Sunday, April 12, 2020

காயிப் ஜனாஸா தொழுகை

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ



ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இன்றையதினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவீட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். [ஸஹீஹுல் புகாரி: 1245, 1317,1318, 1320,1333,3881, 3877]

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், "நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்" என்று கூறினார்கள். [அறிவிப்பவர்:  முஸ்னத் அஹ்மத்:16146]

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பிரேதம் எதிரில் இல்லாவிட்டாலும் இறுதித் தொழுகை(ஃகாயிப் ஜனாஸா தொழுகை) நடத்தலாம் என்றே பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். வேறுசிலர் கூறுவதாவது: பிரேதம் எதிரில் இல்லாமல் இறுதித் தொழுகை நடத்தலாகாது. நஜாஷி மன்னருக்கு அவரது பிரேதம் எதிரில் இல்லாமலேயே தொழுகை நடத்தியதற்கான காரணம், அவர் வாழ்ந்த அபிசீனிய நாட்டில் அப்போது முஸ்லிம்கள் யாரும் இருக்கவில்லை. எனவே தொழவைக்ககாமலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார். அவர் இறந்த செய்தியை நபியவர்களுக்கு இறைவன் செரியபடுத்தினான். அதையடுத்து அவருக்காக நபியவர்கள் மதீனாவில் தொழவைத்தார்கள். இவ்வாறு நஜாஷி மன்னருக்கு மட்டும்தான் நடைபெற்றது. வேறு யாருக்கும் நடைபெறவில்லை(துஹஃபத்துல் அஹவதி)
அவர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்துவிட்டார்" என்று நபியவர்கள் கூறிய செய்தி இவர்களது கருத்துக்கு வலுவூட்டுகிறது.


அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹி) ஆகியோர், "அடக்கம் செய்யபட்டதிலிருந்து ஒரு மாதம் காலம்வரை அடக்கத் தலம் அருகில் தொழலாம்", என்று கூறுகின்றனர்

நபி(ஸல்) அவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது ச அத் பின் உபாதா(ரலி) அவர்களின் தாயார் இறந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் திரும்பியதும் அவர் அருகில் ஜனாஸா தொழுகை தொழுதார்கள். அப்போது ஒரு மாதம் கழிந்துவிட்டிருந்தது. [திர்மிதி 959 இது நபித்தோழர் விடப்பட்ட முர்ஸல் வகை ஹதீஸ் ஆகும்]

மண்ணறை (கப்று) அருகில் (இறுதித் தொழுகை) தொழுவது:
ஸுலைமான் ஷைபானி கூறினார்:
தனித்திருந்த கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அதில் எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம் என்று நபி(ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார்' என ஷஅபீ கூறினார். நாங்கள் 'அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ )யே! உங்களுக்கு அதை அறிவித்தவர் யார்?' எனக் கேட்டதும் 'இப்னு அப்பாஸ்(ரலி) தாம்' என்றார் அவர்.   [ஸஹீஹுல் புகாரி:857,1319,1322, ஸஹீஹ் முஸ்லிம்: 1739]
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த "பெண்" அல்லது "இளைஞர்" ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். "அவர் இறந்துவிட்டார்" என மக்கள் தெரிவித்தனர். "நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்" என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு "இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக்காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. [ஸஹீஹ் முஸ்லிம்: 1742]

https://islamqa.info/en/answers/35853/ruling-on-offering-the-funeral-prayer-in-absentia

No comments:

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...