Thursday, June 20, 2013

யூனுஸ் நபி அல்லாஹ்வுடன் கோபித்து கொண்டாரா?

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

அன்புச்  சகோதரர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி  அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=46zSUzNeLyY#t=1900s

தாங்கள் யூனுஸ் நபி அல்லாஹ்வுடன் கோபித்து கொண்டார் என மொழிபெயர்த்து கூறுகிறீர்கள். ஆனால், எல்லா மொழிபெயர்பாளர்களும், முஃபஸிர்களும் யூனுஸ் நபி தம் சமூகத்தாரை கோபித்துக் கொண்டு வெளியேறியதாகத் தானே மொழிபெயர்துள்ளார்கள்.

இதை போன்று PJ உரை https://www.youtube.com/watch?v=TtiCqBhVm8I



யூனுஸ் நபி அல்லாஹ்விடம் கோபித்துக்கொண்டார் என்று சிலர் 21:87 ஆயத்திற்க்கு விளக்கம் கொடுக்கின்றனர். ஒரு  நபி அர்ஷின் அதிபதியான அல்லாஹ்விடம் கோபித்ததார் என்பது சிந்தனைக்கு பொருந்தாத ஒன்றாக உள்ளது. இவ்வாறான விளக்கத்தை நபியோ ஸஹாபாக்களோ கொடுக்கவில்லை.

[21:87] துன்னூனயும் (யூனுஸ் நபியாகிய மீனுடையவரை நபியே! நினைவு கூர்வீராக! தம் சமூகத்தாரை விட்டு)_அவர் கோபமாக வெளியேறிய சமயத்தில்

ளஹ்ஹாக்(ரஹ்) அவர்கள், "தம் சமுருகத்தாரிடம் கோபம் கொண்டு வெளியேற்றினார்கள்", என்று இதற்கு விளக்கம் கூறுகிறார்கள். (இப்ன் கதீர்)

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1927&Itemid=93

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2628&Itemid=76

[21:87] துன்னூனயும் (யூனுஸ் நபியாகிய மீனுடையவரை நபியே! நினைவு கூர்வீராக! தம் சமூகத்தாரை விட்டு)_அவர் கோபமாக வெளியேறிய சமயத்தில், (நாம் அவரைபிடித்து) நெருக்கடிக்குள்ளாக்கி(தண்டித்து) விடமாட்டோம் என்று எண்ணிக்க் கொண்டார்; (ஆகவே மீன் வயிற்றின்) இருள்களில் "(நெருக்கடிக்குள்ளான அவர்), உன்னைத் தவிர வணகத்திற்குறிய நாயன் (வேறு ஒருவனும் இல்லை; நீ மிக பரிசுத்தமானவன்; நிச்சயமாக நான், அநியாயக்காரர்களில் (ஒருவனாகி) ஆகிவிட்டேன்;"  என்று (பிரார்தனை செய்து அழைத்தார். [மதீனா குர்ஆன் பக்கம் 330]

[68:48] ஆகவே (நபியே!) நீர் உமதிரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! மேலும், மீனுடையவரைப் போன்று நீர் ஆகிவிடவேண்டாம்; அவர் துக்கம் நிரம்பபெற்றவராக(பிரார்தனை செய்து) அழைத்தபொழுது,

[68:49] அவருடைய இரசகனிடமிருந்து அருட்கொடை அவரை அடையாதிருந்தால், வெட்ட வெளியில் பழிக்கபட்டவராக அவர் எறியப்பட்டு இரு(ந்தி)ப்பார்.

[68:50] பின்னர்,  அவருடைய இரச்சகன் அவரை தேர்ந்தெடுத்துக்கொண்டான்; பின்னர் அவரை நல்லோர்களில் உள்ளவராக ஆக்கி வைத்தான். [மதீனா குர்ஆன் பக்கம் 568]

பிறகு யூனுஸ் நபியிடம் அல்லாஹ் கோபப்பட காரணம் என்ன?

ஏனென்றால், இறைதூதுவர்கள்  தம்மக்களை புரக்கணித்து வேறு ஊருக்கு செல்லும்போது, அவர் அல்லாஹ்வின் உத்திரவுக்கு, பிறகே செல்ல வேண்டும். இது திருக்குர் ஆனில் பல இடங்களில் ஆதாரமாக காண முடியும்.
நூஹ் நபிக்கு கப்பல் கட்ட கட்டளையிட்டது, ஆத்கூட்டத்தை விட்டு ஹூத் நபிக்கு கட்டளையிட்டது,  லூத் நபிக்கு கட்டளையிட்டது.
ஏன் நமது அருமை நாயகம் நபி (ஸல்) அவர்களுக்கு மதீனா செல்ல கட்டளையிட்டது, உட்பட.
ஆனால் யூனுஸ் அல்லாஹ்வின் கட்டளைக்கு காத்திராமல் சென்றதனாலேயே அல்லாஹ் அவரிடம் கோபித்து கொண்டான்.

இதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸை காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து/ இரு கருங்கல் மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் நிறைந்த (மதீனா) பகுதியை நீங்கள் ஹிஜ்ரத் செல்கின்ற நாடாக நான் (கனவில்) காட்டப்பட்டேன் என்று கூறினார்கள். எனவே/ மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றவர்கள் சென்றார்கள். (ஏற்கனவே) அபிசீனிய நாட்டிற்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள்
பலர் (முஸ்லிம்கள் மதீனாவில் குடியேறுவதைக் கேள்விப்பட்டு) மதீனாவுக்குத் திரும்பினார்கள். (மக்காவிலிருந்து) அபூபக்ர் அவர்களும் மதீனா நோக்கி (ஹிஜ்ரத் புறப்பட) ஆயத்தமானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்/ சற்று பொறுங்கள். எனக்கு (ஹிஜ்ரத்திற்கு) அனுமதி வழங்கப்படுவதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று (அபூபக்ர் அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள்/ என் தந்தை தங்களுக்கு அர்ப்பணம் அனுமதியை(த்தான்) எதிர்பார்க்கின்றீர்களா என்று கேட்டார்கள். அதற்கு/ ஆம் (எதிர்பார்க்கிறேன்) என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்)

அவர்களுடன் (ஹிஜ்ரத்) செல்வதற்காகத் தன் (பயணத்தி)னை நிறுத்தினார்கள். [ஸஹீஹுல் புகாரி ,ஹதீஸ் எண்:3905]

ஆதலால்,  யூனுஸ்(அலை) அல்லாஹ்வின் கட்டளைக்கு காத்திராமல் சென்றதனாலேயே அல்லாஹ் அவரிடம் கோபித்து கொண்டான்

பிற மொழிபெயர்புகள்:
1.) http://quran.com/21/87 By Sahih International, Dr. Muhsin KhanPickthall, Yusuf Ali, Shakir and Dr. Ghali
2.) IFT Quran  http://tamilislam.com/tamiltarjuma/021_The_Prophets.htm
3.) Jaan Trust  http://tamilislam.com/tamilquran/The_Prophets.htm
4.) Madeenah Quraan from King Fahd Complex http://www.islamhouse.com/28962/en/ta/books/Translation_of_the_meaning_of_the_Holy_Quran_in_Tamil
5.) தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் - ரஹ்மத் பதிப்பகம் - பாகம் 5 - பக்கம் 912 - 919





No comments:

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...