بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
இமாம் ஓதுவதை நிறுத்தினால், அல்லது தவறு செய்தால், பின் தொடர்ந்து தொழுபவர் இமாமுக்கு நினைவூட்டி திருத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
حَدَّثَنَا يَزِيدُ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ بْنِ زَبْرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةً فَقَرَأَ فِيهَا فَلُبِسَ عَلَيْهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لأُبَىٍّ " أَصَلَّيْتَ مَعَنَا " . قَالَ نَعَمْ . قَالَ " فَمَا مَنَعَكَ " .
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் குர்ஆனை ஓதினார்கள். அப்பொழுது அவர்கள் (அதில்) குழப்பமடைந்தார்கள். (தொழுகையை) முடித்ததும், உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், "நீங்களும் எங்களுடன் சேர்ந்து தொழுதீர்களா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்." அவர் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "உங்களை (என்னைத் திருத்துவதை) தடுத்தது எது?" என்று வினவினார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (அபுதாவூத்:970)
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இமாம்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தோம்." [அல்-ஹாகிம்]
அல்-ஹாஃபித் இப்னு ஹஜர் கூறுகையில், ‘அலி(ரலி) அவர்கள் கூறியதாக அப்துர்-ரஹ்மான் அஸ்-சுலமி கூறினார்கள்: "இமாமின் திருத்தம், அல்லது நினைவூட்டல் தேவை என்று நீங்கள் உணர்ந்தால் அவ்வாறு (சரிசெய்யவும் அல்லது நினைவூட்டவும்) செய்யுங்கள் "
அத்தகைய தவறு சூரா அல்ஃபாத்திஹாவை ஒதுவதில் ஏற்பட்டால், அத்தவறை சரி செய்யாதவரை தொழுகை செல்லாது. ஏனென்றால்
குர்ஆனின் தோற்றுவாய் (எனும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை) ஓதாத வருக்குத் தொழுகையே கிடையாது.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 756)
அல்-ஃபாத்திஹாவைத் தவிர வேறு அத்தியாயங்களை ஓதும்போது வசனங்களை அவர் கவனிக்கவில்லை என்றால், தொழுகை செல்லுபடியாகும்.
ஓதுவதில் திறமையான ஒருவரைத் தவிர வேறு யாரும் இமாமாக இருக்கக்கூடாது, அப்படிபட்ட ஒருவர் உங்களிடம் இருக்கும்போது அவரைத் தவிர வேறு யாரும் இமாமாக இருக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Source: https://www.islamweb.net/en/fatwa/4195/correcting-the-imaam
No comments:
Post a Comment