Wednesday, July 22, 2020

ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பானிப் பிராணி போதும் (ஹஜ்ஜில் இருப்பவர்களைத்தவிர)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 


ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும் (ஹஜ்ஜில் இருப்பவர்களைத்தவிர)
குர்பானி கொடுப்பது என்பது இன்று பெருமைக்காக செய்யப்படும் செயலாகி விட்டது. வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு வீதம் கணக்கிட்டு தற்பெருமை நிமித்தம் குர்பானி கொடுக்கப்படும் பழக்கம் இருந்து வருகின்றது. இது தேவையற்றதாகும். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடே போதும். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களுடைய குர்பானி கொடுக்கும் பழக்கம் எப்படி இருந்தது? என்று அபூஅய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அதை அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். இந்நிலை இன்று மக்கள் பெருமைக்காக செய்யும் வரை இருந்தது. தற்போது நாம் காணும் நிலை ஏற்பட்டு விட்டது(அதாவது ஒரு குடும்பத்தினரே பல ஆடுகளை குர்பானி கொடுக்கும்நிலை ஏற்பட்டது) என்று பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்: அதாஉ இப்னு யஸார்(ரலி),[திர்மிதி:1505, இப்னுமாஜா:3147, முஅத்தா அல்-மாலிக்].
“நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஒரு ஆட்டையோ, இரண்டு ஆட்டையோ குர்பானி கொடுத்தனர் என்ற சுன்னத்தை நான் அறிந்த பிறகு (நான் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதால்) என்னை என் குடும்பத்தினர் கல்நெஞ்சன் என்று கருதுகின்றனர். (நான் பல ஆடுகளை கொடுக்காததால்)என் அண்டை வீட்டார் என்னை கஞ்சன் என்கின்றனர்” அறிவிப்பாளர்: அபூ ஸரீஹா(ரலி) [இப்னுமாஜா: 3148]


குர்பானிப் பிராணி தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்
(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், 'இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப்பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள்.
உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்து விட்டிருந்த) அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, '(இறைத்தூதர் அவர்களே!) என்னிடம் ஒரு வயதுடைய (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது' என்று கூறினார்கள்.3
'(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழி முறையைப் பின்பற்றியவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
இதையும் பராஉ(ரலி) அவர்களே அறிவித்தார்கள் [ஸஹீஹுல் புகாரி: 5545,5560]

மிக்னஃப் இப்ன் ஸுலைம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாங்கள் நபி(ﷺ) அவர்களுடன் அரஃபாத்த்தில் நின்று கொண்டு இருந்தோம். அப்பொழுது அவர்கள், "ஓ மனிதர்களே! நிச்சயமாக் உங்களில் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு ஆன்டும், உழ்ஹிய்யா மற்றும் அதீரா கொடுக்க வேண்டும்" என்று கூறினார்கள். [இப்ன் மாஜா: 3125]



No comments:

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...