Wednesday, November 2, 2022

அனுமதிக்கபட்ட பொழுதுபோக்குகள்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், சல்மான் அல்ஃபாரிஸீ (ரலி) அவர்களையும் அபுத் தர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று அவரிடம் சல்மான் கேட்டார்.

அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், ‘‘உங்கள் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை” என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் அங்கு வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், ‘உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, ‘‘நான் நோன்பு நோற்றிருக் கிறேன்” என்றார். சல்மான், ‘‘நீர் உண்ணாமல் நான் உண்ணமாட்டேன்” என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவு வந்ததும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் (தொழுவதற்கு) எழுந்திருக்கப் போனார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், ‘உறங்குவீராக!’ என்று கூறியதும் அபுத்தர்தா உறங்கினார்கள்.

பின்னர் (சிறிது நேரத்தில் மீண்டும் தொழுவதற்காக) அபுத்தர்தா எழுந்திருக்கப்போனார். அப்போதும் சல்மான், ‘உறங்குவீராக!’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், ‘‘இப்போது எழுவீராக!” என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், ‘‘நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவீராக!” என்று கூறினார்கள்.

பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘சல்மான் உண்மையையே கூறினார்” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 1968)


நீச்சல்

 كلُّ شيءٍ ليس من ذِكْرِ اللهِ فهو لَهْوٌ أو سَهْوٌ إلا أربعَ خِصَالٍ : مَشْىُ الرجلِ بينَ الغَرَضَيْنِ - المَرْمَى - وتأديبُه فَرَسَهُ ومُلَاعَبَتُهُ أهلَه وتعليمُه السِّبَاحَةَ
الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : غاية المرام
الصفحة أو الرقم: 389 | خلاصة حكم المحدث : صحيح

التخريج : أخرجه النسائي في ((السنن الكبرى)) (8940)، والبزار كما في ((مجمع الزوائد)) للهيثمي (5/272)، والطبراني (2/193) (1785) باختلاف يسير

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் நிணைவுகூர்தல் இல்லாத அனைத்தும் வீண்விளையாட்டுகளே; நான்கை தவிர; ஒருவர் தம் இல்லாளோடு விளையாடுதல், குதிரையேற்ற பயிற்சி, ஓட்டப்பந்தயம், நீச்சல் ஆகியவையாகும்.  (நஸயீ அவர்களின் சுனன் அல்-குப்ரா (8889) அல்பானியின் ஸஹீஹ் 315, திர்மிதி:1561)


சுற்றுலா செல்லுதல்

நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள், அவர் (காட்டிலுள்ள கனிகளை) நன்கு புசித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார், நிச்சயமாக, நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருக்கிறோம்' என்று கூறினார்கள் (12:11,12)

பாடம்:
சுற்றுலா செல்வதால் நன்மைகள், விளையாடலாம் புசிக்கலாம். சிறு பிள்ளைகளை அவ்வாறு அழைத்துச் செல்வது நலமாக இருக்கும்.


அனுமதிக்கப்பட்ட ஆடல்

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَبَّاحٍ الْبَزَّارُ، قَالَ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ عَبْدِ اللَّهِ ابْنِ سُلَيْمَانَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسًا فَسَمِعْنَا لَغَطًا وَصَوْتَ صِبْيَانٍ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا حَبَشِيَّةٌ تُزْفِنُ وَالصِّبْيَانُ حَوْلَهَا فَقَالَ ‏"‏ يَا عَائِشَةُ تَعَالَىْ فَانْظُرِي ‏"‏ ‏.‏ فَجِئْتُ فَوَضَعْتُ لَحْيَىَّ عَلَى مَنْكِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلْتُ أَنْظُرَ إِلَيْهَا مَا بَيْنَ الْمَنْكِبِ إِلَى رَأْسِهِ فَقَالَ لِي ‏"‏ أَمَا شَبِعْتِ أَمَا شَبِعْتِ ‏"‏ ‏.‏ قَالَتْ فَجَعَلْتُ أَقُولُ لاَ لأَنْظُرَ مَنْزِلَتِي عِنْدَهُ إِذْ طَلَعَ عُمَرُ قَالَ فَارْفَضَّ النَّاسُ عَنْهَا قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنِّي لأَنْظُرُ إِلَى شَيَاطِينِ الإِنْسِ وَالْجِنِّ قَدْ فَرُّوا مِنْ عُمَرَ ‏"‏ ‏.‏ قَالَتْ فَرَجَعْتُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏




ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்ககள் உட்கர்ந்திர்ந்தார்கள். அந்நிலையில் ஆரவாரத்தையும், சிறுவர்களின் ஓசையையும் கேட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அங்கு அபிசீனிய பெண்ணொருத்தி ஆடிக் கொண்டிருந்தாள். சிறுவர்கள், அவளைச் சுற்றி நின்று (வேடிக்கை பார்த்துக்) கொண்டிருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், "ஆயிஷாவே! (இங்கு) வந்துபார்" என்று கூறினார்கள். உடனே நான் (அங்கு) சென்றேன். எனது முகவாய்க் கட்டையயை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் தோள்பட்டைக்கும் தலைக்கும் மத்தியிலிருந்து அவளைப் பார்க்கலானேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், "மனநிறைவு கொண்டாயா? மனநிறைவு கொண்டாயா?" எனக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் என்மீது கொண்டிருக்கும் (உயர்ந்த) அந்தஸ்தையும் நேசத்தையும் பார்க்கும் நேரத்தில் "இல்லை" என்று கூறினேன். அந்நிலையில் திடீரென உமர்(ரலி) அவர்கள் அங்கு வருகை தந்தார்கள். உடனே அங்கிருந்த மக்கள் அவளை விட்டும் பிரிந்து கலைந்து சென்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்கள் உமரைப் பார்து விரண்டோடிய காட்சியை நான் காண்கின்றேன்" என்றியம்பினார்கள். உடனே நானும் அங்கிருந்து திரும்மி வந்துவிட்டேன். (திர்மிதி 3614)



உமர்(ரலி) அவர்களின் மீது மக்கள் கொண்டிருந்த அச்சம் கலந்த மரியாதையின் காரணமாக அவளை விட்டும் பிரிந்து சென்றனர். அந்த நிகழ்வு கேளிக்கையாகவும், வீண்விளையாட்டாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, நபி(ஸல்) அவர்கள், "ஜின் மற்றும் மனிதர்களிலுள்ள ஷைத்தான்கள் விரண்டோடியதை நான் காண்கின்றேன்" என்று கூறினார்கள் போலும். அதில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது எனினும் அது ஹராமானதாக தடை செய்யப்பட்டதாக இல்லை. இல்லாவிட்டால் நபி(ஸல்) அவர்கள் எப்படி தாமும் கண்டு, ஆயிஷா(ரலி) அவர்களையும் கான அனுமதித்திருப்பார்கள்.(துஹ்ஃபதுத்துல் அஹ்வதி) 



حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏كَانَتْ ‏ ‏الْحَبَشَةُ ‏ ‏ يَزْفِنُونَ ‏ ‏بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيَرْقُصُونَ وَيَقُولُونَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏عَبْدٌ صَالِحٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا يَقُولُونَ قَالُوا يَقُولُونَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏عَبْدٌ صَالِحٌ

12131



அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்:

அபிஸீனியர்களில் சிலர் நபி(ஸல்) முன்னிலையில் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்கள், "முஹம்மது ஸாலிஹான அடிமை" எனக் கூறினார்கள். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் வினவினார்கள். அதற்கு அவர்கள், "முஹம்மது ஸாலிஹான அடிமை" எனப் பதிலுரைத்தார்கள். (முஸ்னத் அஹமத் -12131)


குறிப்பு:

அங்க அசைவுகளையும், உடல் திரட்சியையும் மற்றவர்களுக்குக் காட்டுவது கலை என்றால் அந்தக் கலையில் இஸ்லாத்திற்கு உடன்பாடு கிடையாது.

அதை போன்று ஆண் பெண் கலப்பு, இசை, அருவருப்பான நடனங்கள், கடமையான ஆடைகளை கலைதல் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்கிறது.


அனுமதிக்கப்பட்ட பாடல்

هَذَا الْحِمَالُ لاَ حِمَالَ خَيْبَرْ هَذَا أَبَرُّ رَبَّنَا وَأَطْهَرْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசல் கட்டும்போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள். (அப்போது,) “இந்தச் சுமை கைபரின் சுமையல்ல. இது எங்களது இறைவனிடம் (சேமித்துவைக்கப்படும்) நீடித்த நன்மையும் (கைபரின் சுமையை விடப்) பரிசுத்தமானதுமாகும்” என்று (“ரஜ்ஸ்' எனும் ஈரசைச் சீரில் அமைந்த பாடலைப் பாடியபடி) கூறிக்கொண்டிருந்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி:3906)


அப்போது "ரஜ்ஸ்” எனும் ஒருவித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (பாடியபடி பணியில் ஈடுபட்டு) இருந்தார்கள்.

"இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமையின் நன்மைகளுக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி செய்வாயாக!” என்று அவர்கள் பாடினர். (ஸஹீஹ் முஸ்லிம்:911)

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக்கொண்டிருந்த காலித் பின் தக்வான் (ரஹ்) அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பதுபோல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ர் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்லிக்கொள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி :4001)


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் காலத்தில் நடந்த) "புஆஸ்" எனும் போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.

-(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?" என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்), அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1619,1622)


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே!” என்றார்கள்.(ஸஹீஹுல் புகாரி : 5162)


ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)" என்றேன். "பாடு" என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு" என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு"என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன். (ஸஹீஹ் முஸ்லிம்:4540)


விளையாட்டுகள்

அம்பெய்தல்

பாடம் : 78 அம்பெய்தலைக் கற்குமாறு வந்துள்ள தூண்டல் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
"(இறைநம்பிக்கையாளர்களே!) உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தையும் குதிரைப் படையையும் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்திருங்கள். அதன்மூலம், அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்களின் பகைவர்களையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். "  (8:60)


சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம் பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை, நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள்.அப்போது இரு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்திக்கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி: 2899)

"பலத்தையும் குதிரைப் படையையும் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்திருங்கள்" என்ற அல்லாஹூத்தஆலாவின் கட்டைளையிலிருந்து, இந்த விளையாட்டுக்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறுபடும் எனத் தெரிகிறது. 


பாடம் : 69 பள்ளிவாச-ல் ஈட்டி வீரர்கள் (வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாச-ல் நின்றுகொண்டிருப்பதையும் அப்போது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் (வீரவிளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருப்பதையும் நான் பார்வையிட்டேன்.

அவர்களின் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியால் (மற்றவர்கள் என்னைப் பார்க்காத வகையில்) மறைத்துக் கொண்டி ருந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி: 454, 455, 950, 988, 2907, 3530, 5190)

குதிரை போட்டி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்திய செய்தியை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி: 2868, 2869, 2870, 7336)

ஓட்டப் பந்தயம்

நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் நடத்திய போது நான் அவர்களை முந்தி விட்டேன். சில காலம் கழித்து எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்ட போது மீண்டும் ஓடினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை முந்தி விட்டு, அதற்கு இது சரியாகி விட்டது என்றார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத், அபூதாவூத்)


https://www.islamweb.net/en/fatwa/81604/ruling-on-dancing

Saturday, April 30, 2022

ஸகாத்துல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ அளவு = 3 லிட்டர், 1 முத் = 0.75 லிட்டர்

 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 

1 ஸாஉ அளவு = 3 லிட்டர்,  1 முத் = 0.75 லிட்டர்
முத் = 1ஸாஉ,  1 ஃபரக் = 3 ஸாஉ

அன்று பிறந்த குழத்தை வரை கணக்கிட்டு ஸகாத்துல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) கொடுக்கவேண்டும் என்றும் நாம் அறிந்ததே.  

ஆனால் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் கருத்தி வேறுபாடு நிலவுகிறது. உதாரணமாக ஷாஃபி மத்ஹப் 3 கி 200 கிராம், ஹனபி 2.5 கி,  சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ ஃபத்வாவில்  2.172 கிலோ.


1 ஸாஉ தாணியம் நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்க வேண்டும் மற்றும் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கு வேண்டும்

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளை யிட்டார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்
பிறகு மக்கள் ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாஉ அளவு தீட்டிய (மணிக்) கோதுமையை ஆக்கினார்கள் (ஸஹீஹுல் புகாரி: 1507)

அக்காலத்தில் தொலி நீக்கப்படாத கோதுமையும், உலர்ந்த திராட்சையும், பாலாடைக் கட்டியும், பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன. (
ஸஹீஹுல் புகாரி:1510)

2. ஓரிரு தினங்களுக்கு முன்னரே

மேலும், பெரு நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்தத் தர்மத்தைக்) கொடுத்துவந்தார்கள்.(ஸஹீஹுல் புகாரி:1511)

4. முத், ஸாஉ, ஃபரக் , எண்பது கொள்ளவு சார்ந்தது, எடை  சார்ந்தண்று

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) ஒரு ஃபரக் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்பார்கள். ஒரு ஃபரக் என்பது மூன்று ஸாஉ கொள்ளளவாகும் என்றும் இடம்பெற்றுள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம்:532)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ முதல் ஐந்து ‘முத்’து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு ‘முத்’து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய் வார்கள். (ஸஹீஹுல் புகாரி 201)

பலர் இரண்டு கைகளை இணைத்து வைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவு முத்து எனப்படும் என்று கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும். பெரிய கைகளை உடையவர்ரின் கைகளால் அளவிடப்பட்டது கூடுதலாகவும், சிறிய கைகளை உடையவரின் அளவு குறைவாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அவ்வாறு அல்லாஹ் கட்டளையிடவில்லை.

முத், ஸாஉ மக்கள் தம் தினசரி உபயோகத்திற்காகவும், வியபாரத்திற்காகவும் பயன்படுத்தி வந்தார்கள். ஒரு பொருளின் முத் அளவு, மற்ற பொருளின் முத் அளவை விட மாறுபட்டு இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

அஸ்மா பின்தி அபுபக்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்) காலத்தில் நோன்பு பெருநாள் தர்மத்தை அவர்கள் வீடுகளில் உணவை அளக்க பயண்படுத்தும் முத் பாத்திரத்தில் அளந்து கொடுத்தார்கள், அல்லது அவர்கள் உணவை அளக்க பயண்படுத்தும்  ஸாஉ அளவையில் அளந்து கொடுத்தார்கள். இதை மதினாவாசிகள் அனைவரும் செய்து வந்தார்கள். 
(ஹாகிம் அவர்களின் அல்-முஸ்தத்ரக் (#1499, 1/570) )


5.  முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சியில்

    2 முத்து தொலி நீக்கப்படாத கோதுமை = 1 முத்து உயர் ரகக் கோதுமை

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் நாங்கள் ஏதேனும் உணவிலிருந்து ஒரு ஸாஉ, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கிவந்தோம்.
முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வரும்வரையில் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடம் வந்ததும்) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் "ஷாம் (சிரியா) பகுதியின் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையில் இரு "முத்"துகள், பேரீச்சம் பழத்தின் ஒரு "ஸாஉ"க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர்.
நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே நான் உயிர் வாழும்வரை வழங்கிக்கொண்டிருப்பேன்
(ஸஹீஹ் முஸ்லிம்: 1797, 1798, ஸஹீஹுல் புகாரி:1508)
பிறகு மக்கள் ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாஉ அளவு தீட்டிய (மணிக்) கோதுமையை ஆக்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி:1507, ஸஹீஹ் முஸ்லிம்:1793 )

இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட அரை "ஸாஉ" (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு "ஸாஉ"வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1800)

6.  உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களது காலத்தில் அளவுகோல் அதிகரிக்கபட்டது

நபி (ஸல்) மதீனாவாசிகளின் ‘ஸாஉ’ மற்றும் அவர்களின் ‘முத்(து)’ ஆகிய அளவைகளில் பரக்கத்திற்காக பிரார்தித்தார்கள்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் :”இறைவா! மதீனாவாசிகளின் ‘ஸாஉ’ மற்றும் அவர்களின் ‘முத்(து)’ ஆகிய அளவைகளில் அவர்களுக்கு வளத்தைக் கொடுப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி 5425, 5654, 6372, ஸஹீஹ் முஸ்லிம் 2663)

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘ஸாஉ’ என்பது, இன்றைக்கு (நடைமுறை யிலிருக்கும்) உங்களது ‘முத்’தில் ஒரு ‘முத்’தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1/3) கொண்டதாக இருந்தது. பின்னர் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களது காலத்தில் இதன் அளவு அதிகமாக்கப் பட்டது (ஸஹீஹுல் புகாரி 6712, 7330)

அபூகுதைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், “(மதீனாவில் வழக்கிலுள்ள) எங்களது ‘முத்’தே (ஹிஷாம் உருவாக்கிய) உங்களது ‘முத்’தைவிட (அளவில் சிறியதானாலும் வளத்தில்) பெரியதாகும். நபி (ஸல்) அவர்களது (காலத்தில் இருந்த மதீனா) ‘முத்’தில் தவிர வேறொன்றில் சிறப்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை” என்று கூறினார்கள்.
மேலும், அவர்கள் என்னிடம் “ஓர் ஆட்சியாளர் உங்களிடம் வந்து நபி (ஸல்) அவர்களது ‘முத்’தைவிட (அளவில்) சிறியதொரு ‘முத்’தை நிர்ணயித்தால், நீங்கள் எந்த அளவையைக் கொண்டு (ரமளான் தர்மம், பரிகாரம் ஆகியவற்றை) வழங்குவீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நபி (ஸல்) அவர்களது ‘முத்’தைக் கொண்டே வழங்குவோம்” என்று கூறினேன். அவர்கள் “பார்த்தீர்களா? (இறுதியில்) விஷயம் நபி (ஸல்) அவர்களது ‘முத்’துக்கே வந்து சேர்கிறது” என்றார்கள்  (ஸஹீஹுல் புகாரி: 6713, மலிக் முவத்தா 631)

படத்தில் , ஜைத் இப்ன் தாபித் (ரலி) அவர்களிடமிருந்த ஒரு முத் அளவு


                                        


மேலும் விபரங்கள்:

Wednesday, April 27, 2022

Facts about Ka'bah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 

The first House [of worship] established for mankind was the one at Bakkah [Makkah], full of blessings and guidance for the worlds.In it are clear signs [such as] the standing place of Abraham; whoever enters it will be safe. Pilgrimage to the House is a duty owed to Allah upon all people who are able to make their way to it; whoever disbelieves, then Allah is in no need for the worlds. (Surah Ale-'Imran Chapter 3 Verse 96,97)

1. Makkah is sanctuary since the day ALLAH Azwajal created the Heavens and the Earth ( Sahih al-Bukhari 3189)
2. Al- Masjid-ul-,Haram (in Mecca) was the first built masjid on the surface of the earth, then after 40 years then Masjid Al-Aqsa ( in Jerusalem) was build.(Sahih al-Bukhari 3366, Sahih Muslim 520a))3.
3. Ibrahim Alaihiwasllam built the Kabah  first
And [remember] when Abraham was raising the foundations of the House and Ishmael, [saying], “Our Lord, accept this from us, for You are the All-Hearing, the All-Knowing. (2:127)
4. Rebuilt by Quraysh before Sallahu alaihiwasallam became Prophet (Sahih al-Bukhari 1582, Musnad ahmad :14957)
5. Quraish did not include Hijr Ismaeel as part of Kaba because they ran short of the means (to do so). (Sahih Muslim 1333j
6. Kaba  door has been made on a higher level because Quraysh didn't want everyone to get in and they can't get in without a ladder. When someone they dislike was about to enter, they pushed him and he would fell down (Sahih Muslim 1333j)

Demolishing the Ka'bah and rebuilding it

Imam Muslim in the Book of Pilgrimage place a chapter called "Demolishing the Ka'bah and rebuilding it" (Chapter 69)

1. After the death of Yazid ibn Mu‘aawiyah ibn Abi Sufyaan,   Abdhullah Ibn Zubair demolished Ka'bah and rebuilt it with 2 doors and included Hijr Ismaeel as part of Ka'bah (Bukhari:1586, Muslim 1333)

2. After Killing Abdhullah Ibn Zubair, Abd al-Malik Hajjaj ibn Yusuf under the command of  Abd al-Malik ibn Marwan demolished and reconstructed again as it existed at the time of Prophet (ﷺ). (Muslim 1333)


Lesson

If it is permissible for the Muslim to avoid some of the recommended matters in order to win people’s hearts, then shunning what is forbidden is required with even greater reason. Shaykhul-Islam Ibn Taymiyyah, may Allaah have mercy upon him, said, “A Muslim may not do what is recommended if doing it would incur graver evil that outweighs the sought benefit

Thus, the Prophet(ﷺ) gave up the opinion that he believed to be the best of the two options and adopted the other one given its outweighing benefit. That is, the people of Quraysh were close to the pre-Islamic era and the idea of demolishing the Ka'bah would have driven them to become averse to Islam. Hence, the evil consequences were more probable than good ones. Therefore, Imaam Ahmad and other scholars, may Allah have mercy upon them, ruled that it is favourable for the Imaam to give up what he sees as a better choice, if this would foster more accord and rapport for those led in prayer.

Maqaam Ibraaheem and the footprints on it

Ibn Jareer narrated that Qataadah said: “ ‘And take you (people) the Maqaam (place) of Ibraaheem (Abraham) [or the stone on which Ibraaheem (Abraham) stood while he was building the Ka‘bah] as a place of prayer (for some of your prayers, e.g. two Rak‘at after the Tawaaf of the Ka‘bah at Makkah)’ [al-Baqarah 2:125 – interpretation of the meaning]. This means that they were commanded to pray at that place; they were not commanded to touch it. This ummah went beyond what was prescribed for it, to an extent that no previous nation did. We have heard from those who saw the marks of his heels and toes on it, but this ummah kept touching them until they disappeared.” From Tafseer Ibn Katheer, 1/117 

Shaykh Ibn ‘Uthaymeen said: Undoubtedly Maqaam Ibraaheem is proven and that on which the glass enclosure is built is indeed Maqaam Ibraaheem. But the engraved marks that appear on it do not seem to be footprints, because what is well known from an historical point of view is that those footprints disappeared a long time ago. But these engraved marks were meant as a marker only, and we cannot be certain that these are the footprints of Ibraaheem (peace be upon him)

Hajarul Aswad - Black Stone

1. The Black Stone was sent down by Allaah to this earth from Paradise. (Narrated by al-Tirmidhi, 877; al-Nasaa’i, 2935. The hadeeth was classed as saheeh by al-Tirmidhi).

2. The Stone was whiter than milk, but the sins of the sons of Adam made it black.(Narrated by al-Tirmidhi, 877; Ahmad, 2792. Classed as saheeh by Ibn Khuzaymah, 4/219. Al-Haafiz ibn Hajar classed it as qawiy (strong) in Fath al-Baari, 3/462).

3.  The Black Stone will come forth on the Day of Resurrection and will testify in favour of those who touched it in truth. (Narrated by al-Tirmidhi, 961; Ibn Maajah, 2944 hasan by al-Tirmidhi, and as qawiy by al-Haafiz ibn Hajar in Fath al-Baari, 3/462)

4. Touching the Stone is one of the things by means of which Allaah expiates for sins (Narrated by al-Tirmidhi, 959. This hadeeth was classed as hasan by al-Tirmidhi and as saheeh by al-Haakim (1/664). Al-Dhahabi agreed with him).       
5. The Black Stone is broken
Some say it was broken by a stone fired by the Umayyad army laying siege to Makkah whilst it was under the control of Abdullah ibn Zubair ®.

However, most agree that it was most damaged in the middle ages by an extreme heretical Ismaili group from Bahrain called the Qarmatians who had declared that the Hajj was an act of superstition. They decided to make their point by killing tens of thousands of hujjaj and dumping their bodies in the well of Zamzam.

As if this act of treachery was not enough, these devils took the Black Stone to the East of Arabia and then Kufa in Iraq where they held it ransom until they were forced to return it by the Abassid Caliph. When they returned it, it was in pieces and the only way to keep them together was by encasing them in a silver casing. 


Sign of  The Hour - demolition of the Ka'bah

The demolition of the Ka'bah is one of the signs that the Hour is near, but it is not one of the signs of the Day of Judgement.
Allah's Messenger (ﷺ) said, "Dhus-Suwaiqatain (the thin legged man) from Ethiopia will demolish the Ka`ba. A black person with thin legs plucking the stones of the Ka`ba one after another"(Sahih al-Bukhari 1596, 1595, Sahih Muslim Sahih Muslim 2909)
However, in the narration reported by Imaam Ahmad, there is an addition which reads: "He will take all its jewellery and treasures. He is a bald, thin-legged man who will hit it with his axe and his pick." Imaam Ibn Hajar, may Allaah have mercy on him, said: 'This incident will not take place except at the end of the time before the Hour.'


More Info:

https://islamqa.info/en/answers/1902/the-black-stone
https://islamqa.info/en/answers/36521/maqaam-ibraaheem-and-the-footprints-on-it 
https://islamqa.info/en/answers/3748/a-brief-history-of-al-masjid-al-haraam-in-makkah 



Friday, April 8, 2022

முட்டி கட்டிக் கொண்டு உட்காருதல்

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

முஆத் நின் அனஸ் அல் ஜூஹனி(ரலி) அவர்கள் கூறியதாவது:

இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது முதுகையும் முட்டுக் கால்களையும் சேர்த்துக் கட்டிக்கொண்டு அமர்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள். (திர்மிதி:472) இமாம் திர்மிதி இதை ஹஸன் எனக் கூறுகிறார்கள்)

மேலும் இமாம் திர்மிதி (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள், "வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரை நிகழ்த்தும்போது முதுகையும் முழங்கால்களையும் கட்டிக்க்கொண்டு அமர்வதை அறிஞர்களில் ஒரு சாரார் வெற்க்கத் தக்கதாக கருதுகின்றனர். வேறு சிலர் அதை அனுமதிக்கின்றனர். அப்துல்லாஹ் இப்ன் உமர்(ரலி) அவர்கள் உள்ளிட்ட சிலர் இவர்களில் அடங்குவர். 

அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹ்) ஆகியோர் இவ்வாறே கூறுகின்றனர். இமாம் உரை உரையாற்றிக்கொண்டிருக்கும் போது இவ்வாறு அமருவதை குற்றமாக கருதவில்லை" 


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، وَعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْحَبْوَةِ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَأَبُو مَرْحُومٍ اسْمُهُ عَبْدُ الرَّحِيمِ بْنُ مَيْمُونٍ ‏.‏ وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْحَبْوَةَ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ وَرَخَّصَ فِي ذَلِكَ بَعْضُهُمْ مِنْهُمْ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَغَيْرُهُ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَرَيَانِ بِالْحَبْوَةِ وَالإِمَامُ يَخْطُبُ بَأْسًا ‏.‏


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளரான அபூமர்ஹீம் என்பவரின் இயர்பெயர் அப்துர் ரஹீம் பின் மைமூன் என்பதாகும். அவரும், அவரிக்கு ஹதீஸ் அறிவித்த சஹ்ல் பின் முஆத் என்பவரும் நபிமொழி அறிவிப்பில் பலஹீனமான அறிவிப்பாளர்கள் என யஹ்யா பின் மயீன் (ரஹி) அவர்கல் குறிப்பிடுகிறார்கள். 

சஹ்ல் பின் முஆத் அவர்களின் ஹதீஸ்கள் வினோதாமனவை என இப்ன் ஹிப்பான் கூறுகிறார்கள். இவரின் ஹதீஸ்களை எழுதுகொள்ளலாம் ஆனால் ஆதாரமாக கொள்ள இயலாது என அபு ஹாதிம் கூறுகிறார்கள். 

நாங்கள் பைத்துல் முகத்தஸில் மூஆவியா(ரலி) அவர்களுடன் அமர்திருந்தோம், அப்பொழுது மிகுதியானவர்கள் நபி தோழர்களாக இருந்தனர், அவர்கள் ஜும்மா உரையுன் போது முட்டிகால்கலை கட்டிக்கொண்டு உட்கார்திர்ந்தனர். அதில் இப்ன் உமர்(ரல்) மற்றும் அனஸ்(ரலி) அவர்களும் அடங்குவர். அவர்களுடன் கருத்கு வேறுபாடி கொண்டிருந்தவர்களை நாம் யாரையும் அரியமாட்டோம், என்று யலா இப்ன் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 

உட்காருவதில் இடது கையை பின்னால் ஊன்றி உட்காருவது தவறாகும்: https://abuazraa.blogspot.com/2017/01/blog-post.html

மேலிம் விவரங்களுக்கு:
https://islamqa.info/en/answers/129182/ruling-on-sitting-with-the-knees-drawn-up-ihtiba

Sunday, March 20, 2022

Nap (Qailoolah)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 


Prophet (ﷺ) would take a nap at midday, so that this siesta would give him strength to pray qiyaam al-layl (voluntary prayers at night). He (ﷺ)  would say: “Take a nap at midday, for the Shaytaan does not take a nap at midday.” Narrated by at-Tabaraani in al-Awsat, 28; classed as hasan by al-Albaani in as-Saheehah, 1647. 

Like sleeping at night regenerates, activates and maintains the cells of the body and brain, then napping also contributes to resting the brain, physical relaxation, removing muscle spasms, and enhancing the ability of perception and receiving. 

Scientists have confirmed that short naps in the middle of the day, for half an hour, cancel the effect of fatigue and restore stability, vitality and activity to the mind and body. Modern scientific research has also confirmed that taking a short nap during work renews the mental and physical energies of workers, increases their productivity and their ability to better withstand working conditions. Experts also confirm that napping is the most important anti-stress and anxiety by reducing the level of cortisone, which is responsible for stress.

The benefits of a nap are not limited to those short-term benefits of moderating mood and others, but also benefit in the long term, as it reduces the chances of heart attacks and strokes and the cause that leads to them, which is stress..

One of the results of studies showed this difference by about 30% as a result that napping helps On the regularity of the pulse and respiratory rates that have a direct and indirect effect on the heart. The nap is also very useful for children, during which the body secretes growth hormones, and stimulates physical alertness and psychological balance.


Nap in Quran

 أَوْ هُمْ قَائِلُونَ

ALLAH's punishment came upon them while they were taking midday rest (7:4) 


Nap in Sunnah

1. Once Allah's Messenger (ﷺ) came to the house of Fatima but did not find `Ali in the house. So he asked "Where is your cousin?" She replied, "There was something (a quarrel) between me and him whereupon he got angry with me and went out without having a midday nap in my house." Allah's Messenger (ﷺ) asked a person to look for him. That person came, and said, "O Allah's Messenger (ﷺ)! He (Ali) is sleeping in the mosque." So Allah's Messenger (ﷺ) went there and found him lying. His upper body cover had fallen off to one side of his body, and so he was covered with dust. Allah's Messenger (ﷺ) started cleaning the dust from him, saying, "Get up, O Abu Turab! Get up, Abu Turab!" ( Sahih al-Bukhari 6280,Sahih Muslim 2409)


2. Narrated Sahl bin Sa`d:
We used to be happy on Fridays because of the dish an old lady prepared , and we never used to take our meals or have a mid-day nap except after the Friday prayer. (Sahih al-Bukhari 5403)

3. Allah's Messenger (ﷺ) used to visit Umm Haram bint Milhan, who would offer him meals. Umm Haram was the wife of Ubada bin As-Samit.  Allah's Messenger (ﷺ) would take a mid-day map in her home. (Sahih al-Bukhari 2788, Sahih Muslim 1912a)


Nap after Fajr 

For a person who can't sleep at any other time of the day, it is nothing wrong in sleeping after Fajr to gain strength to do his work better. 

Ibn Abi Shaybah reported in his Musannaf (5/223, no. 25454) from the hadeeth of Abu Yazeed al-Madeeni who said: “Umar came to Suhayb one morning and found him sleeping, so he sat down until he woke up. Suhayb said: ‘The Ameer al-Mu’mineen is sitting in his place and Suhayb is sleeping!’ ‘Umar said to him: ‘I did not like to disturb your sleep that could be beneficial for you.’”


If he can find time to take a nap later in the day, then it would be the best to avoid sleeping after Fajr. 


It was narrated from Abu Hurairah that the Messenger of Allah (ﷺ) said: "O Allah, bless my nation early in the morning of Thursday.' "

Prophet (ﷺ) would dispatch a military expedition or an army, he would send them in the first part of the day."

And Sakhr, a man who was a merchant, used to send his goods for trade during the beginning of the day, so he became rich, and his wealth increased.

(https://sunnah.com/ibnmajah:2237, https://sunnah.com/ahmad:1329, https://sunnah.com/tirmidhi:1212, https://sunnah.com/abudawud:2606)

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...