Saturday, April 26, 2014

தாடியும் இஸ்லாமும்

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

தாடி - இது
1. இறைவனின் கட்டளை 
நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பாரசீக மன்னன் கிஸ்ராவின் தூதர்கள்
இருவர் வந்தனர். அவர்கள் இருவரும் தாடியை மழித்து விட்டு மீசையை வளர
விட்டிருந்தனர். இதை கவனித்த நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் தம்முடைய முகத்தை
அந்த தூதர்களை விட்டும் திருப்பிக் கொண்டார்கள். மேலும், அந்த
தூதர்களிடம் இவ்வாறு செய்ய  அவர்களை ஏவியது யார் என்றும் வினவினார்கள்.
அதற்கு அந்த தூதர்கள், "எங்களுடைய அதிபதி (கிஸ்ரா)" என்று பதில் தந்தனர்.
அதைக் கேட்ட நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "புகழுக்கூரியவனும் மிக
உயர்ந்தவனுமாகிய என்னுடைய அதிபதி தாடியை வளர விடுமாறும் மீசையை
வெட்டுமாறும் எனக்கு கட்டளை இட்டுள்ளான்" என்று கூறினார்கள்.
இப்ன் ஜரீர் அத்-தபரி, இப்ன் ஸ் ஆத், இப்ன் பிஷ்ரான்

2. நபி(ஸல்) அவர்களின் கட்டளை:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435

3. முன்சென்ற நபிமார்கள் தாடி வைத்துள்ளனர்
 அவர் (ஹாரூன் அலை) " என் தாயின் மகனே! என்னுடைய தாடியையும், என்னுடைய தலையையும் பிடி(த்திழு)க்காதீர்; 20:94


இது நீங்கள் கபருக்குல் கொண்டு போகும் கண்ணுக்கு தெரிந்த ஒரே சுன்னா..

No comments:

குளிக்கும் முறை

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ குளிக்கும் முறை: 1.நிய்யத் (குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்) 2. முன் கைக...