بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ரமளான் மாதம் குர்ஆன் இறக்கியருளப்பட்டது ஸூரத்துல் பகரா 285 ஆவது ஆயத்தில் கூறும் இறைவன், தொடர்ந்து 186ஆவது ஆயத்தில் இவ்வாறு கூறுகிறான்:
“மேலும், (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக:) “நிச்சயமாக நான், (அவர்களுக்கு) மிகச் சமீபமாகவே இருக்கின்றேன்; அழைப்பவரின் அழைப்புக்கு அவர் என்னை அழைத்தால் நான் பதிலளிப்பேன்;”
‘மூன்று பேருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது, பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் பிரார்த்தனை, நோன்பாளி மற்றும் பிரயாணியின் பிரார்த்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: பைஹகி
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூவரின் பிரார்த்தனை மறுக்கபடுவதில்லை
1. நோன்பு வைத்திருப்பவர், நோன்பு துறக்கும்வரை கேட்கும் பிரார்தனை.
2. நீதிமிக்க ஆட்சியாளர் கேட்கும் பிரார்தனை
3. அநீதிக்குள்ளானவரின் பிரார்தனை.
அப்பிரார்தனையை அலலாஹ் மேகங்களுக்கு மேல் உயர்துகின்றான். அதற்காக வானத்தின் வாசல்களைத் திறக்கின்றான். அப்போது இறைவன், "என் கண்ணியத்தின் மீது ஆணையாக! சிறிது காலத்திற்குப் பிறகாயினும் நிச்சயமாக நான் உதவி செய்வேன்" என்று கூறுவான். இதனை அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அரிவிக்கிறார்கள். (திர்மிதி: 3512 ஹஸன்)
1. முதலில் அல்லாஹூ தஆலா நம் நோன்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பிரார்திப்பது.
“அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் பயபக்தியுடையவர்களில் இருந்துதான்” [5:27]
நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடத்தில், "இன்னும், தம் இரட்சகனின்பால் தாங்கள் திரும்பக்கூடியவர்கள் என்று அவர்களுடைய இதயங்கள் அஞ்சக்கூடியதாகியிருக்க (தான தர்மங்களாக) அவர்கள் கொடுத்தவற்றை (அல்லாஹ்விற்காக) கொடுக்கிறார்களே அத்தகையோரும்" (23"60) எனும் வசனம் குறித்து மது அருந்துபவர்களும், திருடுபவர்களும் இவ்வசனத்தில் அடங்குவார்களா" என்று வினவினேன். அதற்கு நபி((ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறினார்கள்: சித்தீக்கின் மகளே! எனினும் அவர்கள் தொழுகிறார்கள், தர்மங்கள் செய்கிறார்கள். மேலும், அவர்கள் தாங்கள் செய்த நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாதோ என்று அஞ்சுகிறார்கள். அவர்கள்தாம் நன்மையானவற்றில் விரைந்து செயலாற்றுபவர்கள்". (திர்மிதி:3089, இப்னு மாஜா:4196, முஸ்னத் அஹ்மத்:15/159 205, ஹூமைத் 275)
ஆதலால் முதலில் நோன்பை ஏற்றுக்கொள்வாயாக எனப் பிரார்திக்க வேண்டும்.
அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.
யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக! (அபூதாவூத் – 2358)
குறிப்பு: இது பலஹீனமான் துவா என்று கூறபட்டாலும், துவா என்ற அடிப்படையில் பிரார்திக்கலாம். என ஷைக் உதைமீன் போன்றோர் கூறுகின்றனர். (https://islamqa.info/en/14103)
2.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَىْءٍ أَنْ تَغْفِرَ لِي
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்தில் பிரார்தனை புரிய வாய்பு உண்டு. அந்த பிரார்தனை ஒருபோதும் மறுக்கபடாது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களான உபைதுல்லாஹ் பின் அபீ முலைக்கா(ரஹி) அவர்கள் கூறுகையில், அப்துல்லாஹ் இப்ன் அம்ர்(ரலி) அவர்கள் நோன்பு துறக்கும் போது,
"அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க ஃபி ரஹ்மத்திக்கல்லத்தீ வசி அத் குல்ல ஷையின் அன் தஃக்ஃபிர லீ"
"அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க ஃபி ரஹ்மத்திக்கல்லத்தீ வசி அத் குல்ல ஷையின் அன் தஃக்ஃபிர லீ"
என் இறைவா! அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்துள்ள உன் கருணையின் பொருட்டால், நீ என் பாவங்களை மன்னிக்க வேண்டுமென உன்னிடம் நான் கோருகிறேன்" என்று கூறினார்கள். (இப்னு மாஜா: 1753, ஹிஸ்னுல் முஸ்லிம்:177))
3.
اللّٰهُمَّ كَما أَفرَحْتَني فِي الدُّنْيا بِا أن أتْمَمتَ صِيامٍ فَرزُقْني الفَرَحْ يَومَ لِقاءَكَ
அல்லாஹும்ம கமா அஃப்ரஹ்தனி ஃபித்துன்யா, பி அன் அத்மம்த சியாமின் ஃபர்ஜுக்னில் ஃபரஹ் யவ்ம லிகாய அக
யா அல்லாஹ் நான் நோன்பு திறக்கும்போது நீ எவ்வாறு மகிழ்ச்சி அடைய செய்தாயோ, அவ்வாறே உன்னை சந்திக்கும் பாக்கியத்தை கொடுத்து என்னை மகிழ்ச்சி அடைய செய்வாயாக!
அல்லாஹ்வின் தூதர்(ஸ்ல்) அவர்கள் கூறிவதாக அபு ஹுரைரா(ரலீ) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது, நோன்பை துறப்பதை முன்னிட்டு அவர் மகிழ்ச்சியடைகிறார். தம் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவர் மகிழ்ச்சியடைகிறார். (ஸஹீஹ் முஸ்லிம்:2118,2119)
https://youtu.be/HmD33Jyw4vY?t=180
https://youtu.be/HmD33Jyw4vY?t=180
4. நோன்பு திறந்தவுடன்
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
தஹப்பல்லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்
தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும் (அபூதாவூத் – 2358)
குறிப்பு: இதுவும் பலஹீனமான் துவா என்று கூறபட்டாலும், துவா என்ற அடிப்படையில் பிரார்திக்கலாம். என ஷைக் உதைமீன் போன்றோர் கூறுகின்றனர். (https://islamqa.info/en/14103)
No comments:
Post a Comment