Wednesday, October 2, 2013

நோயையும் துவாவும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்„ அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [ஸஹீஹுல் புகாரி: 5678]
  1. اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
    நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். தமது வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து அல்லாஹ்ஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ், வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன் என்று பிரார்த்தித்தார்கள். (பொருள்„ இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத்தவிர வேறு நிவாரண மில்லை. நோய்அறவே இல்லாதவாறு குணமளிப்பாக!) [ஸஹீஹுல் புகாரி:5743]
  2. நம் உடலில் எங்காவது வேதனையை உணர்ந்தால்:
    வேதனை ஏற்பட்ட இடத்தின் மீது கையை வைத்து
    بِاسْمِ اللَّ
    'பிஸ்மில்லாஹி' (அல்லாஹ்வின் பெயரால்) என்று மூன்று முறை கூறவேண்டும். தொடர்ந்து
    أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
    'அ ஊது (Bi)பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு' என்று ஏழு முறை கூற வேண்டும்.
    (பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர் கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலி ருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். முஸ்லிம் 2202/4430)
  3. குழந்தைகளுக்கான பிரார்த்தனை:
    أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
    உஈதுகுமா பி கலிமாத்தில்லாஹித் தாம்மத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வமின் குல்லி அய்னின் லாம்மத்தின்.
    பொருள் : ஒவ்வொரு ஷைத்தான் மற்றும் விஷ ஜந்துக்களின் (தீமையி)லிருந்து இன்னும் பட்டுவிடக்கூடிய ஒவ்வொரு கண்ணி(ன் பார்வையி)லிருந்து அல்லாஹ்வின் நிறைவான வாக்குகளைக் கொண்டு உங்களிருவருக்கும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.[திர்மிதி: 2201]
  4. நோயாளிக்கு நலம் விசாரிக்கையில் பிரார்த்தனை:
    لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த கிராமவாசி) ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும் என்று சொன்னார்கள். [ஸஹீஹுல் புகாரி:6662,அபு தாவூத் 3106]


    أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
    அஸ்அலுல்லாஹல் அழீம். ர(B)ப்பில் அர்ஷில் அழீமி அன்யஷ்(F)பியக (7 முறை)
    (பொருள் :மகத்தான அர்ஷின் அதிபதியான மகத்துவமிக்க அல்லாஹ்விடம் உன்னை குனப்படுத்த வேண்டுகிறேன்) [திர்மிதி: 2227]
  5. விஷ ஜந்துக்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெற:
    அஊது (B)பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்
    (பொருள்: அவன் படைத்தவற்றின் தீங்குகளை விட்டு அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளின் துணைகொண்டு நான் காவல் தேடுகிறேன்.) [ஸஹீஹுல் புகாரி: 3371] 

No comments:

Little movements in prayer

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The evidence that small movements, or repeated movements that are not continuous, do not invalidate ...