بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ஷரியாவின் குறிக்கோள் ஒற்றுமையேயாகும்:-
வரையறுக்கப்பட்ட இஸ்லாமிய ஷரீயத்தின் குறிக்கோள், மக்களை ஒன்றுபடுத்துவதும், அவர்களது தரத்தை ஒன்றுபடுத்துவதும், ஒற்றுமையை சீர்குலைக்கும் காரணிகளை(சுயகருத்துள்) மக்களை விட்டும் தூரப்படுத்துவதுமே ஆகும். 'இபாதா ஜாமியா' (கூட்டு வழிபாட்டுமுறைகள், அதாவது நோன்பு நோற்றல், பெருநாள் மற்றும் இதர கொழுகைகளைப்) பொறுத்தமட்டில் சுயகருத்துக்களுக்கு, அவை ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது சரியானதாக இருந்தாலும், ஷரீஅத் எந்த முக்கியத்துவம் அளிக்காது. பெருநபி தோழர்கள் (ரலி), ஒருவர் பின் ஒருவராக நின்று தொழுவதை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்களில் சிலர் ஒரு பெண்ணை தொட்டாலும், உடலில் இருந்து இரத்தம் வடிந்தாலும் 'உளு' முறிந்துவிடும் என்ற கடருத்து உடையவரும் இருந்தனர். இதனை ஏற்காத மற்றவர்களுடன் சேர்ந்தே தொழுதனர்.இன்னும் அவர்களில் பயணத்தின் போது கஸ்ர் (சுருக்கி தொழுதல்) தொழாமல், முழுவதுமாக தொழுபவர்களாக இருந்தனர் என்ற போதிலும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இமாம் ஒருவரின் பின் நின்று அனைவரும் சேர்ந்து தொழுவதை எதுவும் தடுக்கவில்லை. இது ஏற்றுக்கொள்ளதக்கதே என்றும் கருதினர். ஏனெனில் அவர்கள் தஃபர்ருக் (பிளவு படுதல்), இக்திலாஃபை (கருத்துவேறுபடுதலை) விட மிகவும் தீயது என அறிந்திருந்தார்கள்.
உண்மையில் ஒரு நபித்தோழர் ஹஜ்ஜின்போது மினாவில் மினாவில் கூடும் ஜமாத் போன்ற பெரும் கூட்டங்களுக்குரிய பெரிய இமாம் அவர்களின் கருத்துக்கு மாறுபடும் ஒரு சிறிய எண்ணத்தைக் கூட மனதில் கொள்ளாதவராக திகழ்ந்தார். தமது சொந்த்தகருத்தில் செயல்பட மறுத்தார். ஏனெனில் அதன் மூலம் ஏற்படும் தவற்றிலிருந்த்து விலகி செல்ல விழைந்ததே காரணமாகும். இதற்க்கு சான்றாக கீழ்வரும் ஹதீஸ் அமைகிறது.
ஹதீஸ் நூல் அபூதாவூத் (1/307) கூருவதாவது:
உதுமான் (ரலி) மினாவில் தங்கிய போது 4 ரக்காத்துகள் தொழுதார்கள். இதை கண்ட இப்ன் மஸ்ஊத் (ரலி) "நான் நபிகளாருடன் இரண்டு ரக்காத்துகள், அபூபக்கர்(ரலி) அவர்களுடன் இரண்டு ரக்காத்துகள், உமர்(ரலி) அவர்களுடன் இரண்டு ரக்த்துகளே தொழுதுள்ளேன். அனால் தங்களால் இது மாற்றபட்டுவிட்டதே. இந்த 4 ரக்காத்துகளில் 2 ரக்காத்துகள் இறைவனால் ஏற்றுக்கொளப்படும் என நம்புகிறேன்" என்று கடிந்து கூறினார். பிறகு இப்ன் மஸ்ஊத் (ரலி) 4 ரக்காத்துகள் தொழுதார்கள். "தாங்கள் உதுமான்(ரலி) அவர்களை கடிந்துகொண்டீர்கள். ஆனால் தாங்கள் 4 ரக்காத்துகள் தொழுதீர்களே?" என்று வினவியபோது "மாறுடுதல் தீயது!" என்று பதில் அளித்தார்கள்.
இந்த ஹதீஸின் தொடர்பு ஸஹீஹானது. இதைபோன்றே இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் முஸ்னத்(5/155) அபூதர்தா(ரலி) அவர்களிடமிருந்த்து மற்றொரு ஹதீஸும் அறிவுக்கபட்டுள்ளது. [முஹம்மத் நாஸிருத்தீன் அல்-அல்பானி
மூலம் : ஸில்ஸிலத்துல்- அஹதீத் அஸ்-ஸஹீஹ் (1/442-445)]
وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ
ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அவ்வாறு செய்தால் உங்களிடையே பலவீனம் தோன்றி விடும். மேலும், உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்து போய்விடும். ஆகவே, பொருமையை மேற்கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். [அல் அன்ஃபால் 8:46]
وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ .. مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا ۖ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள். [ஸூரத்துர் ரூம் 30:32]
وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَإِلَّا ... مَن رَّحِمَ رَبُّكَ
உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் .. உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர் [சூரத்துல் ஹூது 11:118-9]
إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ ۚ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا يَفْعَلُونَ
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். [சூரத்துல் அன்ஆம் 6:159]
فَتَقَطَّعُوا أَمْرَهُم بَيْنَهُمْ زُبُرًا ۖ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். [ஸூரத்துல் முஃமினூன் 23:53]
فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ
எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும். [23:54]
وَمَا تَفَرَّقُوا إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ
மக்கள் தங்களுக்கு ஞானம் வந்த பின்னர்தான் பிளவுபட்டுப் போனார்கள். அதுவும் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்க நாடிய காரணத்தால்தான். [அஷ்ஷூஅரா 42:14]
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒன்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு"