அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
1. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ{ஹரைரா அற்விக்கின்றார்கள், 'ஆயத்துல் குர்ஸியை யார் காலையில் ஓதுவாரோ, அவர் மாலை வரை ஜின்களை விட்டு பாதுகாக்கப்படுவார்;- மாலையில் ஓதியவர் காலை வரை பாதுகக்கப்படுவார்'. (முஸ்தத்ரகுல் ஹதீஸ்இ திர்மிதி:3120இ அல்ஹாகிம்:562, ஸஹீஹ் தர்கீப் வத் தர்ஹீப்:273)
2. அப்துல்லாஹ் இப்னு ஹூபைப்;(ரழி) அறிவிக்கின்றார்கள்: 'காலையிலும், மலையிலும் 'குல்ஹூவல்லா{ஹ அஹது' அத்தியாயம் மற்றும்(குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் என்ற) இரண்டு முஅவ்விதய்ன் அத்தியாயத்தையும் மூன்று தடவை நீர் கூறுவீராக! அனைத்துப் பொருட்களின் தீமையை விட்டும்(உம்மை பாதுகாத்திட) உமக்கு அது போதும்' என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள். (அபுதாவூத்:5082, திர்மிதி:3575, ரியாளுஸ் ஸாலிஹீன்:1456)
3. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை நேரத்தை அடையும்போது, 'அம்சைனா வஅம்சல் முல்க்கு லில்லாஹ்;வல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ இல்லல்லா{ஹ, வஹ்த{ஹ, லாஷரீக்கல{ஹ' என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை.)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹசன் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஸுபைத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்களிடமிருந்து பின்வருமாறு கூடுதலாக மனனமிட்டதாகவும் என்னிடம் அறிவித்தார்கள்: ல{ஹல் முல்க்கு வ ல{ஹல் ஹம்து. வ{ஹவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லா{ஹம்ம! அஸ்அலுக்க கைர ஹாதி ஹில் லைலா. வ அஊது பிக்க மின் ஷர்ரி ஹாதிஹில் லைலா. வ ஷர்ரி மா பஅதஹா. அல்லா{ஹம்ம! இன்னீ அஊது பிக்க மினல் கசலி, வ சூயில் கிபர். அல்லா{ஹம்ம! இன்னீ அஊது பிக்க மின் அதாபின் ஃபிந்நாரி, வ அதாபின் ஃபில்கப்ர்.
(பொருள்: ஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! உன்னிடம் நான் இந்த இரவின் நன்மையை வேண்டுகிறேன். மேலும், உன்னிடம் நான் இந்த இரவின் தீங்கிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! சோம்பலிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! நரக நெருப்பிலுள்ள வேதனையிலிருந்தும் மண்ணறையிலுள்ள வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.) (முஸ்லிம்: 5267.)
4. அபூஹூரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்: நபி(ஸல்) அவர்கள் காலை நேரத்தில், 'அல்லா{ஹம்ம பிக அஸ்பஹ்னா வபிக அம்ஸைய்னா, வபிக நஹ்யா, வபிக நமூத்து, வஇலைய்கன்னு{ர்' என்று கூறுவார்கள். மாலை நேரத்தில், 'அல்லா{ஹம்ம பிக அம்ஸைய்னா, வபிக நஹ்யா, வபிக நமூத்து வஇலைய்கள் மஸீர்', என்று கூறுவார்கள்(திர்மிதி:3391, அபுதாவூத்:5068, ரியாலுஸ் ஸாலிஹீன்:1453, புலூகுல் மராம்:1590 இதை 'ஹஸன் என இமாம் திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்)
5. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லா{ஹம்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்ன{ஹ லா யஃக் ஃபிருத் துனூப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து' என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும்.
(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
மாலை நேரத்தில் ஒருவர் இதைச் சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்தால் அவர் (சொர்க்கம் செல்வார்' அல்லது சொர்க்கவாசியாவார்' காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்தால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்) என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி:6323)
6. அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹூ அன்{ஹ கூறுகிறார்கள்: எவர் காலையை அடைந்ததும்: 'யா அல்லாஹ்! நிச்சயமாக நாம் காலையை அடைந்துவிட்டோம். உன்னை சாட்சியாக வைக்கிறேன். இன்னும் உன் அர்ஷை சுமக்கக் கூடியவர்களையும், உன் மலக்குமார்களையும், உன் அனைத்துப் படைப்பினங்களையும் சாட்சி ஆக்குகிறேன். நிச்சயமாக நீதான் இறைவன். உன்னைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் யாருமில்லை. நீ தனித்தவன். உனக்கு இணையேதும் கிடையாது. நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உன் அடியாராகவும், திருத்தூதராகவும் இருக்கிறார்கள்.' என்ற துஆவை ஒருமுறை ஓதுகிறாரோ அல்லாஹ் அவனுடைய நாளில் ஒரு பகுதியை நரகத்திலிருந்து உரிமைவிட்டுவிடுவான். எவர் இருமுறை கூறுகிறாரோ அவருடைய மறு பாதியை நரகத்திலிருந்து உரிமைவிட்டுவிடுகிறான். எவர் நான்கு முறை கூறுகிறாரோ அவரை அந்நாள் முழுமையாக அல்லா{ஹத் தஆலா நரகிலிருந்து உரிமைவிட்டு விடுகிறான்.' (அல்-அதபுல் முஃபரத்:1201, அபுதாவூத்:5078)
7. அப்துல்லாஹ் இப்ன் கன்னாம் (ரழி) அறிவிக்கிறார்கள்: ஒருவர், 'யா அல்லாஹ்! இந்த காலைப் பொழுதில் என் மீது அல்லது உனது படைப்பினத்தில் எவர் மீதாவது ஏதேனும் அருட்கொடை பொழிதிருந்தால், அது உன்னிடமிருந்து கிடைத்ததாகும். நீ தனித்தவன்; உனக்கு யாதொரு இணையுமில்லை, புகழ் அனைத்தும் உனக்கே; எல்லா நன்றியும் உனக்கே!' என்று காலயில் கூறினால், அவர் அன்றைய பகலுக்கான நன்றியை நிறைவேற்றியவர் ஆவார். மாலை நேரத்தில் கூறியவர் அன்றைய இரவுக்கான நன்றியை நிறைவேற்றியவர் ஆவார். (அபூதாவூத்:5073)
8. அப்துர்ரஹ்மான் இப்ன் அபூபக்ரா, அவர் தந்தையிடம், 'என் தந்தையே! நீங்கள் ஒவ்வொரு காலை மற்றும் மாலை மும்முறை,யாஅல்லாஹ்! எனது உடலில் நலன் அருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலன் அருள்வாயாக! யா அல்லாஹ் எனது பார்வையில் நலன் அருள்வாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர யாருமில்லை!' என்று கூறுவதை செவியுறுகிறேன், என்று கூறினார். அவரது தந்தை: 'நான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன். நீயும் அவ்வாறு கூறுவதை விரும்பிகிறேன்', என கூறினார்.
இதன் அறிவிப்பாளர் அப்பாஸ் இப்ன் அப்துல் அளீம் தனது அறிவிப்பில், 'நீ மும்முறை காலை மற்றும் மாலை, 'யா அல்லாஹ் இறைநிராகரிப்பை விட்டும், வறுமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறென். மண்ணறையின் வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை, என்று பிரார்திப்பதை நான் விரும்புகிறேன்', என்று கூறினார்கள்.(அபூதாவுத்:5090, சங்கிலித் தொடரால் இது ஹஸன் ஆனது என ஷைக் அல்பானி கூறுகிறார்கள்)
9. அபூதர்தா அவர்கள் கூறுகிறார்கள்: 'எவர் ஒருவர், எனக்கு அல்லாஹ்வே போதுமானவன், வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் மகத்தான அர்ஷின் அதிபதி ஆவான், (ஸூரத்துத் தவ்பா:129) என்று ஏழு முறை கூறுவாரோ அவர் வாய்மையாளராக இருப்பினும், பொய்யராக இருப்பினும் அவருடைய துக்கத்திற்கு அல்லாஹ் போதுமானவனாகிறான்'. (அபூதாவூத்:5081, அமலுல் யவ்ம் வல்லைலா -இப்ன் ஸின்னி ஹதீஸ் எண் 72 - இந்த நபிமொழியின் ஆறிவிப்புத் தொடர் சிறந்ததாகும்)
10. இப்ன் உமர்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்; நபி(ஸல்) அவர்கள் காலையிலும், மாலையிலும், 'யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் இம்மையிலும், மறுமையிலும் ஆரோக்கியத்தை தேடுகிறேன். யா அல்லாஹ்! நான் உன்னிடம் எனது மார்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்ப வாழ்விலும், எனது செல்வத்திலும், மன்னிப்பையும், நலனையும் நான் உன்னிடம் யாசிக்கிறேன்! யா அல்லாஹ் என்னுடைய பலவீனங்களை மறைப்பாயாக! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதி தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்பிருந்தும், பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும், எனக்கு மேலிருந்தும், எனக்கு பாதுகாப்பு அளிப்பாயாக! கீழே இருந்தும் எதிர்பாராதவிதமாக நான் கொல்லப்படுவதிலிருந்தும், உனது கண்ணியத்தை கொண்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன்', என்று ஓதுவதை விட்டதே இல்லை. ( அபுதாவூத்:5074 - இப்னு மாஜா:3871- அல்-அதபுல் முஃபரத்:1200 - புலூகுல் மராம்: 1586)
11. அபூ{ஹரைரா(ரழி) அறிவிக்கின்றார்கள்: 'இறைத்தூதர் அவர்களே! காலையிலும், மாலையிலும் நான் கூறக் கூடிய சில வார்த்தைகளை எனக்கு கற்றுத் தாருங்கள்', என்று நபி(ஸல்) அவர்களிடம் அபூபக்கர் சித்தீக்(ரழி) கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'யா அல்லாஹ்! மறைவானவை- வெளிப்படையானவை அனைத்தும் அறிந்தவனே! வனங்களையும், பூமியையும் படைத்தவனே! ஒவ்வொரு பொருளின் இரட்சகனாகவும், எஜமானனாகவும் இருப்பவனே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன்! எனது மனத்தின் தீமையை விட்டும், ஷைத்தானின் தீமையை விட்டும் அவனது 'ஷிர்க்'ஐ விட்டும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்! மேலும் என் மனத்தின் மீது ஏதேனும் தீமை செய்வதை விட்டும், அல்லது அந்த தீமையை ஒரு முஸ்லிம் மீது செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்! என்று கூறு' என்று நபி(ஸல்) கூறிவிட்டு, காலையிலும், மாலையிலும் நீர் இதை படுக்கைக்கு செல்லும் போதும் இதை கூறுவீறாக!' என்று கூறினார்கள். (திர்மிதி:3392, அபுதாவூத்:5067, ரியாலுஸ் ஸாலிஹீன்:1454)
12. உஸ்மான் இப்னு அஃப்பான்(ரழி) அறிவிக்கின்றார்கள்: 'ஒவ்வொரு நாள் காலையிலும், ஒவ்வொரு முன் இரவிலும், 'பிஸ்மில்லாஹ்ஹில்லஃதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ழி வலா ஃபிஸ்ஸமாஇ வ{ஹவஸ் ஸமீஉல் அலீம்',
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால்... அவன் எத்தகையவனென்றால் அவனது பெயருடன் பூமியிலும், வானத்திலும் எதுவும் எந்த இடையூறும் செய்யாது. அவனே அனைத்தையும் கேட்பவன்; நன்கறிந்தவன்!) என்று மூன்று தடவை கூறும், எந்த பொருளும் தீமையும் செய்து விடுவதில்லை' என்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதி:3388, அபுதாவூத்:5088, ரியாலுஸ் ஸாலிஹீன்:1457)
13. தவ்பான்(ரழி) அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'எவர் ஒருவர் மாலை பொழுதை அடைந்ததும், 'நாங்கள் அல்லாஹ்வை எங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அதிபதி என்றும், இஸ்லாத்தை (சரியான) மார்க்கமென்றும், முஹம்மத்(ஸல்) அவர்களை இறைத்தூதர் என்றும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம்' என்று கூறுவாரோ, அவரை திருப்திபடுத்துவது அல்லாஹ்வின் மீது பொருப்பாகின்றது' .(திர்மிதி:3389, இப்னு மாஜா:3870)
14. அனஸ் இப்ன் மாலிக்(ரழி) அறிவிக்கிரார்கள், : நபி(ஸல்) அவர்கள் ஃபாத்திமா(ரழி) அவர்களிடம் : காலை மற்றும் மாலை 'நீத்திய ஜீவனே! (பேரண்டம் முழுவதையும்) நிர்வகிப்பவனே! உனது அருளைக் கொண்டு இரட்சிக்கத் தேடுகின்றேன். என்னுடைய எல்லாக் கரியங்களையும் சீர்படுத்துவாயாக! கண் இமைக்கும் நேரத்திற்குக் கூட என்னை (உனது பாதுகப்பை விடுத்து) என் பொறுப்பில் விட்டு விடாதே!' என பிரார்திப்பதை விட்டும் எதுவும் தடுத்திவிட வேண்டாம்' என கூறினார்கள். (ஹாகிம் முஸ்தத்ரக் 1ஃ730, திர்மிதி:3524)
15. அபீ மாலிக்(ரழி) அறிவிக்கின்றார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் காலை பொழுதை அடைந்தால், 'நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். அகிலம் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே ஆட்சியதிகாரம் என ஆகிவிட்டது. யா அல்லாஹ்! இந்நாளின் நலனையும்- அதன் வெற்றி, உதவி, ஒலி, அருட்பாக்கியம், நேர்வழி அனைத்தையும் நான் உன்னிடம் யாசிக்கிறேன்! மேலும் இந்நாளின் தீமையை விட்டும் இதன் பின் வரும் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்', என்று கூற வேண்டும். அதைபோன்று மாலையிலும்; கூறவேண்டும்'. (அபூதாவூத்:5084, அல் முஃஜமுல் கபீர் லித் தபரானி:3374,3377)
16. ஸயீத் இப்ன் அப்திர்ரஹ்மான் பின் அப்ஸை அவர்களது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள், 'நாங்கள் இஸ்லாத்தின் இயல்பு நிலையின் மேதும் வாய்மையின் வார்தையின் மீதும் எங்கள் நபி முஹம்மத்(ஸல்) அவர்களின் மார்கத்தின் மீதும், எங்கள் தந்தை இப்ராஹீம்(அலை) அவர்களின் வழிமுறையின் மீதும் - காலை பொழுதை அடைந்தோம். இப்ராஹீம் நபி அவர்கள் ஓர் இறைக்கொள்கையுடையவராகவும் (ஹனீஃப்), இறைவனுக்கு கீழ்படிந்தவராகவும் இருந்தார். இணைவைப்பவர்களில் ஒருவராய் இருக்கவில்லை' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்:15059)
17. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை 'சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி' (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர. இதை அபூ{ஹரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்:5222, ரியாலுஸ் ஸாலிஹீன்:1451)
18. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் - லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்த{ஹ லாஷரீக்க ல{ஹ, ல{ஹல், முல்க்கு வ ல{ஹல், ஹம்து, வ {ஹவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமாக (முறை இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. என அபூ {ஹரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி:3293)
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 'லாயிலாஹ இல்லல்லா{ஹ வஹ்த{ஹ லா ஷரீக்க ல{ஹ, ல{ஹல் முல்க்கு வல{ஹல் ஹம்து, வ{ஹவ அலா குல்லி ஷையின் கதீர்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் பத்து முறை ஓதுகிறாரோ அவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் நால்வரை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலை செய்தவரைப் போன்றவர் ஆவார். (முஸ்லிம்:5221-5223)
19. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்{ஹத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், 'நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், 'நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)' என்றார்கள்.
(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)(முஸ்லிம்:5272)
20. உம்மு ஸலமா(ரழி) அறிவிக்கின்றார்கள் : நபி(ஸல்) அவர்கள் சுபஹ் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்ததும், 'அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியை, தூந்மையான(ஆகுமான) உணவை, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமலை கேட்கிறேன்' என கூறுவார்கள். (ஸுனன் இப்ன் மாஜா:978)
21. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளும் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
இதை அஃகர்ரு பின் யசார் அல்முஸனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்:5234)
22. அபூ{ஹரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் ஒன்று கொட்டிவிட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன்' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ மாலைப் பொழுதை அடையும்போது, 'அஊது பிகலி மாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' என்று கூறியிருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது' என்று கூறினார்கள்.(முஸ்லிம்:5248)
23. அபூதர்தா(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'எவர் ஒருவர் என்மீது காலையிலும் மாலையிலும் பத்து முறை ஸலவாத் கூறுவாறோ, அவருக்கு என்னுடைய ஷஃபா அத் கிடைக்கும்'. (தப்ரானி, ஸஹீஹ் ஜாமி:6357)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:என்மீது ஸலவாத் சொல்லுங்கள். என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம்:628)