Saturday, April 1, 2023

தேவையில்லாமல் உரக்க பேசாதீர்

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

உன் சப்தத்தையும் தாழ்த்திகொள்வாயாக! (ஏனென்றால்) நிச்சயமாக சப்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது, கழுதைகளின் சப்தமே” என்று (லுஃக்மான் தம் புதல்வரிடம்) கூறினார். (21:19)

தேவையில்லாமல் குரலை உயர்த்துபவரின் உச்ச நிலை என்னெவென்றால், அவர் கழுதைக்கு ஒப்பாகிவிடுவார். அதுதான் அப்படி கத்தும். அத்தோடு உயர்ந்தோன் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர் ஆளாகிவிடுவார். 

இங்கு கழுதைக்கு ஒப்பிட்டு அல்லாஹ் கூறியிருப்பதானது, இச்செயல் தடை செய்யப்பட்டதாகும் (ஹராம்) என்பதையும் மிகமிக இழிவானதாகும் என்பதையும் உணர்த்துகிறது. 

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (இது போன்ற) கெட்ட உதாரணம் நமக்கு உரியதன்று. (ஸஹீஹுல் புகாரி: 2622)

இந்த வசனத்தின் விளக்கவுரையில் இமாம் நஸயீ(ரஹ்) அவர்கள் தமது 'சுனனுல் குப்ராவில் பின்வரும் ஹதீஸை இடம்பெறச்செய்துள்ளார்கள். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சப்தத் தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கிறன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால் தான் கத்துகிறது.)" (ஸஹீஹுல் புகாரி: 3303)


No comments:

குளிக்கும் முறை

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ குளிக்கும் முறை: 1.நிய்யத் (குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்) 2. முன் கைக...