بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
இப்றாஹீம்(அலை) அவர்களின் நற்பன்புகளில் சில:
1. பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும்
இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார். [ஸூரத்துத் தவ்பா:114]
2. சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும்
நிச்சயமாக இப்றாஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். [ஸூரத்து ஹூது: 75]
3. நன்றி செலுத்துபவராக
அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; [ஸூரத்துந் நஹ்ல் :121]
4. நேரான உள்ளத்துடன்
(பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் சென்றார்.[ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்:84]
5. அல்லாஹ்வின் மீது முழு தவக்கல் உடையவராக
1. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று "விவசாயமில்லாத (பள்ளத்தாக்கமான கஃபாவின் அருகே விட்டுவிட்டு வந்த போது (ஸூரத்து இப்ராஹீம்:37)
2. நடந்து திரியக்கூடிய வயதை அடைந்த மகனை அறுத்துப் பலியிட கட்டளையிடப்படட போது (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்:102)
3. அவரை நெருப்பில் எறிய தயாரான போது, ஜிபிரில்(அலை) உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்க, "உங்களிடமிருந்து எந்த உதவியும் எனக்கு வேண்டாம் எனக் கூறினார். (இபின் கதீர் ஸூரத்துல் அன்பியா:69)
6. மனிதர்களுக்கு தலைவராக
இறைவன் "நிச்சயமாக நான் உங்களை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக் கூடிய) தலைவராக ஆக்கினேன்" எனக் கூறினான். [ஸூரத்துல் பகரா :124]
7. அல்லாஹ்வின் நண்பராக
அல்லாஹ் இப்றாஹீமை(த் தன்னுடைய) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கின்றான். [ஸூரத்துன்னிஸா:125]
8. உண்மையானவராகவும் நபியாகவும்
நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராகவும் நபியாகவும் இருந்தார். [ஸூரத்து மர்யம்:41]
9. நல்ல இஸ்லாமிய அழைப்பாளராக
1. நம்ரூத் மன்னன் அல்லாஹ்வை பற்றி இப்ராஹிம்(அலை) அவர்களிடம் தர்க்கம் புரிந்த போது அழகிய முறையில் பதில் கொடுத்தார்(ஸூரத்துல் பகரா :258)
2. நளினமாகவும் மென்மையாகவும் தனது தந்தையை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார் [ஸூரத்து மர்யம்:41-48]
3. தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி இஸ்லாத்தின் பால் அழைத்தார் [ஸூரத்துஷ்ஷுஃரா:70- 82]
2. நளினமாகவும் மென்மையாகவும் தனது தந்தையை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார் [ஸூரத்து மர்யம்:41-48]
3. தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி இஸ்லாத்தின் பால் அழைத்தார் [ஸூரத்துஷ்ஷுஃரா:70- 82]
10. இப்ராஹிம்(அலை) நல்ல தனையனாக
அவர் "என் அருமைத் தந்தையே!" என்று அழைத்து மிக நளினமாகவும் மென்மையாகவும் இஸ்லாத்தின் பால் அழைத்தார் [ஸூரத்து மர்யம்:41-48]
கல்லாலெறிந்து கொல்வேன் என்று கூறிய பிறகும், ஸலாம் கூறி "நான் உங்களுக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன்" எனக் கூறினார். [ஸூரத்து மர்யம்:47]
11. இப்ராஹிம்(அலை) நல்ல தந்தையாக
அல்லாஹ் மனிதர்களுக்கு எல்லாம் தலைவராக ஆக்கியபோது, (இப்றாஹீம்) "என்னுடைய சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்?)" எனக் கேட்டார். [ஸூரத்துல் பகரா :124]
என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக! [ஸூரத்து இப்ராஹீம் :40]
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய்.”, என்று தமக்காகவும் தமது தனையனுக்காகவும் பிரார்த்தித்தார் [ஸூரத்துல் பகரா :127]
என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக! [ஸூரத்து இப்ராஹீம் :35]
இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.” [ஸூரத்துல் பகரா :132]
12. முன் பின் அறியாதவருக்கும் சிறந்த விருந்து அளிப்பவராக
அறிமுகமில்லா மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணிக் கொண்டு,) விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டு வந்து, அதனை அவர்கள் முன் வைத்தார். [ஸூரத்துத் தாரியாத் :24-27]