Friday, October 14, 2016

பெண்கள் முகத்தை மூடுவது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் 

சிலர் பெண்கள் முகத்தை மறைக்க எந்த ஆதாரமும் இல்லை , இதனால் ஒழுக்கக் கேடுகள் தான் ஏற்படும் என்கிறனர்.

முதலில் ஹிஜாப் சட்டம் இறங்கிய தருணத்தை, காரணத்தை பார்ப்போம்.

[1]
24:31
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ يَرْحَمُ اللَّهُ نِسَاءَ الْمُهَاجِرَاتِ الأُوَلَ، لَمَّا أَنْزَلَ اللَّهُ ‏{‏وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ‏}‏ شَقَّقْنَ مُرُوطَهُنَّ فَاخْتَمَرْنَ بِها‏
புகாரி 4758. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! '(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புக்கு  மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்!' எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள். 
புகாரி  4759. ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரஹ்) கூறினார்.
'(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்' எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனம் அருளப்பட்டபோது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، ح وَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، وَابْنُ السَّرْحِ، وَأَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، قَالُوا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيُّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّهَا قَالَتْ يَرْحَمُ اللَّهُ نِسَاءَ الْمُهَاجِرَاتِ الأُوَلَ لَمَّا أَنْزَلَ اللَّهُ ‏{‏ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ‏}‏ شَقَقْنَ أَكْنَفَ - قَالَ ابْنُ صَالِحٍ أَكْثَفَ - مُرُوطِهِنَّ فَاخْتَمَرْنَ بِهَا
மற்றும் அபூதாவுத்: 4102

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْفَجْرَ، فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنَ الْمُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ ثُمَّ يَرْجِعْنَ إِلَى بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ‏.‏
'நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் ஆடைகளால் தங்களின் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் யார் யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  [ஸஹீஹுல் புகாரி:372]
________________________________________________________________________

நபி(ஸல்) அவர்களின் ஆரம்பகாலங்களில் பெண்கள் முகத்தை திறந்தே இருந்தனர் அல்லாஹ் அவர்களுக்கு முகத்தை மூடுவதை சட்டமாக்கவில்லை. பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கருத்தை முதலில் முன்வைத்தவர் உமர்(ரலி) அவர்களாவார்கள்


[2] . புகாரி:146
நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), 'ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்' என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்' ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا33:59 நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.


  1. 'யார் என்று அறியப்படும்' வகையில்  ஹிஜாபுடைய சட்டம் இறங்க வேண்டும் என உமர்(ரலி) அவர்கள் எதிர்பார்தார்கள். வசனமும் இரங்கியது. உமர்(ரலி) அவர்களது ஆசை நிறைவேறியது.
2. 33:59 வசனத்தில் ஜில்பாப் என்ற சொல்லுக்கு  சிலர் நவீன கால அரபு அகராதிகளை வைத்துகொண்டு   பெரிய துணி, மேலங்கி, கைலி போன்ற ஆடை,உடலை முழுமையாக மறைக்கும் ஆடை என்றும் அர்த்தங்கள் கூறுகிறனர்.
இதில் மிக முக்கியமானது என்னவெனில் இந்த வசனம் இறங்கிய போது ஜில்பாப் என்ற சொல் எவ்வாறு புரிந்து கொள்ளபட்டது, அது இறங்கியதும் ஸஹாபா பெண்மணிகளால் எவ்வாறு நடைமுறை படுத்தப்பட்டது என்பதாகும். ஆம் ஹிஜாபுடைய சட்டத்தின் நோக்கம் 'யார் என அறியப்படாதிருந்தல்'.


[3]  'திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்'  என்ற சட்டம்
 புகாரி  4792.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ('வலீமா'விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அல்லாஹ்' இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்துவிட்டார்கள்.

இங்கே அல்குர்ஆனிய வசனம் அருளப்பட்டதன் பின் நபி(ஸல்) அவர்களின் மனைவிக்கும் மக்களுக்கும் திரைபோடப்பட்டது என்பது தெளிவாகிறது. இதன் அர்த்தம் முஃமீன்களின் அன்னையர் அரைகுறை ஆடைகளுடன் இருப்பார்கள் என்பதல்ல மாறாக அவர்களை பார்க்க முடியாது என்பது தெள்ளத் தெளிவாகிறது.


புகாரி : 4750 படைசென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.
அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னைப் பார்த்தார். ஆகவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் என்னை அறிந்துகொண்டு (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ ஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில் விலகியிருந்த) எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்


இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது என்பது பொது விதி. இருப்பினும் அந்நிய ஆண்கள் இருப்பின் , ஸஹாபா பெண்கள் முகத்தை மூடியுள்ளனர்

புகாரி 1838: இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!' என்று பதிலளித்தார்கள்.

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، أَنَّهَا قَالَتْ كُنَّا نُخَمِّرُ وُجُوهَنَا وَنَحْنُ مُحْرِمَاتٌ وَنَحْنُ مَعَ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ
மலிக் முவத்தா: 725
ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் அஸ்மாஉ பின்த் அபீ பக்ர் சித்தீக் (ரலி) அவர்களுடன் இருந்த போது நாங்கள் எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம்.

முஸ்லிம்: 2321ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் என்னைத் "தன்ஈமு"க்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அப்துர் ரஹ்மான் (ரலி) என்னைத் தமது ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்(டு, தன்ஈமை நோக்கிப் பயணம் மேற்கொண்)டார். அப்போது நான் எனது முகத்திரையை உயர்த்தி, கழுத்து வழியாக அதைக் கழற்றலானேன். உடனே அவர் தமது ஒட்டகத்தை அடிப்பதைப் போன்று எனது காலில் அடித்தார். நான் அவரிடம், "(அந்நிய ஆண்கள்) எவரேனும் (என்னைப் பார்ப்பதைக்) காண்கிறீரா? (பிறகு ஏன் என்னை அடிக்கிறீர்?)" என்று கேட்டேன். பிறகு நான் (தன்ஈமில்) உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னேன். (உம்ரா முடிந்த பிறகு) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது அவர்கள் "முஹஸ்ஸபி"ல் தங்கியிருந்தார்கள்.
அபூதாவுத் (1562),
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(பெண்களாகிய) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த போது ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களை கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அருகில் வரும் போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களை கடந்து சென்றுவிட்டால் முக்காட்டை அகற்றிக் கொள்வோம்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَمْشَاذٍ الْعَدْلُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ الْجَوْهَرِيُّ ، ثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ ، ثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَتْ : " كُنَّا نُغَطِّيَ وُجُوهَنَا مِنَ الرِّجَالِ ، وَكُنَّا نَتَمَشَّطُ قَبْلَ ذَلِكَ فِي الْإِ
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ ، وَلَمْ يُخْرِجَاهُ 
அஸ்மாஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நாங்கள் ஆண்களிடமிருந்து எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம். இதற்கு முன்பே தலைவாரிக் கொள்வோம்.
நூல் : ஸஹீஹு இப்னி குஸைமா ,முஸ்தத்ரக் அலா ஸஹீஹைன் 1711.


விதி விலக்குஅடிமைப் பெண்ககள் மற்றும் முதியவர் ஹிஜாப் தேவை இல்லை


 لكن الحجاب الكامل للحرائر من النساء ، وأما الاماء وملك اليمين فلا يتشبهن بالحرائر في الحجاب الكامل ، فليس على الأَمَة أن تغطي وجهها ، وكان عمر رضي الله عنه يمنعهن من ذلك ، وهذا مع أمن الفتنة فيهن ، وأما إذا وجدت الفتنه فعليهن فعل ما يحول دون هذه الفتنة .
அடிமை பெண்கள் முகத்திரையிடுவதை உமர்(ரலி) அவர்கள் தடுத்தார்கள்.ஏனென்றால் அவர்கள் சுகந்திரமான பெண்களை ஒத்து இருப்பதை தவிர்ப்பதற்காக. ஆனால் அவர்களால் ஃபித்னா வரும் என இருந்தால் அவர்களும் முகத்திரை அணிவதே சிறந்தது.


حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ أَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلاَثَ لَيَالٍ يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ، فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ، وَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلاَ لَحْمٍ، وَمَا كَانَ فِيهَا إِلاَّ أَنْ أَمَرَ بِلاَلاً بِالأَنْطَاعِ فَبُسِطَتْ، فَأَلْقَى عَلَيْهَا التَّمْرَ وَالأَقِطَ وَالسَّمْنَ، فَقَالَ الْمُسْلِمُونَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، أَوْ مَا مَلَكَتْ يَمِينُهُ قَالُوا إِنْ حَجَبَهَا فَهْىَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهْىَ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ‏.‏ فَلَمَّا ارْتَحَلَ وَطَّأَ لَهَا خَلْفَهُ، وَمَدَّ الْحِجَابَ‏.‏
புகாரி 4213. அனஸ்(ரலி) அறிவித்தார்முஸ்லிம்கள் 'ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவி)-யரில் ஒருவரா? அல்லது நபி(ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?' என்று பேசிக் கொண்டனர். 'ஸஃபிய்யா அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்(டுக் கொள்ளும் படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்' என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.

24:60
وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاءِ اللَّاتِي لَا يَرْجُونَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَنْ يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ ۖ وَأَنْ يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌமேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
رقم الحديث: 12535
(حديث مقطوع) أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ ، أنبأ أَبُو سَعِيدِ بْنُ الأَعْرَابِيِّ . ح وَأَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ ، أنبأ إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، قَالا : نا سَعْدَانُ بْنُ نَصْرٍ ، ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ ، قَالَ : " كُنَّا نَدْخُلُ عَلَى حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ، وَقَدْ جَعَلَتِ الْجِلْبَابَ هَكَذَا ، وَتَنَقَّبَتْ بِهِ ، فَنَقُولُ لَهَا رَحِمَكِ اللَّهُ ، قَالَ اللَّهُ تَعَالَى : وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاءِ اللَّاتِي لا يَرْجُونَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَنْ يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ سورة النور آية 60 هُوَ الْجِلْبَابُ ، قَالَ : فَتَقُولُ لَنَا : أَيُّ شَيْءٍ بَعْدَ ذَلِكَ ؟ فَنَقُولُ وَأَنْ يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ سورة النور آية 60 ، فَتَقُولُ : هُوَ إِثْبَاتُ الْجِلْبَابِ " .

ஆஸிம் அல் அஹ்வால் அறிவிக்கிறார்: "நாங்கள் ஹஃபஸா பின்த் ஸிரீன் அவர்களிடம் செல்லக்கூடியவர்களாக இருந்தோம். அவர் -ஜில்பாப் அணிந்து முகத்தை மூடி இருந்தார். நாங்கள் அவரிடம் 'அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக! அல்லாஹ் 'பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை' என்று குறிப்பிடுகிறானே' என்று கூறினோம். அதற்கு அவர்கள் அந்த ஆயத்தில் அதன் பிறகு அல்லாஹ் என்ன கூறுகிறான்? 'ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும்' . இது இதுதான் ஜில்பாபின் கருத்து எனக் கூறினார். பைஹகி 7/93  இது சங்கிலித் தொடரால் ஹஸன் ஆனது. இதை ஷைக்  அல்பானி(ரஹி) 'ஜில்பாப் மர்அதுல் முஸ்லிமாஹ் ஃபில் கிதாபி  வஸுன்னா' என்ற புத்தகத்தில்  ஸஹீஹ் என்கிறார்கள்.
_______________________________________________________________

சிலர் முகத்தை திறக்க வேண்டும் என எடுத்து வைக்கும் ஆதாரங்கள்,
(அ) ஆதாரத்திற்கும் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கும் சம்பந்தமே இருக்காது
(ஆ) அடிமை பெண்கள் விடயமாக இருக்கும்
(இ) முதியவர் தொடர்பக இருக்கும்
(ஈ)  ஹிஜாப் இறங்குவதற்கு முந்திய சம்பவமாக இருக்கும்
உதாராணமாக சிலவற்றை பார்ப்போம்:

[1] புகாரி  6228, 1513. 
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْفَضْلَ بْنَ عَبَّاسٍ يَوْمَ النَّحْرِ خَلْفَهُ عَلَى عَجُزِ رَاحِلَتِهِ، وَكَانَ الْفَضْلُ رَجُلاً وَضِيئًا، فَوَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلنَّاسِ يُفْتِيهِمْ، وَأَقْبَلَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ وَضِيئَةٌ تَسْتَفْتِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَطَفِقَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَأَعْجَبَهُ حُسْنُهَا، فَالْتَفَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْظُرُ إِلَيْهَا، فَأَخْلَفَ بِيَدِهِ فَأَخَذَ بِذَقَنِ الْفَضْلِ، فَعَدَلَ وَجْهَهُ عَنِ النَّظَرِ إِلَيْهَا، فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ، فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ ‏ "‏ نَعَمْ ‏"‏‏.‏

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் இப்னு அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தம் கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரின் முகத்தைத் திருப்பிவிட்டார்கள்.
அப்போது அப்பெண், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (நிறைவேறும்)' என்று பதிலளித்தார்கள்.

1.) இதில் முகம் திறந்திருந்தது என எங்கே உள்ளது? அவர் வரும் ஓசை அல்லது அழகிய குரல் கேட்டு பார்த்திருக்கலாம் அல்லவா? ஏன் வெளி படுத்தும் கண்களை, மூடிய முகத்தையும் பார்த்திருக்கலாம் அல்லவா?
2.) இது ஹஜ்ஜில் பலி கொடுக்கும் நாளில் (யவ்முல் நஹ்ர்) நடந்தது. இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் முகத்தை மூடுவது கூடாது என பொதுவான விதி உள்ளதால், அவ்வாறு மூடாமல் இருந்திருக்கலாம்
3.) அவர் அடிமைப் பெண்ணாக இருக்கலாம்

இந்த பென்னை பற்றிய மேலும் அதிகமான தகவல் இமாம் திர்மிதி(ரஹி)  'அரஃபா பெருவெளி முழுவதும் தங்குமிடம்தான்' என்ற தலைப்பில் பதிந்துள்ளார்கள்

.‏ ثُمَّ أَفَاضَ حَتَّى انْتَهَى إِلَى وَادِي مُحَسِّرٍ فَقَرَعَ نَاقَتَهُ فَخَبَّتْ حَتَّى جَاوَزَ الْوَادِيَ فَوَقَفَ وَأَرْدَفَ الْفَضْلَ ثُمَّ أَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا ثُمَّ أَتَى الْمَنْحَرَ فَقَالَ ‏"‏ هَذَا الْمَنْحَرُ وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ ‏"‏ ‏.‏ وَاسْتَفْتَتْهُ جَارِيَةٌ شَابَّةٌ مِنْ خَثْعَمٍ فَقَالَتْ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ قَدْ أَدْرَكَتْهُ فَرِيضَةُ اللَّهِ فِي الْحَجِّ أَفَيُجْزِئُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ ‏"‏ حُجِّي عَنْ أَبِيكِ ‏"‏ ‏.‏ قَالَ وَلَوَى عُنُقَ الْفَضْلِ فَقَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ لِمَ لَوَيْتَ عُنُقَ ابْنِ عَمِّكَ قَالَ ‏"‏ رَأَيْتُ شَابًّا وَشَابَّةً فَلَمْ آمَنِ الشَّيْطَانَ عَلَيْهِمَا ‏"‏ ‏.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒட்டகத்தை நிறுத்தி ஃபள்ல் பின் அப்பாஸ்(ரலி) அவர்களை( தமது ஒட்டகத்தில்) பின்னால் ஏற்றிக் கொண்டார்கள். பிறகு 'ஜம்ரா' எனும்(கல்லெறியும்) இடத்துக்கு வந்து கல்லெறிந்தார்கள். பின்னர் அறுக்குமிடத்துக்கு (மினா) வந்து, "இது தான் அறுக்குமிடம் (அல்மன்ஹர்); மினா முழுவதும் அறுக்குமிடம்தான்" என்று கூறினார்கள்.
 

(யமன் நாட்டை சேர்ந்த) 'கஸ்அம் எனும்'  குலத்தை சேர்ந்த ஓர் இளம் அடிமைப்பெண் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், "என் தந்தை முதியவராக உள்ளார். இந்திலையில் அவருக்கு அல்லாஹ் விதியாக்கிய ஹஜ் கடமை ஏற்பட்டுள்ளது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று தீர்ப்புக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "உன் தந்தை சார்பாக நீ ஹஜ் செய்!" என்றார்கள்.
(அப்போது அந்த இளம் அடிமைப்பெண்ணையே ஃபள்ல் பின் அப்பாஸ்(ரலி) அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்)  அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஃபள்ல்(ரலி) அவர்களின் கழுத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள். அப்போது (ஃபள்லின் தந்தை) அப்பாஸ்(ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தந்தையின் சகோதரர் மகனுடைய கழுத்தை ஏன் வேறுபக்கம் திரும்பினீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "இவரை ஓர் இளைஞராகவும் அவளை ஓர் இளம் பெண்ணாகவும் நான் காண்கிறேன்: இவ்விருவர் விஷயத்திலும் ஷைத்தானை நான் அஞ்சுகிறேன் (இவரும் பார்க்க, அவரும் பார்க்க, ஷைத்தான் தீய எண்ணங்களை தூண்டிவிடலாம்)" என்றார்கள். (திர்மிதி:811)


முஸ்லிம் 1607: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி)அவர்கள் மீது சாய்ந்து கொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, "தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்" என்று கூறினார்கள்.
அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து "அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்" என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.

(1.) அவர் அடிமைப் பெண்ணாக இருக்க வாய்பிருக்கலாம்.
(2)  முதியவர் தொடர்பாக இருக்கலாம் .
(3)  ஹிஜாப் இறங்குவதற்கு முந்திய சம்பவமாக இருக்கலாம் .


முன்பு கூறியது போல், ஹிஜாப் இறங்குவதற்கு முன் உமர்(ரலி) அவர்கள் சவ்தா(ரலி) அவர்களை கண்டிருக்கிறார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள், "ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் என்னைப் பார்த்திருந்தார்".  அதே போல் நபி(ஸல்) அவர்கள் அடிமை பெண்களுக்குத் திரையிடவில்லை.


இன்று நாம் பெரும் 'sexually charged'  சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் இஸ்லாம் அல்லாத நாடுகளில் இஸ்லாமிய சிறுபாண்மையாக வாழ்கிறோம். பார்வையை தாழ்த்துவது,  முகத்தை திருப்புவது முஃமினான ஆண்களுக்கும், பெண்களுக்கும் தான்.  வேறு சமூகத்திரடம் சென்று பார்வையை தாழ்தித் கொள் என கூற முடியாது. நபி(ஸல்) அவர்கள், ஃபழ்ல்(ரலி) அவர்களின் முகத்தை திருப்பியது போன்று திருப்ப இயலாது

புர்கா போடும் பெண்களின் முக அழகில் மயங்கி பின்னால் சுற்றும் காட்சி பரவலாக காண முடிகிறது. வேற்று மதத்தவரை திருமணம் முடிப்பதை பரவலாக காண முடிகிறது. முகத்திறை அணிவதால், 'அவன் என்னை முறைக்கிறான்', 'அவன் என்னை பின் தொடர்கிறான்' , போன்ற புகார்கள் குறையும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.  பெண்களினால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முழுமையான ஹிஜாபே பெண்களுக்கு பாதுகாப்பு.
33:59 அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டுஎவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.


காண்க:
Ruling on covering the face, with detailed evidence  https://islamqa.info/en/11774
Verses and hadeeth about hijab  https://islamqa.info/en/13998
Is the hijaab only for a specific class of women? https://islamqa.info/en/8489
Debate sheik Assim and Sheik Usamah https://www.youtube.com/watch?v=aplllMwn0PU
PJ on covering face : http://www.onlinepj.com/pengal/Pengal_mukam_mooduthal_vimarsanam/#.WADRhtyTCnc
ஹிஜாப் ( பர்தா ) – பெண்களுக்கு அவசியம் ! https://tntjmpattinam.wordpress.com/2009/12/20/பர்தா-ஹிஜாப்-பெண்களுக்க/


No comments:

குளிக்கும் முறை

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ குளிக்கும் முறை: 1.நிய்யத் (குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்) 2. முன் கைக...