بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
1 ஸாஉ அளவு = 3 லிட்டர், 1 முத் = 0.75 லிட்டர்
4 முத் = 1ஸாஉ, 1 ஃபரக் = 3 ஸாஉ
4 முத் = 1ஸாஉ, 1 ஃபரக் = 3 ஸாஉ
அன்று பிறந்த குழத்தை வரை கணக்கிட்டு ஸகாத்துல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) கொடுக்கவேண்டும் என்றும் நாம் அறிந்ததே.
ஆனால் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் கருத்தி வேறுபாடு நிலவுகிறது. உதாரணமாக ஷாஃபி மத்ஹப் 3 கி 200 கிராம், ஹனஃபி 2.5 கி, சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ ஃபத்வாவில் 2.172 கிலோ.
1 ஸாஉ தாணியம் நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்க வேண்டும் மற்றும் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கு வேண்டும்
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளை யிட்டார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்
பிறகு மக்கள் ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாஉ அளவு தீட்டிய (மணிக்) கோதுமையை ஆக்கினார்கள் (ஸஹீஹுல் புகாரி: 1507)
அக்காலத்தில் தொலி நீக்கப்படாத கோதுமையும், உலர்ந்த திராட்சையும், பாலாடைக் கட்டியும், பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன. (ஸஹீஹுல் புகாரி:1510)
2. ஓரிரு தினங்களுக்கு முன்னரே
மேலும், பெரு நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்தத் தர்மத்தைக்) கொடுத்துவந்தார்கள்.(ஸஹீஹுல் புகாரி:1511)4. முத், ஸாஉ, ஃபரக் , எண்பது கொள்ளவு சார்ந்தது, எடை சார்ந்தண்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) ஒரு ஃபரக் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்பார்கள். ஒரு ஃபரக் என்பது மூன்று ஸாஉ கொள்ளளவாகும் என்றும் இடம்பெற்றுள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம்:532)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ முதல் ஐந்து ‘முத்’து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு ‘முத்’து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய் வார்கள். (ஸஹீஹுல் புகாரி 201)
பலர் இரண்டு கைகளை இணைத்து வைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவு முத்து எனப்படும் என்று கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும். பெரிய கைகளை உடையவர்ரின் கைகளால் அளவிடப்பட்டது கூடுதலாகவும், சிறிய கைகளை உடையவரின் அளவு குறைவாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அவ்வாறு அல்லாஹ் கட்டளையிடவில்லை.
முத், ஸாஉ மக்கள் தம் தினசரி உபயோகத்திற்காகவும், வியபாரத்திற்காகவும் பயன்படுத்தி வந்தார்கள். ஒரு பொருளின் முத் அளவு, மற்ற பொருளின் முத் அளவை விட மாறுபட்டு இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
அஸ்மா பின்தி அபுபக்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்) காலத்தில் நோன்பு பெருநாள் தர்மத்தை அவர்கள் வீடுகளில் உணவை அளக்க பயண்படுத்தும் முத் பாத்திரத்தில் அளந்து கொடுத்தார்கள், அல்லது அவர்கள் உணவை அளக்க பயண்படுத்தும் ஸாஉ அளவையில் அளந்து கொடுத்தார்கள். இதை மதினாவாசிகள் அனைவரும் செய்து வந்தார்கள்.
(ஹாகிம் அவர்களின் அல்-முஸ்தத்ரக் (#1499, 1/570) )
முத், ஸாஉ மக்கள் தம் தினசரி உபயோகத்திற்காகவும், வியபாரத்திற்காகவும் பயன்படுத்தி வந்தார்கள். ஒரு பொருளின் முத் அளவு, மற்ற பொருளின் முத் அளவை விட மாறுபட்டு இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
அஸ்மா பின்தி அபுபக்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்) காலத்தில் நோன்பு பெருநாள் தர்மத்தை அவர்கள் வீடுகளில் உணவை அளக்க பயண்படுத்தும் முத் பாத்திரத்தில் அளந்து கொடுத்தார்கள், அல்லது அவர்கள் உணவை அளக்க பயண்படுத்தும் ஸாஉ அளவையில் அளந்து கொடுத்தார்கள். இதை மதினாவாசிகள் அனைவரும் செய்து வந்தார்கள்.
(ஹாகிம் அவர்களின் அல்-முஸ்தத்ரக் (#1499, 1/570) )
5. முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சியில்
2 முத்து தொலி நீக்கப்படாத கோதுமை = 1 முத்து உயர் ரகக் கோதுமைஅபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் நாங்கள் ஏதேனும் உணவிலிருந்து ஒரு ஸாஉ, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கிவந்தோம்.
முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வரும்வரையில் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடம் வந்ததும்) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் "ஷாம் (சிரியா) பகுதியின் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையில் இரு "முத்"துகள், பேரீச்சம் பழத்தின் ஒரு "ஸாஉ"க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர்.
முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வரும்வரையில் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடம் வந்ததும்) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் "ஷாம் (சிரியா) பகுதியின் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையில் இரு "முத்"துகள், பேரீச்சம் பழத்தின் ஒரு "ஸாஉ"க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர்.
நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே நான் உயிர் வாழும்வரை வழங்கிக்கொண்டிருப்பேன்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 1797, 1798, ஸஹீஹுல் புகாரி:1508)
(ஸஹீஹ் முஸ்லிம்: 1797, 1798, ஸஹீஹுல் புகாரி:1508)
பிறகு மக்கள் ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாஉ அளவு தீட்டிய (மணிக்) கோதுமையை ஆக்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி:1507, ஸஹீஹ் முஸ்லிம்:1793 )
இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட அரை "ஸாஉ" (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு "ஸாஉ"வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1800)
6. உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களது காலத்தில் அளவுகோல் அதிகரிக்கபட்டது
நபி (ஸல்) மதீனாவாசிகளின் ‘ஸாஉ’ மற்றும் அவர்களின் ‘முத்(து)’ ஆகிய அளவைகளில் பரக்கத்திற்காக பிரார்தித்தார்கள்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் :”இறைவா! மதீனாவாசிகளின் ‘ஸாஉ’ மற்றும் அவர்களின் ‘முத்(து)’ ஆகிய அளவைகளில் அவர்களுக்கு வளத்தைக் கொடுப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி 5425, 5654, 6372, ஸஹீஹ் முஸ்லிம் 2663)
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘ஸாஉ’ என்பது, இன்றைக்கு (நடைமுறை யிலிருக்கும்) உங்களது ‘முத்’தில் ஒரு ‘முத்’தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1/3) கொண்டதாக இருந்தது. பின்னர் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களது காலத்தில் இதன் அளவு அதிகமாக்கப் பட்டது (ஸஹீஹுல் புகாரி 6712, 7330)
அபூகுதைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், “(மதீனாவில் வழக்கிலுள்ள) எங்களது ‘முத்’தே (ஹிஷாம் உருவாக்கிய) உங்களது ‘முத்’தைவிட (அளவில் சிறியதானாலும் வளத்தில்) பெரியதாகும். நபி (ஸல்) அவர்களது (காலத்தில் இருந்த மதீனா) ‘முத்’தில் தவிர வேறொன்றில் சிறப்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை” என்று கூறினார்கள்.
மேலும், அவர்கள் என்னிடம் “ஓர் ஆட்சியாளர் உங்களிடம் வந்து நபி (ஸல்) அவர்களது ‘முத்’தைவிட (அளவில்) சிறியதொரு ‘முத்’தை நிர்ணயித்தால், நீங்கள் எந்த அளவையைக் கொண்டு (ரமளான் தர்மம், பரிகாரம் ஆகியவற்றை) வழங்குவீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நபி (ஸல்) அவர்களது ‘முத்’தைக் கொண்டே வழங்குவோம்” என்று கூறினேன். அவர்கள் “பார்த்தீர்களா? (இறுதியில்) விஷயம் நபி (ஸல்) அவர்களது ‘முத்’துக்கே வந்து சேர்கிறது” என்றார்கள் (ஸஹீஹுல் புகாரி: 6713, மலிக் முவத்தா 631)
மேலும் விபரங்கள்:
No comments:
Post a Comment