Wednesday, August 2, 2023

இகாமத் சட்டங்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


 1) இகாமத் சொல்லப்பட்டால் பர்ளான தொழுகையை தவிர வேறு தொழுகை கிடையாது

(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (ஸஹீஹ் முஸ்லிம் 1281)

அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டோம். அவர், “உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்” என்று கூறினார்கள் என்றார்.  (ஸஹீஹ் முஸ்லிம் 1283)

இப்னு புஹைனா (அப்துல்லாஹ் பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது; அப்போது ஒரு மனிதர் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுகொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள்; முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), “சுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?” என்று கேட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1284)

அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகை (சுப்ஹுத்) தொழுவித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்; பள்ளிவாசலின் ஒரு மூலையில் (சுப்ஹுடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) சேர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும், “இன்னாரே! இவ்விரு தொழுகைகளில் எதைக் கருதி வந்தீர்? நீர் தனியாகத் தொழுவதற்கா? அல்லது எம்முடன் சேர்ந்து தொழுவதற்கா?” என்று கேட்டார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 1285)

இகாமத் சொல்லப்பட்டால் உபரியான அனைத்து தொழுகைகளையும் விட்டு விட்டு இமாமுடன் கடமையான தொழுகையை நிறைவேற்ற இணைந்தது கொள்ள வேண்டும்.

2) மஃமூங்கள் தொழுகைக்காக எப்போது எழுந்திருக்க வேண்டும்..?

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي خَرَجْتُ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَحَدِيثُ أَنَسٍ غَيْرُ مَحْفُوظٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي قَتَادَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنْ يَنْتَظِرَ النَّاسُ الإِمَامَ وَهُمْ قِيَامٌ ‏.‏ وَقَالَ بَعْضُهُمْ إِذَا كَانَ الإِمَامُ فِي الْمَسْجِدِ فَأُقِيمَتِ الصَّلاَةُ فَإِنَّمَا يَقُومُونَ إِذَا قَالَ الْمُؤَذِّنُ قَدْ قَامَتِ الصَّلاَةُ قَدْ قَامَتِ الصَّلاَةُ ‏.‏ وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்காதவரை எழுந்திருக்க வேண்டாம். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி:637,638  முஸ்லிம் 1058,திர்மிதி: 540, 180)

நபித்தோழர்கள் உள்ளிட்ட அறிஞர்களில் ஒரு குழுவினர், (இமாம் வருவதற்கு முன் இகாமத் சொல்லப்பட்டாலும்), இமாமை எதிர்பார்ந்து நிற்பது வெறுக்கத் தக்கதாகும் என்கின்றனர். 

அறிஞர்களில் வேறுசிலர், இமாம் பள்ளிவாசலுக்குள் இருக்கும் போது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால், தொழுகை அறிவிப்பாளர் 'கத் காமத்திஸ் ஸலாத், கத் காமத்திஸ் ஸலாத்' என்று கூறும்போதுதான் மக்கள் எழ வேண்டும்" என்று கூறுகின்றனர். இதுவே அப்துல்லாஹ் பின் அல்முபாரக்(ரஹ்) அவர்களின் கூற்றாகும். 

இன்றைய சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அறிஞர்கள் பல்வேறு வழிமுறைகளைக் குறிப்பிடுகிறார்கள். 
1. இகாமத் சொல்லி முடித்த பிறகுதான் மக்கள் எழ வேண்டும் என்பது சிலரது கருத்தாகும்.
2. வேறு சிலர் இகாமத் சொல்லத் தொடங்கியவுடனேயே மக்கள் எழுந்துவிட வேண்டும் என்கிறார்கள். 
3. 'கத் காமத்திஸ் ஸலாத்' சொல்லப்படும்போது எழுந்திருக்க வேண்டும் என்று சிலரும்
4. 'ஹய்ய் அலஸ் ஸலாத்' தொல்லும்போது எழ வேண்டும் என்று வேறு சிலரும் கூறுகிறார்கள்.

இதுவெல்லாம் சிறந்த முறை எது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. எல்ல முறையும் செல்லும். 
(அல்மின் ஹாஜ்)


3) இமாமை சேர வேண்டிய முறை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி:908)

عن أبي هريرة – رضي الله عنه – قال: سمعت رسول الله – صلى الله عليه وسلم – أنه قال: (إِذَا أُقِيمَتْ الصَّلَاةُ فَلَا تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ عَلَيْكُمْ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا).1

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள். ‘என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி : 636)

4) இகாமத் சொல்லப்பட்ட பின் இமாமுக்கு தேவைகள் ஏற்பட்டால் மஃமூங்கள் இமாம் வரும் வரை காத்திருக்க வேண்டும் அவர் காத்திருக்கும் படி கூறினால்

بَابٌ: إِذَا قَالَ الإِمَامُ: مَكَانَكُمْ حَتَّى رَجَعَ انْتَظَرُوهُ
640 – حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عبدالرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُقِيمَتِ الصَّلاَةُ، فَسَوَّى النَّاسُ صُفُوفَهُمْ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ، فَتَقَدَّمَ، وَهُوَ جُنُبٌ، ثُمَّ قَالَ: عَلَى مَكَانِكُمْ فَرَجَعَ فَاغْتَسَلَ، ثُمَّ خَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً، فَصَلَّى بِهِمْ.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தங்கள் வரிசைகளைச் சரி செய்தனர். நபி(ஸல்) அவர்கள் வந்து முன்னே நின்றார்கள். அவர்களின் மீது குளிப்புக் கடமையாகி இருந்தால், ‘உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். பின்னர் தலையிலிருந்து நீர் சொட்ட வந்து எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
(ஸஹீஹ் புகாரி : 640)

இஸ்லாமிய ஆட்சி இருந்தால் ஆட்சியாளரும் அவரால் நியமிக்கப்படும் இமாம்களுமே தொழுகை நடத்த வேண்டும் அப்படியான சூழ்நிலை இன்று எம்மத்தியில் இல்லை என்பதால் மஸ்ஜித் நிர்வாகங்களால் நியமிக்கப்பட்டுள்ள இமாமுக்கு தேவைகள் ஏற்பட்டால் அவருக்கு அடுத்தபடியான தகுதியில் இருப்பவரை நாம் தொழுகைக்காக இமாமாக நியமிக்கலாம்

5) வரிசைகளை ஒழுங்குபடுத்தல்

பஷீர் இப்னு யஸார் கூறினார்:
அனஸ்(ரலி) மதீனா வந்தபோது, ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்துள்ள நடைமுறைக்கு மாற்றமாக எங்களிடம் எதையேனும் காண்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது. ‘நீங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தவறையும் உங்களிடம் நான் காணவில்லை’ என்று அனஸ்(ரலி) கூறினார்.
(ஸஹீஹ் புகாரி :724)

1: இமாமுக்கு அடுத்து வரிசையில் நிற்க தகுதியானவர்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் அறிவிற் சிறந்தவர் எனக்கு அருகில் (தொழுகையில் முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள் (அடுத்த வரிசையில்) நிற்கட்டும். (இதை மூன்று முறை கூறினார்கள்.) மேலும், (தொழுகைக்கு ஒன்றுகூடும்போது) கடைத்தெரு(வில் கூச்சலிடுவதைப் போன்று) கூச்சலிடுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் : 740)

2: அணிவகுத்து நேராக நிற்க வேண்டும்

 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் நாங்கள் தொழுதுகொண்டிருந்தபோது எங்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அப்போது (நாங்கள் சலாம் கொடுக்கையில் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தோம். இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் உங்களது கைகளைச் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று உயர்த்திக்கொண்டிருக்கிறீர்கள்? தொழுகையில் அடக்கத்தோடு இருங்கள் என்று கூறினார்கள். பிறகு (மற்றொரு முறை) அவர்கள் எங்களிடம் வந்தபோது நாங்கள் வட்ட வட்டமாக (தனித்தனிக் குழுவாக) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், ஏன் (ஓரணியில் இணையாமல்) பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள்? என்று கேட்டார்கள். பிறகு (இன்னொரு முறை) அவர்கள் எங்களிடம் வந்தபோது, அறிந்துகொள்ளுங்கள்! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைப்போன்று நீங்கள் அணிவகுத்து நில்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் எப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்? என்று கேட்டோம். அதற்கு வானவர்கள் (முதலில்) முதல் வரிசையைப் பூர்த்தி செய்வார்கள்; வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் (இடைவெளி விடாமல்) நெருக்கமாக நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் :736)

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காணுகிறேன். ‘என அனஸ்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி:718)

3: இடைவெளி இன்றி நெருங்கி இருக்க வேண்டும்

அனஸ்(ரலி) அறிவித்தார்.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, ‘வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின் புறமாகவும் உங்களை நான் காணுகிறேன்’ என்றார்கள்.
(ஸஹீஹ் புகாரி :719)

725. அனஸ்(ரலி) கூறினார்: ‘உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒருவர் தம் தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும் தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள்.(ஸஹீஹ் புகாரி :725)

4: பெண்களின் வரிசையில் சிறந்தது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும். (ஸஹீஹ் முஸ்லிம் :749)

5: தொழுகையின் பூர்த்தி வரிசைகளை ஒழுங்குபடுத்துவதில் உள்ளது

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘வரிசையை ஒழுங்கு படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்கு படுத்துவது தொழுகையை நிலை பெறச் செய்வதாகும். ‘என அனஸ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி:723)

6: வரிசையை ஒழுங்குபடுத்தா விட்டால் உள்ளங்கள் வேறுபடும்.

739. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் ஆரம்பத்தி)ல் எங்களுடைய தோள்களைத் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள்; மேலும், நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும் (ஸஹீஹ் முஸ்லிம்:739)

744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்திவிடுவான். இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்:744)

அல்லாஹ் மிக அறிந்தவன்
தொகுப்பு: இன்திகாப் உமரீ
நன்றி   https://www.islamkalvi.com/?p=118834  

Tuesday, June 27, 2023

அரஃபா தினத்தின் சிறப்புகள்

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அரஃபா தினத்தின் சிறப்புகள்

1. அரஃபா தினத்தில் தான் அல்லாஹ் இஸ்லாமிய மார்கத்தை முழுமையாக்கி வைத்தான். அன்று தான் அல்மாயிதா அத்தியாத்தின் 3 வசனமான "இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்" இறக்கப்பட்டது. 

45. தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (அமீருல் முஃமினீன்!) நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்தில் ஒரு வசனம் உள்ளது. அது யூதர்களாகிய எங்கள்மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக்கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள்.அதற்கு அந்த யூதர், “இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக முழுமை யாக்கிவிட்டேன். உங்கள்மீது எனது அருட்கொடையை நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டுவிட்டேன்” (5:3) (என்பதே அந்த வசனமாகும்)” என்றார்.அதற்கு உமர் (ரலி) அவர்கள் “இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் ‘அரஃபா’ பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாள் எங்களுக்குப் பண்டிகை நாள்தான்)” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி :45, ஸஹீஹ் முஸ்லிம்:5740)

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், அரஃபா நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். "இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?" என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்:2623)

 رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

“எங்கள் இரட்சகனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டும் நீர் திருப்பிவிடுவாயாக! ஏனென்றால்,) நிச்சயமாக அதன் வேதனை நிலையானதாகும்" (ஸூரத்துல் ஃபுர்ஃகான்  25:65)

3. துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:2151)

https://islamqa.info/en/answers/7284/virtues-of-the-day-of-arafah

Sunday, April 2, 2023

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன் உரக்க பேசிய ஸஹாபி

  بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி)  என்ற ஸஹாபி இயற்கையிலேயே குரலை நபி(ஸல்) முன்னிலையில் உயர்திப் பேசுபவர்.  அவர்கள் அன்சாரிகளின் பேச்சாளராக இருந்தார்கள்.

அல்லாஹுத் தஆலா 49:2 வசணத்தை இறக்கினான்.

விசுவாசிகளே! நபியினுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள், மேலும், உங்களில் சிலர் மற்ற சிலருடன் உரக்கப் பேசுவதைப் போல், அவரிடம் பேசுவதில் (சப்தத்தை உயர்த்தி) நீங்கள் உரக்கப் பேசாதீர்கள், (ஏனெனில், இதனை) நீங்கள் உணர்ந்துக்கொள்ள முடியாத நிலையில் உங்களுடைய (நன்மையான) செயல்கள் அழிந்துவிடும். (49:2)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார்.

அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்துகொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.

அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘(எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்குமேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி)வந்தேன். என் (நற்)செயல்கள் அழிந்துவிட்டன; நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்” என்று தெரிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று ‘நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்!” என்று கூறினார்கள்
(ஸஹீஹுல் புகாரி: 4846, 3613,ஸஹீஹ் முஸ்லிம்: 187)


Saturday, April 1, 2023

தேவையில்லாமல் உரக்க பேசாதீர்

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

உன் சப்தத்தையும் தாழ்த்திகொள்வாயாக! (ஏனென்றால்) நிச்சயமாக சப்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது, கழுதைகளின் சப்தமே” என்று (லுஃக்மான் தம் புதல்வரிடம்) கூறினார். (21:19)

தேவையில்லாமல் குரலை உயர்த்துபவரின் உச்ச நிலை என்னெவென்றால், அவர் கழுதைக்கு ஒப்பாகிவிடுவார். அதுதான் அப்படி கத்தும். அத்தோடு உயர்ந்தோன் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர் ஆளாகிவிடுவார். 

இங்கு கழுதைக்கு ஒப்பிட்டு அல்லாஹ் கூறியிருப்பதானது, இச்செயல் தடை செய்யப்பட்டதாகும் (ஹராம்) என்பதையும் மிகமிக இழிவானதாகும் என்பதையும் உணர்த்துகிறது. 

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (இது போன்ற) கெட்ட உதாரணம் நமக்கு உரியதன்று. (ஸஹீஹுல் புகாரி: 2622)

இந்த வசனத்தின் விளக்கவுரையில் இமாம் நஸயீ(ரஹ்) அவர்கள் தமது 'சுனனுல் குப்ராவில் பின்வரும் ஹதீஸை இடம்பெறச்செய்துள்ளார்கள். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சப்தத் தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கிறன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால் தான் கத்துகிறது.)" (ஸஹீஹுல் புகாரி: 3303)


நபி(ஸல்) அவர்களால் இடிக்க கட்டளையிடப்பட்ட பள்ளிவாசல்

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

நயவஞ்சகர்கள் கூபா பள்ளிவாசலுக்கு அருகே போட்டிப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் தபூக் போருக்கு செல்வதற்கு முன்பே கட்டி முடித்துவிட்டனர் பின்னர் அந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, "(அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் கட்டியிருக்கும் பள்ளிவாசலில் தாங்கள் தொழ வேண்டும். அவ்வாறு தொழுவதன் மூலம் உங்கள் ஒப்புதலுக்கும் அங்கீகாரத்திற்கும் அதையே நாங்கள் சான்றாகக்கொள்வோம்" என்றனர்.  நபி(ஸல்) அவர்கள், "போர் பயணத்த்தில் இருந்த்தால், தற்போது பணத்தில் உள்ளோம், எனினும் நாங்கள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பும்போது அல்லாஹ் நாடினால், பார்கலாம்" என பதிலுறைத்தார்கள். 

நபி(ஸல்) அவர்கள் தபூகிலிருந்த்து திரும்பிவந்துகொண்டிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து நயவஞ்சகர்கள்  கட்டிய அந்த தொல்லை தரும் பள்ளிவாசல்(மஸ்ஜிதுல் ளிரார்) தொடர்பான செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த பள்ளிவாசலை நிறுவியவர்கள், இறைமறுப்பை வளர்க்க வேண்டும் என்றும், தொடக்க நாள் முதல் இறையச்சத்தின் மீது நிறுவபட்ட பள்ளிவாசலாகிய குபா பள்ளிவாசலில் இறைநம்மிக்கையாளர்கிடையே பிரிவினை ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.  

என்வே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தாம் மதீனா வருவதற்கு முன்னரே அந்தப் பள்ளிவாசலை தரைமட்டமாக்குவதற்காக ஆட்களை அனுப்பினார்கள். 

(முஸ்லிம்களுக்குத்) தீங்கிழைப்பதற்காகவும் (அல்லாஹ்வை) நிராகரிப்பதற்காகவும் விசுவாசிகளுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணுவதற்காகவும் முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் விரோதமாய் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாயிருப்பதற்காகவும் ஒரு பள்ளியைக் கட்டியிருக்கின்றார்களே அத்தகையோர்-(அந்நயவஞ்சகர்களில் இருக்கின்றனர்.) மேலும், “நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று திண்ணமாக சத்தியமும் செய்கின்றனர், இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.  (நபியே!) நீர் ஒருபோதும் அதில் (தொழுவதற்காக) நிற்க வேண்டாம், ஆரம்ப நாளிலிருந்தே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளியானது, அதில்தான், நீர் (தொழுகைக்காக) நிற்பது மிகத் தகுதியுடையது, பரிசுத்தமாக இருப்பதையே விரும்பும் சிறந்த மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9:107-108)

குறிப்பு:
இனை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை வழிபாடு செய்வதற்கென்றே நிறுவபட்ட தொன்மையன பள்ளிவாசலில் தொழுவது விரும்பத் தக்கது என்பதற்குச் இந்த ஆயத்து சான்றாக அமைந்துள்ளது. 

அவ்வாறே அசுத்தங்கள் படாமல் காத்துக்கொள்வதிலும், அங்கத் தூய்மையை (உளூ) நிறைவாக செய்வதிலும், கண்ணும் கருத்துமாக இருக்கின்ற நல்லறங்கள் புரிகின்ற நல்லடியார்களோடு இணைந்து (கூட்டாக) தொழுவது  விரும்பத் தக்கது என்பதற்குச் இந்த ஆயத்து சான்றாக அமைந்துள்ளது.


Tuesday, March 21, 2023

10 things to do when the situation seems hopeless and you are stuck in a trial beyond your control

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

Change provides opportunity. We only can control our own reactions to things that we cannot control.

 10 things to do when the situation seems hopeless and you are stuck in a trial beyond your control:

1) Accept your Qadar and accept that Allah knows what is best for you

2) Trust Allah’s Plan. What Allah has planned for you may be different from what you want for yourself, but it is always what is best for you

3) Make dua. Only Allah can change Qadar, move mountains, work miracles, and make a way out from where we do not expect, so pour your heart out to Allah in dua for everything we need and want.

4) Make good use of your time. You cannot control some things but you can control others. Utilize your time to worship Allah, do beneficial work, and find things to appreciate in life.

5) Take whatever steps you can find towards your goal, even if they are small. Never stop making an effort, you do not know from which small effort Allah will help you produce big results.

6) Focus on your Afterlife. You may not aways get what you want in this world, but your Afterlife is more important, so do not let your worldly worries distract you from prioritizing your Afterlife.

7) Increase your charity. You never know which act of kindness or charity could be a means of unlocking Divine assistance.
Ask others to make dua for you. You do not know which pious person’s duas will be answered, leading to a miracle that gets you out of your situation.

9) Recite Quran often. The beautiful message of the Quran will give you hope, no matter how difficult and dark the situation feels.

10) Study and reflect on the Seerah. Take lessons from the trials that the Prophet (pbuh) and Sahabah faced and how Allah helped them through these trials in miraculous ways. Let these stories be your inspiration, motivation, and source of optimism.

- Ismail Kamdar

Tuesday, March 7, 2023

தடுக்கப்பட்ட நேரத்தில் தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்

ஜூம்மாவுடைய நேரத்தில், சூரியன் உச்சி நிலையில் இருக்கும்பொழுது சிலர் தஹிய்யதுல் மஸ்ஜித் எனும் மஸ்ஜித் காணிக்கைத் தொழுகையை தொழுவதை நாம் பரவலாக காண முடிகிறது. இந்த தொழுகை மட்டும் அல்லாமல், மற்றும் சில தொழுகைகளும் தொழலாமென சில அறிஞர்கள் கூறுகின்றனர். 

தொழக்கூடாத மற்றும் இறந்தவர்களை அடக்க கூடாத நேரம்:

உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.

1.சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை,
2.ஒருவர்உச்சிப் பொழுதில் நிற்கும்போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும்வரை.
3.சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும்வரை. (ஸஹீஹ் முஸ்லிம்:1511)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சூரியனின் ஒரு பகுதி (கிழக்கில்) தோன்றும் போது (தொழாதீர்கள்.) அது முழுமையாக வெளிப்படும்வரைத் தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்; சூரியனின் ஒரு பகுதி (மேற்கில்) மறையும்போது (தொழாதீர்கள்); அது முழுமையாக மறையும்வரைத் தொழுகையைத் தாமதப்பபடுத்துங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (ஸஹீஹ் முஸ்லிம்:1509)

ஏன் இந்நேரதில் தொழக்கூடாது மற்றும் இறந்தவர்களை அடக்க கூடாது::

அம்ரா பின் அபாஸா அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்)  கூறினார்கள்: "ஆம், இறைவன் தன் அடிமைக்கு மிக நெருக்கமானது இரவின் கடைசிப் பகுதியில் தான், அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களில் நீங்களும் இருக்க முடிந்தால், அவ்வாறு செய்யுங்கள். தொழுகைக்கு சூரியன் உதிக்கும் வரை (வானவர்களால்) சாட்சியாக இருக்கும், பின்னர் அது ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு இடையே உதயமாகும், அது இறைமறுப்பாளர்களின்  தொழுகை நேரமாகும். எனவே சூரியன் ஈட்டி உயரத்திற்கு எழுந்து அதன் கதிர்களின் மறையும் வரை தொழ வேண்டாம். 

பிறகு தொழுகை சூரியன் உச்சியை அடையும் வரை வானவர்கள் சாட்சியாளார்களாக இருப்பர்கள். உச்சி வேளை நரகத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு, அது எரியூட்டப்படும் நேரமாகும், எனவே நிழல்கள் தோன்றும் வரை தொழாதீர்கள். 

பிறகு தொழுகை சூரியன் ஷைத்தானின் கொம்புகளுக்கு இடையே அஸ்தமிக்கும் வரை வானவர்களால்  சாட்சி அளிக்கபடும். அதுவும் இறைமறுப்பாளர்களின்  தொழுகை நேரமாகும்". (நஸயி:572 ஸஹீஹ் தாருஸ்ஸலாம்)

அஸருக்குப்பின்  சூரியன் மறையும் வரையிலும், சுப்ஹூக்குப்பின் சூரியன் உதிக்கும் வரையிலும்

இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்,அஸருக்குப்பின்  சூரியன் மறையும் வரையிலும், சுப்ஹூக்குப்பின் சூரியன் உதிக்கும் வரையிலும் தொழக்கூடாது என்பதே பெரும்பாலான அறிஞர்களில் கருத்தாகும். அதேநேரத்தில் விடுபட்ட தொழுகை எதாவது இருந்தால் அல்லது மக்காவில் இறையில்லம் கஅபாவை சுற்றி(தவாஃப்) வந்த பின்னர் உள்ள தொழுகையை தொழலாம் என நபிதோழர்கள் மற்றும் அதற்கடுத்த ஒரு சாரார் கூறுகின்றனர். இதற்கு காரணம் நபி(ஸல்) அவர்கள் விடுபட்ட லுஹருக்கு பிந்தியதான இரண்டு ரக்ஆத்துககள் தொழுததினால் ஆகும். இதுவே ஷாஃபி(ரஹ்),  அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹி) ஆகியோரின் கூற்றாகும். 

ஆனால் நபிதோழர்கள் மற்றும் அதற்கடுத்த ஒரு சாரார் மக்காவில்கூட அவ்விரு நேரங்களில் தொழக்கூடாது என்கின்றனர். 

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்), மாலிக் பின் அனஸ்(ரஹ்), கூஃபாவாசிகளில் சிலர் ஆகியோர் இவ்வாறே கூறுகின்றனர். (திர்மிதி:169)

குறிப்பு: இந்த கருத்து வேறுபாட்டில் குறிப்பிட்ட உதயம், உச்சம், அஸ்தமம் பற்றி குறிப்பிடப்படவில்லை


[1.] தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை தடுக்கப்பட்ட நேரத்தில் தொழுவது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரே, தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை" என்றார். "எழுந்து, தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1584)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.

இதை அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி :444, திர்மிதி:290, இப்னுமாஜா :1012, இப்னு குஸைமா: 1827)

இந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கையில் இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் , "ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் தக்க காரணமின்றி இரண்டு ரக் அத்துக்கள் தொழாமல்  அமர்வது  விரும்பதக்கதல்ல என்று நம் (நபி இயல்) நண்பர்கள் கருதுகின்றனர்" எனக் கூறுகிறார்கள். 

தக்க காரணம் உண்டெனில் அமரலாம்:::

அபு அல்-ஜாஹிரியா(ரஹ்) கூறினார்:அப்துல்லா இப்ன் புஷ்ர் ஆறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்து மக்களின் தோள்களை தாண்டி தொண்டிருந்தார். இதை கண்ட நபி (ஸல்) அவர்கள்,"அமருங்கள், நீங்கள் (மக்களுக்கு) எரிச்சலூட்டினீர்கள்" என்று கூறினார்கள்(அபுதாவுத்:1118, நஸயி:1399. இப்ன் மாஜா:1115 ஸஹீஹ் அல்பானி,தாருஸ்ஸலாம்)

அபூவாக்கித் (ஹாரிஸ் பின் மாலிக் அல்லைஸீ - ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது, மூன்று பேர் வந்துகொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிவாசலுக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னால் வந்து நின்றார்கள்.அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது, அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக்கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே, அல்லாஹ் வும் அவரிடம் வெட்கப்பட்டுக்கொண் டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான் (ஸஹீஹுல் புகாரி :66)

இந்த ஹதீஸ்களிருந்து தொழாமல் அமர்வது ஹராம் அல்ல. தொழாமல் அமர வேண்டாம் என்ற இந்த ஏவல் கட்டாயம் என்பதைக் குறிக்காது என எடுப்பதே பொருத்தமானதாகும். 

1. முன் பின் சுன்னத்துகளை தொழுவது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையை விட்டும் போதுமாகும்.

2. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்::1281)


[2.] விடுபட்ட தொழுகை தடுக்கப்பட்ட நேரத்தில்

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) என்னை நினைவுகூரும் பொருட்டு தொழு கையை நிலைநிறுத்துவீராக. (20:14) (ஸஹீஹுல் புகாரி:597)


சூரியன் முழுமையாக உதிப்பதற்கு காத்துக்கொண்டு தொழுவித்த நபி(ஸல்)

அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்றுகொண்டிருந் தோம். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்ய லாமே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உங்களை நான் விழிக்கச்செய்கிறேன்” என்று கூறினார்கள். எனவே, அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக்கொண்டனர்.பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக்கொண்டி ருந்தபோது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில், நபி (ஸல்) அவர்கள் (முதன் முத-ல்) உறக்கத்தி-ருந்து விழித்தார்கள். உடனே, “பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். “இதுபோன்று உறக்கம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், தான் நாடும்போது உங்கள் உயிர்களைக் கைப்பற்றிக்கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்” என்று கூறிவிட்டு, “பிலால்! எழுந்து, பாங்கு சொல்- தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!” என்று கூறினார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்ட போது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள். (ஸஹீஹுல் புகாரி :595)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஃபஜருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக் அத்களை தொழாதவர், சூரியன் உதயமான பின்னர் அவற்றைத் தொழுது கொள்ளட்டும்". இதை அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அபூஈஸா திர்மிதி கூறுகின்றேன்: "இப்ன் உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு தொழுதுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென்று சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹி), ஷாஃபி(ரஹி), அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக்(ரஹ்) போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். (திர்மிதி:388)


[3.] மக்காவில் அஸருக்குப் பிறகும் சுப்ஹுக்குப் பிறகும் தவாஃப் தொழுகை தொழலாமா 

ஜூபைர் பின்முத்இம்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள்,"அப்து மனாஃபின் மக்களே! இந்த இறையில்லத்தைச் சுற்றி(தவாஃப்) வந்துவிட்டு தாம் நாடியபடி இரவு பகல் எந்நேரமும் தொழக்கூடிய யாரையும் தடுக்காதீர்கள்.

மக்காவில் அஸருக்குப் பிறகும் சுப்ஹுக்குப் பிறகும் தொழலாமா என்பது குறித்து அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். சிலர், அஸருக்குப் பிறகும் சுப்ஹுக்குப் பிறகும் தொழுவதும் தவாஃப் செய்வதும் தவறல்ல" என்று கூறுகின்றனர். 

இதுவே ஷாஃபி(ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹ்) அகியோரின் கூற்றாகும்.

வேறு சிலர்."அஸருக்குப்பின் தவாஃப் செய்கின்றவர், சூரியன் மறையும்வரை தொழக்கூடாது, சுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு தவாஃப் செய்கின்றவர் சூரியன் உதிக்கும்வரை தொழக் கூடாது" என்று கூறுகின்றனர். இதற்கு அவர்கள் உமர்(ரலி) அவர்கள் குறித்து வந்துள்ள ஒரு ஹதீஸை சான்றாகக் குறிப்பிடுகின்றனர், 

உமர்(ரலி) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் தவாஃப் செய்துவிட்டு, தொழாமலேயே மக்காவைவிட்டு புறப்பட்டுச் சென்று, 'தீ துவா' எனும் இடத்தில் தங்கினார்கள். அங்கு சூரியன் உதித்தபிறகு தொழுதார்கள்.  

தவாஃப் செய்தவர் இவ்விரு நேரங்களிலும் தொழலாகாது என்பதே சுஃப்யான அஸ்ஸவ்ரி(ரஹி), மாலிக் இப்ன் அனஸ்(ரஹி) ஆகியோரின் கூற்றாகும். (திர்மிதி:795 , மலிக் முவத்தா:821)

குறிப்பு: இந்த கருத்து வேறுபாட்டில் குறிப்பிட்ட உதயம், உச்சம், அஸ்தமம் பற்றி குறிப்பிடப்படவில்லை

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள், 'வஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்', என்ற புத்தகத்தில் கூறுகிறார்கள் : "
ஒரு செய்கை (அது எத்தகைய செய்கையானாலும் சரியே) அதைப் புரிவதினால் மனிதன் தன்னை அறியாமலே தவறின்பால் திரும்பி விடுவான் என்றும், அதில் எந்த பலாபலன்களுமில்லை என்றும் தெரிய வந்தால் அதைச் செய்யக்கூடாதென்று அவசியம் மனிதனை தடுக்க வேண்டும். இது சட்டக்கலை அறிஞர்களின் பொதுவான தீர்ப்பாகும்.

தொழுகை என்பது இறைவனின்‌ திருப்தியைப்‌ பெறுவதற்குரிய ஒரு தூய்மையான வழிப்பாடாகும்‌. அதை மிக விரும்பத்தகுந்த வழிப்பாடுகளில்‌ சேர்க்க வேண்டும்‌.

ஆனால்‌ மேற்கூறப்பட்ட இம்மூன்று நேரங்களிலும்‌ இந்த வழிப்பாட்டை (தொழுகையை) நிறைவேற்றும்போது தீமையான செயலாக அத்தொழுகை நிரூபிக்கப்‌படுகிறது. ஏனெனில்‌ இந்நேரம்‌ முஸ்லிம்களால்‌ நிறைவேற்றப்படும்‌ தொழுகை இணைவைக்கும்‌ ஷிர்க்குக்காரர்களின்‌ தொழுகையோடு ஒப்பாகிவிடும்‌. சூரியன்‌, சந்திரன்‌ மற்றும்‌ நட்சத்திரங்கள்‌, கோளங்கள்‌ இவற்றை வணங்கி வழிபடுகின்ற முஷ்ரிக்குகள்‌ இவற்றிற்கு தலைசாய்த்து ஸுஜுது செய்து இந்நேரங்களில்‌ தம்‌ வணக்கங்களை செலுத்துகின்றனர்‌. நட்சத்திரங்களிடமும்‌, சூரிய சந்திரன்களிடமும்‌ தம்‌ தேவையை வேண்டுகின்றனர்‌. இப்படியுள்ள நேரத்தில்‌ இம்முஷ்ரிக்குகளுடன்‌ சேர்ந்து தொழுதால்‌ (நாமும்‌ முஷ்ரிக்குகளுடன்‌ வணங்கும்‌ நேரத்தில்‌ ஒத்திருந்தால்‌) நம்மையும்‌ அந்த வணக்கங்கள்‌ சில நேரங்களில்‌ ஷிர்க்கின்‌ பக்கமாக இழுத்து விடுகிறது.

அன்றியும்‌ இவ்வேளைகளில்‌ தொழுவதில்‌ பிரத்தியேகமான சிறப்போ, மேன்மையோ, விசேஷமோ ஒன்றுமில்லை. பொதுவாக தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தி அவன்‌ திருப்தியைப்‌ பெறலாம்‌ என மனிதன்‌ எண்ணினால்‌ கூட அவ்வெண்ணம்‌ வீணாகி விடாது. ஏனெனில்‌ (இது அல்லாத) எந்த நேரமும்‌ தொழமுடியும்‌. அதற்கு அனுமதியும்‌ உண்டல்லவா? எனவே இக்குறிப்பிட்ட சில நேரங்களில்‌ மட்டும்‌ தொழாவிட்டாலும்‌ வேறு எல்லா நேரங்களிலும்‌ தொழலாம்‌. தொழுகையினால்‌ கிடைக்கும்‌ பிரதிபலன்களும்‌ இந்த விலக்களினால்‌ துண்டிக்கப்பட்டு விடாது. மனிதன்‌ தீமையிலிருந்தும்‌ காப்பாற்றப்படுகிறான்‌.

ஆக இந்நேரங்களில்‌ தொழவேண்டாமென தடுக்கப்‌ பட்டிருப்பதெல்லாம்‌ அத்தொழுகையைத்‌ தொழுகிறவன்‌ முஷ்ரிக்குகளைப்‌ போன்று சூரியனை வணங்கி, சூரியனிடம்‌ தன்‌ தேவைகளுக்காகப்‌ பிரார்த்தித்து, அதற்கு வழிபட்டு அதனால்‌ ஷிர்க்கின்பால்‌ சென்று விடலாகாது என்பதை பயப்படுவதனால்தான்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தொழுகைக்கு இந்நேரங்களைத்‌ தடுத்திருக்கிறார்கள்‌".


https://www.islamkalvi.com/?p=118365 

Friday, March 3, 2023

Praying Tahiyyat al-Masjid (the Prayer Before Sitting Down in the Masjid) in the Forbidden Times

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 

Praise be to Allah.
Times When it is Forbidden to Pray
1.) From sunrise until the sun has risen to the height of a spear (approximately one meter) above the horizon
2.) From when the sun is at midday, until it passes the meridian
3.) From the time the sun has reached the height of a spear from its setting till sunset.


There another 2 instances where there is difference of opinion among the companions and ahle-ilm. 

i.e.
4) From after the fajr prayer until the sun has risen
5.) From after salaat al-asr until the sun reaches the height of a spear above the horizon

It was narrated from Ibn Tawus that his father said:" Aishah, may Allah be please with her, said: 'Umar, may Allah be please with him, is not correct, rather the Messenger of Allah (ﷺ) only prohibited, as he said: 'Do no deliberately seek to pray when the sun is rising or when it is setting, for it rises between the horns of a Shaitan." [Sunan an-Nasa'i :570 Sahih (Darussalam) ]

In the explanation of Hadith in which Prophet(ﷺ) prayed after Asr, Imam Tirmidhi (Rah) says as follows: "Most of the people of knowledge agreed upon the disapproval of praying after the afternoon prayer until the sun sets and after the dawn prayer until the sun rises. They made exceptions to that, such as praying in Mecca after the afternoon prayer until the sun rises, after the dawn prayer until the sin rises, and after performing Tawaf; it was said by Al-Shafi’i, Ahmad, and Ishaq.

But some of the companions of Prophet(ﷺ) and some of the scholars from the next generation prohibited praying even in Makkah. Sufyan Ibn Thawri(Rah), Malik Ibn Anas(Rah) and some of the scholars of Khufa said that. " (Jami` at-Tirmidhi:184 -Hasan -Al-Tirmidhi)

قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ ‏.‏ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ ‏.‏ وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمُ الصَّلاَةَ بِمَكَّةَ أَيْضًا بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ ‏.‏ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَمَالِكُ بْنُ أَنَسٍ وَبَعْضُ أَهْلِ الْكُوفَةِ ‏.‏

Also Abu Hanifa (Rah), prohibited all kinds of prayer even the obligatory ones.

Note: Prophet(ﷺ) praying after asr is not an evidence to prove that this was done at sunset.  Also  Prophet(ﷺ) replied to Umm Salama(رَضِيَ اَللَّهُ عَنْهَا) whether praying 2 raka after Asr was exclusive for him in the same manner that he fasted for three consecutive days (without breaking the fast on the first or second day)

Prohibited times to pray and bury the dead

Uqbah ibn ‘Aamir (radhi Allaahu anhu) said: There were three times at which Allah's Messenger (ﷺ) forbade us to pray, or bury our dead: When the sun begins to rise till it is fully up, when the sun is at its height at Zenith(midday) till it passes over the meridian, and when the sun draws near to setting till it sets. (Sahih Muslim 831)

Why is it prohibited?

Abu Yahya Sulaim bin 'Amir, Damrah bin Habib and Abu Talhah Nu'aim bin Ziyad said:"We heard Abu Umamah Al-Bahili say: 'I heard 'Amrah bin 'Abasah say: I said: 'O Messenger of Allah, is there any moment which brings one close to Allah than another, or any moment that should be sought out for remembering Allah? He said: 'Yes, the closest that the Lord is to His slave is in the last part of the night, so if you can be among those who remember Allah at that time, then do so. For prayer is attended and witnessed (by the angels) until the sun rises, then it rises between the two horns of the Shaitan, that is the time when the disbelievers pray, so do not pray until the sun had risen to the height of a spear and its rays have disappeared. Then prayer is attended and witness (by the angels) until the sun is directly overhead at midday, and that is the time when the gates of Hell are opened and it is stoked up. So do not pray until the shadows appear. Then prayer is attended and witnessed (by angels) until the sun sets, and it sets between the horns of a Shaitan, and that is the time when the disbelievers pray.'" (Sunan an-Nasa'i 572 -Sahih (Darussalam))

The reason behind the prohibition are severe, like resembling the prayer of disbelievers worshipping the sun at that time and also Zenith is the time when the gates of Hell are opened and stoked up.

Some scholars give exceptions to following prayers based on general meaning of the hadith and the purpose of prayer. 

1.) Tahiyathul Masjid (Greeting of the Masjid)

Abu Qatada, a Companion of the Messenger of Allah (ﷺ), said: I entered the mosque, when the Messenger of Allah (ﷺ) had been sitting among people, and I also sat down among them. Upon this the Messenger of Allah (ﷺ) said: What prevented you from offering two rak'ahs (of Nafl prayer) before sitting down? I said: Messenger of Allah, I saw you sitting and people sitting (around you and I, therefore, sat in your company). He (the Holy Prophet) then said: When anyone among you enters the mosque, he should not sit till he has observed two rak'ahs. (Sahih Muslim 714b)

Narrated Abu Qatada Al-Aslami: Allah's Messenger (ﷺ) said, "If anyone of you enters a mosque, he should pray two rak`at before sitting."(Sahih al-Bukhari 444, Sahih Muslim 714b, Jami` at-Tirmidhi 316)

 وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَصْحَابِنَا اسْتَحَبُّوا إِذَا دَخَلَ الرَّجُلُ الْمَسْجِدَ أَنْ لاَ يَجْلِسَ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ إِلاَّ أَنْ يَكُونَ لَهُ عُذْرٌ
Imam Tirmidhi(rah) says, Our friends(hadiths) considers that one entering masjid without any proper reason should not sit without praying the two rakaths. 
Isn't it sunrise, zenith and sunset are proper reason to delay the prayers? Why does someone wants to pray  when the gates of Hell are opened and stoked up?

Also in some hadiths Prophet(ﷺ) asked to sit down for certain reasons

It was narrated from Abu Az-Zahiriyah about 'Abdullah bin Busr, he said: "I was sitting beside him on Friday and he said: 'A man came, stepping over people's necks, and the Messenger of Allah (ﷺ) said: 'Sit down, you are disturbing people." (Sunan an-Nasa'i 1399, Sunan Ibn Majah 1115, Sunan Abi Dawud 1118 All of them Sahih)

Narrated Abu Waqid Al-Laithi:While Allah's Messenger (ﷺ) was sitting in the mosque with some people, three men came. Two of them came in front of Allah's Messenger (ﷺ) and the third one went away. The two persons kept on standing before Allah's Messenger (ﷺ) for a while and then one of them found a place in the circle and sat there while the other sat behind the gathering, and the third one went away. When Allah's Messenger (ﷺ) finished his preaching, he said, "Shall I tell you about these three persons? One of them betook himself to Allah, so Allah took him into His grace and mercy and accommodated him, the second felt shy from Allah, so Allah sheltered Him in His mercy (and did not punish him), while the third turned his face from Allah and went away, so Allah turned His face from him likewise. " (Sahih al-Bukhari 66)

From the above hadiths its is also clear that the companions didn't pray Tahiyathul Masjid and had they prayed it  would have been mentioned. 

Also Khateeb doesn't pray the Tahiyathul Masjid  on Friday as Prophet sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) who used to enter the masjid and ascend the pulpit without praying two units of prayer, as he is busy with the sermon instead of the two units of prayer.

Also one can't pray when the iqamah for next salah is called
Abu Huraira reported the Messenger of Allah (ﷺ) as saying: When the prayer commences, there is no prayer but the obligatory one.(Sahih Muslim 710b,Jami` at-Tirmidhi 421)

Also praying sunnah is suffice for prayer Tahiyathul Masjid

2.) Missed Salah

Narrated Anas:The Prophet (ﷺ) said, "If anyone forgets a prayer he should pray that prayer when he remembers it. There is no expiation except to pray the same." Then he recited: "Establish prayer for My (i.e. Allah's) remembrance." (20.14).( Sahih al-Bukhari 597, Sahih Muslim 684a)

Prophet (ﷺ)  waited for the sun to rise up

Narrated `Abdullah bin Abi Qatada:My father said, "One night we were traveling with the Prophet (ﷺ) and some people said, 'We wish that Allah's Messenger (ﷺ) would take a rest along with us during the last hours of the night.' He said, 'I am afraid that you will sleep and miss the (Fajr) prayer.' Bilal said, 'I will make you get up.' So all slept and Bilal rested his back against his Rahila and he too was overwhelmed (by sleep) and slept. The Prophet (ﷺ) got up when the edge of the sun had risen and said, 'O Bilal! What about your statement?' He replied, 'I have never slept such a sleep.' The Prophet (ﷺ) said, 'Allah captured your souls when He wished, and released them when He wished. O Bilal! Get up and pronounce the Adhan for the prayer.' The Prophet (ﷺ) performed ablution and when the sun came up and became bright, he stood up and prayed." (Sahih al-Bukhari 595)


 لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏ وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ فَعَلَهُ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ
Abu Hurairah narrated that:Allah's Messenger (S) said: "Whoever did not pray the two Rak'ah (before) Fajr then let him pray them after the sun has risen."

Abdhullah Ibn Umar(ra) used to pray like these. This is also the view of Sufyan Ibn Tahwri(rah), Shafi(rah), Ahmed Ibn Hanbal(rah), Ishaq Ibn Rahawaihi(rah), Abhullah Ibn Mubarak (rah)
(Jami` at-Tirmidhi 423)


The prohibition to pray at the sunrise, zenith and sunset are severe, so it is better to delay the salah. 

3.) Two Rak‘ahs of Tawaf

Jubair bin Mut'im narrated that : The Prophet (ﷺ) said: "O Banu Abd Manaf! Do not prevent anyone from performing Tawaf around this House, and Salat, whichever hour it is of the night or day."

Scholars have different on whether one can pray the tawaf prayer after subh and after Asr. Some say that there is not harm in praying after Subh and after Asr.This is the view of Shafi(rah), Ahmad Bin Hanbal(rah), Isqaq bin rahavaihi(rah)

Other say, the one who does do tawaf should not pray until sun has risen and one who does tawaf at asr should not pray until magrib. They quote the Hadith of Umar Ibn Khattab(ra) where he(ra) did tawaf after Subh and went to Dhee Tuwa, waited there until sunrise and prayed after sunrise. 

This is also the view of Sufyan Ibn Thawri(rah) and Malik Ibn Anas(rah)
(Jami` at-Tirmidhi 868 Sahih -Darussalam)
وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ بِمَكَّةَ فَقَالَ بَعْضُهُمْ لاَ بَأْسَ بِالصَّلاَةِ وَالطَّوَافِ بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ ‏.‏ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ وَاحْتَجُّوا بِحَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا ‏.‏ وَقَالَ بَعْضُهُمْ إِذَا طَافَ بَعْدَ الْعَصْرِ لَمْ يُصَلِّ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَكَذَلِكَ إِنْ طَافَ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ لَمْ يُصَلِّ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ‏.‏ وَاحْتَجُّوا بِحَدِيثِ عُمَرَ أَنَّهُ طَافَ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ فَلَمْ يُصَلِّ وَخَرَجَ مِنْ مَكَّةَ حَتَّى نَزَلَ بِذِي طُوًى فَصَلَّى بَعْدَ مَا طَلَعَتِ الشَّمْسُ ‏.‏ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ
 

Umar ibn al-Khattab (radhi Allaahu anhu) had delayed the Salathul Tawaf
Yahya related to me from Malik from Ibn Shihab from Humayd ibn Abd ar-Rahman ibn Awf that Abd ar-Rahman ibn Abd al-Qari mentioned to him that he once did tawaf of the House with Umar ibn al-Khattab after subh and when Umar had finished his tawaf he looked and saw that the sun had not yet risen, so he rode on until he made his camel kneel at Dhu Tuwa, and he prayed two rakas. (Malik Muwatta:821)
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدٍ الْقَارِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، طَافَ بِالْبَيْتِ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ فَلَمَّا قَضَى عُمَرُ طَوَافَهُ نَظَرَ فَلَمْ يَرَ الشَّمْسَ طَلَعَتْ فَرَكِبَ حَتَّى أَنَاخَ بِذِي طُوًى فَصَلَّى رَكْعَتَيْنِ ‏.‏

Note: Also the above Hadiths does not mention about praying in sunrise, zenith or sun set. And we know that Umar (ra) was of opiniion that one should not pray anything after Fajr till sunrise and after Asr till sunset. 

Conclusion
Shaik Ibn Taimmiyah (rah) in his book "Ath-Tawassiluli Wal Waseelathi" (Tawassul And Wasila) says the reason behind prohibiting praying at sunrise, zenith and sunset is that the act of praying would imitatea mushriq worshiping sun, asking dua from the sun and obeying sun. A Muslim would unknowingly fall into shirk. Also there is no extra benefits in praying at those times". 



The prohibitions and the reasons behind the specific timings are severe for prayer and burying dead.
There are NO evidence to prove that Prophet(ﷺ) allowed these purposeful prayers during these forbidden times. 

Why does one can't wait for few mins (usually 3 mins) for the sunrise, zenith or sunset, There is no exception for burying the dead, so why to take exception for  Nafil prayers?


Ath-Tawassiluli Wal Waseelathi book for download: noor-book.com/en/su3hgd

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...