Thursday, June 26, 2014

PJ & தவ்ஹீத் அஸ்மா வஸ்ஸிஃபாத்

 அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது (தவ்ஹீத்)  மூன்று விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.

1. அவனை வணங்குவதில் அவனை ஒருமைப்படுத்தல் (தவ்ஹீதுர் ருபூபிய்யா)

2. அவனுடைய செயல்களில் அவனை ஒருமைப்படுத்தல்(தவ்ஹீதுல் உலூஹிய்யா)

3. அவனுடைய பெயர்களிலும் பண்புகளிலும் ஒருமைப்படுத்தல் (தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்)

அல்லாஹ்வின் பெயர்களிலும் பண்புகளிலும் விடயத்தில் இஸ்லாத்தின் பெயரில் உள்ள அதிகமான பிரிவுகள்  வழிகெட்டுள்ளார்கள். ஆகவே, முன் சென்ற இமாம்கள் இப்பிரிவுகளுக்கெதிராக மறுப்பளிக்கும் வகையில் பல நூட்களைத்  தொகுத்துள்ளார்கள். மேலும், அந்த நூட்களில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்த கொள்கைகளைத் தெளிவுபடுத்தியுமுள்ளார்கள்.

அல்லாஹ்வின் பண்புகளை பொருள் மாற்றாமலும், மறுக்காமலும், உதாரணம் கூறாமலும், இப்படிதான் இருக்கும் என்று  சொல்லாமலும், படைப்பினங்களோடு ஒப்பிடாமலும் மற்றும் சுயவிளக்கம் அளிக்காமலும் நேரடியான பொருளில் நம்ப  வேண்டும். முன்சென்ற நல்லோர்களான ஸஹாபாக்கள் தாபியீன்கள் இப்படிதான் நம்பினார்கள்.

“அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற் கிறவன், பார்க்கிறவன்” (அல்குர்ஆன் 42:11)

ஜஹமிய்யாக்கள், அஷாயிராக்கள் போன்ற வழிதவறியவர்கள் தான் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தும், மாற்று பொருள்  கொடுத்தும் நம்பினார்கள்.

நபி அவர்களிடமிருந்து நேரடியாக மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் பெயர்களிலும் பண்புகளிலும் நேரடியான  பொருளில் தான் விளங்கினார்கள். எனவே நாமும் அவ்வாறே விளங்குவோம்.

அல்லாஹ்வுக்கு இருக்கக்கூடிய பண்புகள் (الصفات التبوثية) இரண்டு வகைப்படும்.

அ) அவனுடன் எப்போதும் இருந்து கொண்டிருக்கக்கூடிய பண்புகள் (உதாரணம்: கேள்வி, பார்வை) இதற்கு அரபியில் (الذاتية)  ‘தாதிய்யா’ என்று சொல்லப்படும்.

ஆ) அவன் நாடினால் செய்யவும், நாடினால் செய்யாமல் இருக்கவும் முடியுமான அவனுடைய செயல்களோடு தொடர்பான  பண்புகள் (உதாரணம்: அல்லாஹ் வருவான், இறங்குகிறான்) இதற்கு அரபியில் (الفعلية) ‘fபிஃலிய்யா’ என்று சொல்லப்படும்.
சிலவேளைகளில் ஒரே ‘ஸிஃபத்’ ‘பிஃலிய்யா’வாகவும் ‘தாதிய்யா’வாகவும் இருக்கும். உதாரணம்: (கலாம்) பேசுதல்.
மேலும் வாசிக்க : http://www.manhaj.in/index.php/articles/6-2013-11-12-09-41-09 

அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விடயத்தில் வழிகெட்ட பிரிவினர்கள் அவர்களின் கொள்கை:

1. கராமிதா மற்றும் தத்துவவியலாளர்கள்: அல்லாஹ் என்ற ஒருவன் இல்லை, அவனுக்குப்பெயரும், பண்பும் இல்லை என்பது இவர்களின் கொள்கையாகும்.

2. ஜஹ்மிய்யாக்கள்: அல்லாஹ் உண்டு. ஆனால் அவனுக்குப் பெயரோ பண்போ இல்லை என்பது இவர்களின் கொள்கையாகும்.

3. முஃதஸிலாக்கள்: அல்லாஹ்வுக்குப் பெயர்கள் மாத்திரமே உள்ளன. பண்புகள் அவனுக்கு இல்லை என்பது இவர்களின் கொள்ளையாகும்.

4. அஷ்அரிய்யாக்கள்: அல்லாஹ்வின் பண்புகளில் ஏழு பண்புகளை மாத்திரம் உறுதிப்படுத்துகின்றனர். உயிரோடுள்ளவன், நாடுபவன், சக்தியுள்ளவன், அறிவுள்ளவன், செவிமடுக்கக்கூடியவன், பார்க்கக்கூடியவன், பேசக்கூடியவன் ஆகிய பெயர்களே இவர்கள் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தும் பெயர்களாகும்.

5. மாத்துரூதீய்யாக்கள்: இவர்களும் அஷ்அரிய்யாக்களைப்போல் ஏழு பண்புகளோடு ஒரு பண்பை மாத்திரம் அதிகப்படுத்தினர். அது உருவாக்குதல் என்ற பண்பாகும்.

6. முமஸ்ஸிலாக்கள்: அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் வரம்புமீறியவர்களே இவர்கள். ஏனென்றால், அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்கினார்கள்.

7. முபவ்விதாக்கள்: அல்லாஹ்வின் பண்புகளை அறிவிக்கக்கூடிய பெயர்களை இவர்கள் உறுதிப்படுத்தினர். அதன் கருத்து அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும் என இவர்கள் கூறினார்கள்.

ஒருவருடய கொள்கை (அகீதா) அவர் எழுதும் , படிக்கும்  குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

சில உதாரணங்கள்:

1.) அல்லாஹ்வின் கண்:
PJ மொழிபெயர்ப்பு:
நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக!  [11:37]
எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம்மீது என் அன்பையும் செலுத்தினேன்.  [20:39]
அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. [54:14] 

<<<< சரியான மொழிபெயர்ப்பு:
மேலும், "நம்முடைய கண்கள் முன்பாகவே, நம்முடைய அறிவிப்பின்படி, ஒரு கப்பலை நீர் செய்யும்;" [11:37]
நீங்கள் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக உங்கள் மீது என் அன்பை பொழிந்தேன் [20:39]
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பெரு வெள்ளத்தில் மிதந்து) சென்றது [54:14]
>>>>

2.) அல்லாஹ்வின் முகம்:
PJ மொழிபெயர்ப்பு:
உறவினருக்கும்,  ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 30:38)
இந்த வசனத்தில் அல்லாஹ்வின் முகத்தை நாடி தர்மம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அல்லாஹ்வின் முகம் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுக்க முடியாது. எனவே, அல்லாஹ்வின் திருப்தியை நாடி என்று பொருள் கொள்ள வேண்டும்.
<<<<சரியான மொழிபெயர்ப்பு:
அல்லாஹ்வின் முகத்தை மறுமையில் காண நாடுவோருக்கு என்பது இது பொருளாகும். -  தப்ஸீர் இப்ன் கதீர்
மறுமையில் அல்லாஹ்வை காண்பது - இது தான் ஒவ்வொரு முமினின் தலையான குறிக்கோள்.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பௌர்ணமி இரவில் எங்களிடம் புறப்பட்டு வந்து, "நீங்கள் இந்த முழு நிலாவை நெருக்கடியின்றி காண்பதைப் போன்றே உங்கள் இறைவனை மறுமை நாளில் காண்பீர்கள்" என்று சொன்னார்கள். [ஸஹீஹுல் புகாரி:7436]
>>>>
3. அல்லாஹ் அமர்ந்தான் என மொழிபெயர்ப்பு:
PJ மொழிபெயர்ப்பு:
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்  மீது  அமர்ந்தான். (அல்குர்ஆன் 7:54)
இந்த வசனங்களிலும் 10:03, 13:02, 25:59, 32:04, 57:04 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் என்று  ஆணித் தரமாக அடித்துச் சொல்கின்றன.

<<<< சரியான மொழிபெயர்ப்பு:
அல்லாஹ் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்க்குரியவாறும் அர்ஷின்மீது இருப்பது அவனுக்கு எவ்வாறு  தகுமோ, அவ்வாறே) அவன் அர்ஷின்மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான் (7:54)
இதில் இஸ்தவா உயருதல் என்ற சொல்லுக்கான பொருள் என்ன? என்று இமாம் மாலிக் (ரஹி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்க்கு இமாம் மாலிக் (ரஹி) பின்வருமாறு விடை பகர்ந்தார்கள்:
“இஸ்தவா" வுக்கான பொருள் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அதன் விதம் அறியப்படவில்லை. அதுபற்றி ஈமான் கொள்வது கடமை. அதைபற்றி விசாரிப்பது பித் அத் ஆகும்.”
>>>>

4.) அல்லாஹ் வானத்தில் இறங்கி வருகிறான்:
PJ மொழிபெயர்ப்பு: 
“அல்லாஹ் வானத்தில் இறங்கி வருகிறான் ஆனால் அது அருள் தான்.” http://www.onlinepj.com/kolkai-vilakkam/allah_uruvamatravana/

<<<< சரியான மொழிபெயர்ப்பு:
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், இரவின் மூன்றாவது பகுதி மீதம் இருக்கும் போது அல்லாஹ் முதல் வானத்தை நோக்கி இறங்குகிறான். பிறகு வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. பிறகு அல்லாஹ் தனது கையை விரித்தவாறு கூறுவான், எவரேனும் (தனது தேவையை) கேட்பவர் உண்டா? அவரது கேள்விக்கு பதிலளிக்கப்படும். ஃபஜ்ர் நேரம் உதயமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறான். பிறகு ஃபஜ்ர் நேரம் வந்த பிறகு மேலே உயர்கிறான்.. [முஸ்னத் அபி அவானா, புகாரி:1145,முஸ்லிம்:1387]
மேலும் வாசிக்க: http://www.islamkalvi.com/portal/?p=20013
http://islamqa.info/en/12290
>>>>

5. அல்லாஹ் மேகத்தில் வருவான் :
PJ மொழிபெயர்ப்பு:
உதாரணமாக 2:210, 13:41, 16:26 ஆகிய வசனங்களில் தீயவர்களை அழிக்க இறைவன் வருவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வசனங்களுக்கு அல்லாஹ் நேரடியாக வருவான் என்று பொருள் கொள்ளாமல் அவனது கட்டளை வரும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

<<<< சரியான மொழிபெயர்ப்பு:
இது மற்றொறு  ஆயத் ,25:25 போன்றது: இன்னும், வானம் மேகத்தால் பிளந்து, மலக்குகள் உறுதியாகவே இறக்கிவைக்கபடும் நாளை_(அவர்களுக்கு எச்சரிக்கை  செய்வீராக). [25:25]
இந்த இடத்தில் இப்ன் ஜரீர் (ரஹ்) அவர்கள்(தமது விரிவுரையில்) எக்காளம் (ஸூர்) ஊதப்படுவது தொடர்பான ஒரு நீண்ட ஹதீஸை அரம்பம் முதல் (இறுதிவரை முழுமையாக) இடம்பெறச் செய்துள்ளார்கள். அது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)  
அவர்களிடமிருந்து அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்ததாகும். பிரபலமான இந்த ஹதீஸை முஸ்னத் வகை நபிமொழி தொகுப்பாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர். அதில் வந்துள்ளதாவது: மக்கள் அனைவரும் மறுமையின் பெரும்வெளிகளில் கவலையோடு நின்றுகொண்டிருக்கும்போது, ஆதி மனிதர் ஆதம்(அலை)  அவர்கள் முதல் அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு நபியிடமும் இறைவனிடம் பரிந்துரை செய்யுமாறு கோருவார்கள். எல்லா  நபிமார்களும் அதிலிருந்து விலகிவிடுவார்கள். இறுதியில் மக்கள் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் வருவார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அதற்குரியவன் நானே; அதற்குரியவன் நானே" என்று கூறிவிட்டு, உடனே சென்று  (அல்லாஹ்வின் அரியாசனம்) அர்ஷுக்குக் கீழே அல்லாஹ்வுக்கு சிரம்பணிவார்கள். பின்னர், அடியார்களுக்கிடையே நியாயத் தீர்ப்பு வழங்க வருமாறு அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள். அவர்களது மன்றாட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அல்லாஹ், மேக  நிழல்கள் வழியாக (அடியார்களிடம்) வருவான். அதற்கு முன்னர் முதலாவது வானம் பிளந்து அதிலுள்ள வானவர்கள் இறங்குவார்கள். பின்பு இரண்டாவது வானம், பின்பு மூண்றாவது வானம், இப்படியே ஏழாவது வானம்வரை அனைத்து வானங்களும் பிளந்து அவற்றிலுள்ள வானவர்கள் இறங்குவார்கள். பின்னர் அர்ஷைச் சுமக்கும் வானவர்களும், அவர்களுக்கு நெருக்கமான (ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராஃபீல் (அலை) உள்ளிட்ட) தலைமை வானவர்களும் இறங்குவார்கள். பின்னர், வலிவும் மாண்புமிக்க அடக்கியாளும் அல்லாஹ்வும்,  வானவர்களும் மேக நிழல்கள் வழியாக வருவார்கள். அப்பொது (அல்லாஹ்வைப் புகழ்த்து) அந்த வானவர்கள் கூறும் தஸ்பீஹ் ரீங்காரித்துகொண்டே இருக்கும். அவர்கள், 
“சுபஹான தில் முல்கி வல்மலக்கூத்; சுப்ஹான தில் இஸ்ஸத்தி வல்ஜபரூத்; சுபஹானல் ஹய்யில்லதீ லா யமூத்; சுபஹானல்லதீ யுமீத்துல் கலாயிக வ லா யமூத்; சுப்பூஹுன் குத்தூசுன் ரப்புனல் அஃலா; சுப்ஹான திஸ்ஸுல்தானி வல அழமா;  சுப்ஹானஹு; அபதன் அபதா” என்று கூறுவார்கள்.
பொருள்: ஆட்சியும் அதிகாரமும் உடைய (இறை)வன்; வலிமையும் சர்வாதிகாரமும் உடைய (இறை)வன் தூயவன்; மரணிக்காமல் (என்றென்றும்) உயிரோடு இருப்பவன் தூயவன்; மரணிக்கச் செய்துவிட்டுத் தான் (மட்டும்) மரணிக்காமல் இருப்பவன் தூயவன்; (அவன்) மிகவும் தூயவன்; மிகவும் பரிசுத்தமானவன்; மிக்க மேலான எங்கள் இறைவன் தூயவன்;  அதிகாரமும் மகத்துவமும் உடைய(இறை)வன் தூயவன்; அவன் தூயவன்; அவன் தூயவன்; என்றும் என்றென்றும்.) 

தஃப்ஸிர் இப்ன் கஸீரில் இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் ஆசிரியர் நுஐம் பின் ஹம்மாத் அல்குஸா(ரஹ்) கூறுவதாக கூறுவதாவது 
“ யார் அல்லாஹ்வை, அவனுடய படைப்பினங்களில் ஒன்றுடன் ஒப்பிடுகின்றாரோ, அவர் இறைமறுப்பாளராகிவிடுவார்”. 
அல்லாஹ் தனெக்கென குறிப்பிட்டுள்ள பண்புகளில் ஒன்றை மறுப்பவரும் இறைமறுப்பாளராகிவிடுவார். அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ அல்லாஹ்வுக்கென குறிப்பிடபட்டுள்ள பண்புகளில் படைப்புகளுக்கு ஒப்பானது எதுவும் கிடையாது. எனவே, அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு ஏற்றவாறு தெளிவான இறைவசனங்களும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும், அல்லாஹ்வின் பண்புகளென கூறியவற்றை ஒப்புக்கொண்டு, குறைகளைவிட்டு அல்லாஹ் நீங்கியவன் என்று யார்  கூறுகிறாறோ, அவர்தான் நல்வழி நடந்தவர் ஆவார்.

அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன் ஆமின் யாரப்பால் ஆலமீன்.

No comments:

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...