بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
தொழுகயின் முக்கியத்துவம் பற்றி சில வசணங்கள்
1.(விசுவாசிகளே!) அவன்பக்கமே திரும்பியவர்களாக (இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் நிலைத்திருங்கள்), இன்னும் அவனை பயந்து கொள்ளுங்கள், தொழுகையையும் நிறைவேற்றுங்கள், மேலும் இணைவைத்துக் கொண்டிருப்போரில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்
[ஸூரத்துர் ரூம் 30:30]
2. மனிதர்களே! உங்களுடைய இரட்சகனை நீங்கள் வணங்குங்கள்; அவன் எத்தகையவனென்றால் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோர்களையும் படைத்தான்; (அதனால்) நீங்கள் பயபக்தியுடையோராகலாம். [ஸூரத்துல் பகரா 2:21]
3. இவர்களுக்குப் பின்னர், (வழிகெட்ட) தீய பின்தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை (த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே, அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். [ஸூரத்து மர்யம் 19:59]
4.எவர் அர்ரஹ்மானுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணித்து விடுகின்றாரோ, அவருக்கு நாம், ஒரு ஷைத்தானை (நண்பனாக)ச் சாட்டிவிடுவோம், அவன் அவருக்கு இணை பிரியாத தோழனாகி விடுகிறான். [ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:36]
5. கெண்டைக்காலைவிட்டு (திரை) அகற்றப்பட்டுவிடும் நாளில், அவர்களோ (அந்நாளின்போது) சிரம்பணிவதின் பால் அழைக்கப்படுவர், ஆனால் அவர்கள் (சிரம்பணிய) சக்தி பெறமாட்டார்கள்.அவர்களுடைய பார்வைகளெல்லாம் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும், (இம்மையில்) சுகமானவர்களாக இருந்த சமயத்தில் சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அவர்கள் அழைக்கப்பட்டு வந்தார்கள்.ஆகவே, என்னையும் இச்செய்தியைப் பொய்யாக்குபவரையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் படிப்படியாக அவர்களை நாம் பிடிப்போம். [ஸூரத்துல் கலம் 68:42-44]
6. ஓவ்வோர் ஆத்மாவும், தான் சம்பாதித்தவற்றுக்குப் பிணையாக்கப் பட்டதாகும்.ஆயினும் (வலக்கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்பட்ட) வலது சாரியினர் தவிர-(அவர்கள்) சுவனங்களில் (இருப்பர்) அப்போது தங்களுக்குள் (விசாரித்துக்) கேட்பார்கள்.குற்றவாளிகளைப்பற்றி-“உங்களை ஸகர் எனும் நரகத்தில் புகுத்தியது எது?” அ(தற்க)வர்கள், “தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுவார்கள். [ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:38-43]
7. (மறுமைநாள் வெகுதூரமென நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே!) அவ்வாறல்ல! (இதோ அதன் தொடக்கமாக மரணவேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்துவிட்டால்,“மந்திரிப்பவன் எவன்?” என்றும் கேட்கப்படுகிறது.(ஆனால்) அவனோ நிச்சயமாக இதுதான் தன்னுடைய (பிரிவுக்குரிய காலம்) என்பதை (உறுதியாக) அறிந்து கொள்கிறான்.இன்னும், (அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக்கொள்ளும்.அந்நாளில் இழுத்துச் செல்லப்படுதல் உமதிரட்சகன்பால் இருக்கிறது.(அல்லாஹ்வுடைய வேதத்தையும், அவனின் தூதரையும்) அவன் உண்மையாக்கவில்லை, அவன் இரட்சகனைத் தொழவுமில்லை.எனினும் அவன் பொய்யாக்கி புறக்கணித்தும் விட்டான்.பின்னர், தன் குடும்பத்தாரிடம் அகம்பாவம் கொண்டவனாகச் சென்று விட்டான்.(மனிதனே!) உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது.! பின்னரும் உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது. [ஸூரத்துல் கியாமா 75:26-34]
8. (நம் அத்தாட்சிகளைப்) பொய்யாக்குபவர்களே! உலகில்) நீங்கள் புசியுங்கள், கொஞ்சம் சுகமும் அனுபவியுங்கள்; நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே-(அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான். மேலும், அவர்களிடம், “நீங்கள் குனிந்து (தொழுது) கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டால், அவர்கள் (தொழுது) குனியமாட்டார்கள்.[ஸூரத்துல் முர்ஸலாத் 77:46-48]
9. எனவே, தொழுகையாளிகளுக்கு கேடுதான்.அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையை (நிறைவேற்றுவதை)விட்டும் பராமுகமாக இருப்போர்.அத்தகையோர்தான் (மற்றவர்களுக்குக்) காண்பிக்(கவே தொழு)கிறார்கள். [ஸூரத்துல் மாஊன் 107:4-6]
No comments:
Post a Comment