)மீது தண்ணீர் ஊற்றிக்கொள்; துப்பரவாகி விடுவாய் என்று சொன்னார்கள். (முஸ்லிம்:549)


முறை

கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறு கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)

நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு (குளித்த இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)

நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)

அஸ்மா பின்த் ஷகல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய்க் குளிப்பு பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் (மாதவிடாய் குளிப்பின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்ந்து தலையின் சருமம் நனையும் வரை கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள் ‘அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹ், அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று கூறினார்கள்.

உடனே நான் இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள் என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன் னேன்.

மேலும் அஸ்மா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு நபியவர்கள் தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துக் கொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையில் சருமம் நனையும் அள வுக்கு நன்கு தேய்த்துக் கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று என்றார்கள். (அறிவிப்பர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்-552)

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, மறு முறையும் உட லுறவு கொள்ள விரும்பினால், வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)

எங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259)



https://islamkalvi.com/?p=5394 
https://youtu.be/0F2fKJIEdno 
https://en.wikipedia.org/wiki/Ghusl
https://abukhadeejah.com/manner-of-making-ghusl-wudu-from-janabah-after-sexual-relations/ 

Little movements in prayer

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The evidence that small movements, or repeated movements that are not continuous, do not invalidate ...