Saturday, February 27, 2016

பள்ளிவாசல்களை நறுமணம் கமழச் செய்க

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

பள்ளிவாசல்களை நறுமணம் கமழச் செய்க




சாம்பிராணி போடுவது என்றால், நமது ஞயாபகத்துக்கு வருவது பச்ச தலப்பா.

 கடைக்கு சாம்பிராணி போடுதல் வசூல், தர்ஹா சாம்பிராணி போடுதல்.

 ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மட்டுமே சாம்பிராணி மற்றும் வாசணை பொருட்கள் உபயோக படுத்துகிறார்கள் . சில பள்ளிகளில் வெள்ளிகிழமை ஜும்மாவிற்கு மட்டும் அவ்வாறு செய்கின்றனர். சில பள்ளிகள் கழிவறை அருகாமையில் உள்ளது, அதில் இருந்து பள்ளிகுள் வரும் துர்நாற்றம் சொல்லமுடியாதது..


பள்ளிகளில் வாசனை பற்றி ஹதீஸ்கள்:

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَدِّبُ الْبَغْدَادِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَامِرُ بْنُ صَالِحٍ الزُّبَيْرِيُّ، هُوَ مِنْ وَلَدِ الزُّبَيْرِ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ ‏.‏

ஆய்ஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், குடியிருப்புப் பகுதிகளுக்கிடையே பள்ளிவாசல்களை எழுப்பிக்கொள்ளுமாறும்ம், அவற்றைத் தூய்மையாகவும் நறுமணத்துடனும் வைத்துகொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள். [ஜாமிஉத் திர்மிதி :542, இப்ன் மாஜா:758]

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒவ்வொரு பகுதியிலும் பள்ளி அமைத்து அதை தூய்மையாகவும் நருமணத்துடனும் வைக்குமாரு கட்டளையிட்டுள்ளார்கள். அவூதாவூத் : 455 (இதை அல்பானி (ரஹி) ஸஹீஹ் என்கிறார்கள்)

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணப் புகையிட்டால், அகில் கட்டையால் நறுமணப் புகையிடுவார்கள். அதில் வேறெந்த நறுமணப் பொருளையும் சேர்க்கமாட்டார்கள். (சில வேளைகளில்) அகிலுடன் கற்பூரத்தையும் போடுவார்கள். பிறகு "இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நறுமணப் புகையிடுவார்கள்" என்று கூறினார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் : 4539]

ஃபத்வா : http://www.alifta.com/Fatawa/fatawaChapters.aspx?languagename=en&View=Page&PageID=11968&PageNo=1&BookID=7

No comments:

குளிக்கும் முறை

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ குளிக்கும் முறை: 1.நிய்யத் (குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்) 2. முன் கைக...