بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
பிறருக்கு செய்தியை அனுப்பும் முன்
ஒரு செய்தியை நாம் அனுப்புவதற்கு காரணம், நண்மை ஏவி தீமையை தடுக்கும் நபராக நாம் இருக்க வேண்டும். அவர்கள் அதன் மூலம் நண்மை செய்யும் பட்சத்தில், அந்த நண்மையில் நமக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என்பதால் தான்.
அந்த ஆர்வத்தில் பல தவறுகளும் நடை பெறுவதுடன் நண்மைக்கு பதிலாக தீமையும் வந்து சேருகின்றது. ஆதலால் ஒரு செய்தியை பிறருக்கு அனுப்பும் முன் சிலவற்றை நாம் பேணிக்கொள்ள வேண்டும். அவற்றை இங்கு பார்கலாம்
1. செய்தியின் உறுதி தண்மை
நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டுப் பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். (49:6)
மேலும் (யுத்த) அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே, அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர், (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள், மேலும் (விசுவாசிகளே!) அல்லாஹ்வுடைய பேரருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், (உங்களில்) குறைவானவர்களைத் தவிர நீங்கள் யாவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். (4:83)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம். (ஸஹீஹ் முஸ்லிம் முன்னுரை)
யார் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.(புகாரி3461)
2. முதலில் நாம் பின்பற்றுதல்
ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வந்து, இப்னு அப்பாஸ் அவர்களே! நான் (மக்களுக்கு) நன்மையை ஏவி தீமையில் இருந்து (அவர்களைத்) தடுக்க விரும்முபிறேன்" என்று கூறினார். அதற்கு அவர்கள், "நீர் அதற்கு தகுது பெற்றுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "(தகுதி பெற்றிருப்பதாகக்) கரூதுகிறேன்" என்று கூறினார். அதற்கு அவர்கள் அந்த் மனிதரிடம், "அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள மூண்று வசணங்களின் முலம் இழிவடைவதை நீர் அஞ்சவில்லையாயின் அவ்வாறு செய்து கொள்ளலாம்" என்று கூறினார்கள். "அந்த வசனங்கள் யாவை?" என அவர் வினவினார்.
அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள்,
"நீங்கள் வேதத்தை ஒதிக்கொண்டு உங்களை மறந்து விட்டு, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு நீங்கள் ஏவுகின்றீர்களா? இதனை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?" (2:44) எனும் அல்லாஹ்வின் கூற்று முதல் வசனமாகும். இதை (மனதில்) நன்கு பதித்து கொண்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'இல்லை' என்று பதிலளித்துவிட்டு, இரண்டாம் வசனம் என்ன?" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்,
"விசுவாசங்கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்.நீங்கள் செய்யாததை(ப்பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரிதாகிவிட்டது." (61:2-3) எனும் அல்லாஹ்வின் கூற்றாகும். இதை (மனதில்) நன்கு பதித்து கொண்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'இல்லை' எனக் கூறிவிட்டு , மூன்றாம் வசனம் என்ன?" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்,
"என்னுடைய சமூகத்தாரே! என் இரட்சகனின் தெளிவான அத்தாட்சியின மீது நான் இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான உணவை வழங்கி இருப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? (ஆகவே) நான் (தீமையிலிருந்து) எதைவிட்டும் உங்களைத் தடுக்கின்றேனோ அதன்படி (தீமையானவற்றைச் செய்துகொண்டு) உங்களுக்கு மாறு செய்வதையும் நான் நாடவில்லை, என்னால் இயன்ற மட்டும் (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறெதையும்) நான் நாடவில்லை, எனக்கு நல்லுதவி அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை, (என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அவன் மீதே நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன், அவன்பாலே நான் மீளுகிறேன் என்று கூறினார். " (11:88) ஆகும் இதை (மனதில்) நன்கு பதித்து கொண்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'இல்லை' என்றே கூறினார். அப்படியானால், உன்னிலிருந்தே (சீர்திருத்தப் பணியைத்) துவங்கு' என்று அந்த மனிதரிடம் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்,"(மேற்கண்ட) மூன்று இறைவசன்ங்கள் இருக்கின்ற காரணத்தால் (பிறருக்கு) உபதேசம் செய்வதை நான் விரும்பவில்லை.
No comments:
Post a Comment