Monday, July 21, 2014

காஃபிர், பித்அத்வாதி என்று தீர்ப்பு??

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ


ஒரு தனி நபருக்கு காஃபிர் என்று தீர்ப்பு கொடுக்கலாமா?

[4:94] விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால், (வழியில் எதிர்படுவோர் யார் என்பதை) தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஸலாம் கூறியவறை இவ்வுலக வாழ்க்கைக்குறிய (அற்பப்) பொருளை நீங்கள் தேடியவர்களாக, "நீ விசுவாசியல்ல" என்று கூறி (அவரை கொன்று) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான போர்பரிசுகள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து கொண்டு) இருந்தீர்கள்; அப்பொழுது அல்லாஹ் உங்கள் மீது பேருபகாரம் செய்தான்; ஆகவே( உங்கள் முன் இருப்பவர்கள், விசுவாசிகளா அல்லவா என்பதைத்) தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்பவனாக இருக்கின்றான். 

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمَرَ، أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ، حَدَّثَهُ عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ يَرْمِي رَجُلٌ رَجُلاً بِالْفُسُوقِ، وَلاَ يَرْمِيهِ بِالْكُفْرِ، إِلاَّ ارْتَدَّتْ عَلَيْهِ، إِنْ لَمْ يَكُنْ صَاحِبُهُ كَذَلِكَ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் மற்றவரை பாவி (ஃபாஸிக்) என்றோ (இறை மறுப்பாளன் (காஃபிர்) என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பி விடுகின்றது. இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [ஸஹீஹுல் புகாரி : 6045]

وعن عتبان بن مالك رضي الله عنه في حديثه الطويل المشهور الذي تقدم في باب الرجاء قال‏:‏ قام النبي صلى الله عليه وسلم يصلي فقال‏:‏ ‏ "‏أين مالك بن الدخشم‏؟‏ فقال رجل‏:‏ ذلك منافق لا يحب الله ورسوله، فقال النبي صلى الله عليه وسلم‏:‏ “لا تقل ذلك ألا تراه قد قال‏:‏ لا إله إلا الله يريد بذلك وجه الله‏!‏ وإن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏
இத்பான் இப்னு மாலிக்(ரழி) அறிவிக்கின்றார்கள்:
தொழ வைக்க நபி(ஸல்) அவர்கள் நிற்கும் போது, "மாலிக் இப்னு துக்ஷூம் எங்கே?" என்று கேட்டார்கள். அப்பொழுது ஒருவர், "அவர் முனாபிக். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விரும்பமாட்டார்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், "அவ்வாறு கூறாதீர்! "லாயிலாஹ இல்லல்லாஹ்" என அல்லாஹ்வி திருப்தியை நாடியவராக அவர் கூறியதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் அவனது திருப்தியை நாடி "லாயிலாஹ இல்லல்லாஹ்"  என்று கூறுபவரை நரகிலிருந்து தடை செய்து விட்டான்" என்று கூறினார்கள். புகாரி:425, முஸ்லிம் 33/263

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், 'உஸாமாவே! அவர், 'லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான், '(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்" என்று கூறினேன். அதற்காகத்தான் சொன்னாரா? இல்லையா? என நீர் அறிவதற்காக அவரின் உள்ளத்தை நீர் பிளந்திருக்கலாமே?" என்று கூறினார்கள். [ரியாளுஸ்ஸாலிஹீன்:393]

قَالَ ثُمَّ وَلَّى الرَّجُلُ فَقَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ يَا رَسُولَ اللَّهِ أَلاَ أَضْرِبُ عُنُقَهُ فَقَالَ ‏"‏ لاَ لَعَلَّهُ أَنْ يَكُونَ يُصَلِّي ‏"‏ ‏.‏ قَالَ خَالِدٌ وَكَمْ مِنْ مُصَلٍّ يَقُولُ بِلِسَانِهِ مَا لَيْسَ فِي قَلْبِهِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنِّي لَمْ أُومَرْ أَنْ أَنْقُبَ عَنْ قُلُوبِ النَّاسِ وَلاَ أَشُقَّ بُطُونَهُمْ ‏"
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மனிதர் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?" என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்" என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், "எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறினார்கள். [ஸஹீஹ் முஸ்லிம்: 1922]

காஃபிர் என தீர்ப்பு வழங்கும் நிபந்தனைகள்:

1. மார்க ஆய்வுகளின் அடிப்படையில் அமல் செய்பவர்களை காஃபிர் என்று கூறமுடியாது. உதாரனமாக 
"இமாம் அஹ்மத் நபி(ஸல்) அவர்களின் மூலம் தவஸ்ஸூல் தேடுவதை அனுமதித்திருந்தார்கள் 
இமாம் அஷ்ஷவ்கானி நபி(ஸல்) அவர்கள், மற்ற இறைத்தூதார்கள், இறைநேசகர்கள் மூலமாக தவஸ்ஸூல் தேட அனுமதித்திருந்தார்கள் - [தவஸ்ஸூல், அதன் வகைகள் அதன் சட்டங்கள் இமாம் அல்பானி]. https://sites.google.com/site/ourislamicebooks/books-of-shaykh-al-albaani/tawassul-typesandrulings.doc

2. புரிந்து கொள்வதற்க்காக கேட்கப்டும் கேள்விக்காக காஃபிர் என்று கூறமுடியாது
5:112. ''மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?'' என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், ''நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
"இறைவன்  உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று  கேட்பது குஃப்ர் ஆகும். இருப்பினும் அல்லாஹ் ஹவாரிய்யூன்களை மன்னித்துவிட்டான்

3.
அறியாமையின் காரணமாக அமல்களில் குப்ர் செய்பவரை காஃபிர் என்று கூற முடியாது. ஆனால் அவர்களிடம் உண்மையை தெளிவு படுத்தவேண்டும்
உதாரனமாக:
[7:138] அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سِنَانِ بْنِ أَبِي سِنَانٍ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا خَرَجَ إِلَى خَيْبَرَ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَهَا ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى ‏:‏ ‏(‏اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ ‏)‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَأَبُو وَاقِدٍ اللَّيْثِيُّ اسْمُهُ الْحَارِثُ بْنُ عَوْفٍ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ ‏.‏

ஹுனைனை நோக்கிச் செல்லும் வழியில் முஸ்லிம்கள் பசுமையான மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்றைக் கண்டார்கள். அம்மரத்தை ‘தாத் அன்வாத்’ என்று அரபிகள் அழைத்தனர். அக்காலத்தில் அதில் தங்களது வாட்களை தொங்க விடுவர். அங்கு தங்கி பிராணிகளைப் பலியிடுவர். தங்களின் சிலை வழிபாடுகளுக்கு அதை பாக்கியம் பொருந்திய ஒன்றாகக் கருதி வந்தனர். அம்மரத்தைப் பார்த்தவுடன் படையிலிருந்த சிலர் “அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிக்குகளுக்கு ‘தாத் அன்வாத்’ இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு ‘தாத் அன்வாத்’ ஏற்படுத்தித் தாருங்கள்” என்றனர். நபி (ஸல்) “அல்லாஹு அக்பர்! முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! ‘அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள்! நிச்சயமாக நீங்கள் அறியாத கூட்டத்தினர். இதுதான் சென்று போனவர்களின் வழிமுறையாகும். உங்களுக்கு முன் சென்றவர்களின் வழிமுறைகளையே நிச்சயமாக நீங்களும் பின்பற்றுவீர்கள்” என்று எச்சரித்தார்கள். (முஸ்னது அஹ்மது, ஜாமிவுத் திர்மிதி 2180)

4. நிர்பந்ததினால் குப்ர் ஏற்பட்டால் அவர் காஃபிர் என அழைக்கபட மாட்டார்
16:106. எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
இதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களின் சம்பவத்தையும் உதாரணமாக கூறலாம். [தப்ஸீர் தபரி]

5. உணர்ச்சி மேலீட்டால் குப்ர் ஏற்பட்டால் காஃபிர் எனப்ப்படமாட்டாது
அவர், ("இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை" என்று சொல்வதற்குப் பதிலாக) "இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன்" என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். இந்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.
ஆனால் இவ்வாறு கூறுவது கேலி கிண்டலுக்காக கூறுவது போல் அல்ல. [9:65]

6. தக்ஃபீர் ஒரு காதியால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இதை தவறுதலாக உபயோக படுத்துவதால் தனி மனித உரிமைகள் பரிக்கப்படுகின்றன. அது பெரும் பாவமாகும்.
7. ஷிர்க் இரு வகை படும். ஷிர்க் கல்பி (இதயப்பூர்வமான), ஷிர்க் லஃப்தி (வெளிப்படையான ஷிர்க்). ஒருவர் ஷிர்க் செய்தால் அவரிடம் அவரிடம் அதை பற்றி தீர விசாரிக்க வேண்டும். அவரிடம் பதில் கோர வேண்டும். அவருக்கு ஆதாரங்களை தெளிவாக்க வேண்டும். அவ்வாறு செய்தும் அவர் அதில் மூழ்கி இருந்த்தால் அவரை ஒதுக்க வேண்டும். [அல்பானி (ரஹ்) அல் ஹூதா வன் நூர்:574.]

வரலாறு:
1. நபித்தோழர்கள் (ரலி) கவாரிஜிக்களுக்கு ஜனாஸா தொழ வைத்தார்கள். அவர்களின் போர் செல்வங்களை எடுக்கவைல்லை , ஆனால் அவற்றை இறந்தவர் குடும்மங்களுக்கு பங்கிட்டார்கள்.
2.அல்பானி (ரஹ்) ஹஜ்ஜாஜ் இப்ன் யூஸுஃப் அத்தகாஃபியை காஃபிர் என கூற மறுத்ததுடன் அதை வன்மையாக கண்டிக்கிறார்கள் [பஃத்வா அல்-மதீனா:14]
3. இமாம் இப்ன் தைமியா(ரஹி) யஜீத் இப்ன் முஆவியாவை காஃபிர் என கூறுவதை நிராகரித்தார்கள். அல்லாஹ் அவரை மன்னிக்ககூடும் என குறுகிறார்கள்.

No comments:

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...