Saturday, March 14, 2015

அழைப்பாளனின் பண்புகள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அழைப்பாளனின் பண்புகள்

1.) அகீதா
2.) சொல்வதை செய்தல்
3.) இக்லாஸ் (தூய எண்ணம்)
4.) ஸபர் (பொறுமை)
5.) அக்லாக் (நற்குணம்)


1.) அகீதா
12:108. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப்

பரிசுத்தமானவன். ஆகவே, (அவனுக்கு) இணை வைப்பவர்களில் நானும் ஒருவனல்ல."
மேலே கூறபட்ட ஆயத்தில் "அலா பஸீரா" தெளிவான ஆதாரத்தில் என்ற சொல் பயன்படுத்தபட்டுள்ளது.

16:125. (நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக!

22:8. மனிதர்களில் பலர் (இருக்கின்றனர். அவர்கள்) யாதொரு கல்வியும், யாதொரு தர்க்கரீதியான ஆதாரமும், யாதொரு வேத நூலின் தெளிவான ஆதாரமும் இல்லாமலே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்.


2.) சொல்வதை செய்தல்
[61:2-3.]. நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகின்றீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கின்றது.
11:88.நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு மாறுசெய்ய விரும்பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத்தை நானும் செய்யமாட்டேன்.) என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்)

நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன்.
2:44. நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

3.) இக்லாஸ் (தூய எண்ணம்)
[6:90] "இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை..
[11:29.]என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடம் யாதொரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (உங்களிடம்) இல்லை.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ
[98:5] “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”
4.) ஸபர் (பொறுமை)
6:10. (நபியே!) உங்களுக்கு முன்னர் வந்த (நம்முடைய மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில் அவர்கள் (எந்த வேதனையைப்) பரிகசித்துக் கொண்டிருந்த(னரோ அ)து அவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.
6:34. உங்களுக்கு முன்னிருந்த (நம்முடைய) பல தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம்முடைய உதவி வரும் வரையில் அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே

நபியே! நீங்களும் அவ்வாறே பொறுத்திருங்கள்.)

5.) அக்லாக் (நற்குணம்)
[20:43-44]. நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான்.நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம்.
3:159. (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்.

ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக!
68:4. நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.
16:125. (நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள்.
29:46. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர் களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலன்றி அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம்.ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது

குற்றமாகாது.

No comments:

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...