Monday, February 9, 2015

நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும்

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

பொங்கு கருணையானும் தொடர் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயர் கொண்டு...

17:53. (நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.)

33:70. (ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.

35:10. எவரேனும் கண்ணியத்தை விரும்பினால் கண்ணியம் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்). அவனை நோக்கி உயர்ந்து செல்வது தூய்மையான சொல் மட்டுமே! இன்னும் நற்செயல் அதனை மேலே உயர்த்துகின்றது. மேலும், எவர்கள் தீயசூழ்ச்சிகள் செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கிறது. மேலும், அவர்களுடைய சூழ்ச்சிகள் தானாகவே அழியக்கூடியவையாக இருக்கின்றன.

நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (2989)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்தி­ருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்றார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)
.நூல் : புகாரி (6023)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும் என்று சொன்னார்கள். மக்கள் நற்குறி என்பதென்ன? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
நூல் : புகாரி (5754)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்குப் பிறகு (வேறுயாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்துநில் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் எதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் நாவை சுட்டிக்காட்டினார்கள்.
அறிவிப்பவர் : சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : அஹ்மத் (14870)

No comments:

Little movements in prayer

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The evidence that small movements, or repeated movements that are not continuous, do not invalidate ...