Saturday, April 1, 2023

நபி(ஸல்) அவர்களால் இடிக்க கட்டளையிடப்பட்ட பள்ளிவாசல்

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

நயவஞ்சகர்கள் கூபா பள்ளிவாசலுக்கு அருகே போட்டிப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் தபூக் போருக்கு செல்வதற்கு முன்பே கட்டி முடித்துவிட்டனர் பின்னர் அந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, "(அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் கட்டியிருக்கும் பள்ளிவாசலில் தாங்கள் தொழ வேண்டும். அவ்வாறு தொழுவதன் மூலம் உங்கள் ஒப்புதலுக்கும் அங்கீகாரத்திற்கும் அதையே நாங்கள் சான்றாகக்கொள்வோம்" என்றனர்.  நபி(ஸல்) அவர்கள், "போர் பயணத்த்தில் இருந்த்தால், தற்போது பணத்தில் உள்ளோம், எனினும் நாங்கள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பும்போது அல்லாஹ் நாடினால், பார்கலாம்" என பதிலுறைத்தார்கள். 

நபி(ஸல்) அவர்கள் தபூகிலிருந்த்து திரும்பிவந்துகொண்டிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து நயவஞ்சகர்கள்  கட்டிய அந்த தொல்லை தரும் பள்ளிவாசல்(மஸ்ஜிதுல் ளிரார்) தொடர்பான செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த பள்ளிவாசலை நிறுவியவர்கள், இறைமறுப்பை வளர்க்க வேண்டும் என்றும், தொடக்க நாள் முதல் இறையச்சத்தின் மீது நிறுவபட்ட பள்ளிவாசலாகிய குபா பள்ளிவாசலில் இறைநம்மிக்கையாளர்கிடையே பிரிவினை ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.  

என்வே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தாம் மதீனா வருவதற்கு முன்னரே அந்தப் பள்ளிவாசலை தரைமட்டமாக்குவதற்காக ஆட்களை அனுப்பினார்கள். 

(முஸ்லிம்களுக்குத்) தீங்கிழைப்பதற்காகவும் (அல்லாஹ்வை) நிராகரிப்பதற்காகவும் விசுவாசிகளுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணுவதற்காகவும் முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் விரோதமாய் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாயிருப்பதற்காகவும் ஒரு பள்ளியைக் கட்டியிருக்கின்றார்களே அத்தகையோர்-(அந்நயவஞ்சகர்களில் இருக்கின்றனர்.) மேலும், “நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று திண்ணமாக சத்தியமும் செய்கின்றனர், இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.  (நபியே!) நீர் ஒருபோதும் அதில் (தொழுவதற்காக) நிற்க வேண்டாம், ஆரம்ப நாளிலிருந்தே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளியானது, அதில்தான், நீர் (தொழுகைக்காக) நிற்பது மிகத் தகுதியுடையது, பரிசுத்தமாக இருப்பதையே விரும்பும் சிறந்த மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9:107-108)

குறிப்பு:
இனை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை வழிபாடு செய்வதற்கென்றே நிறுவபட்ட தொன்மையன பள்ளிவாசலில் தொழுவது விரும்பத் தக்கது என்பதற்குச் இந்த ஆயத்து சான்றாக அமைந்துள்ளது. 

அவ்வாறே அசுத்தங்கள் படாமல் காத்துக்கொள்வதிலும், அங்கத் தூய்மையை (உளூ) நிறைவாக செய்வதிலும், கண்ணும் கருத்துமாக இருக்கின்ற நல்லறங்கள் புரிகின்ற நல்லடியார்களோடு இணைந்து (கூட்டாக) தொழுவது  விரும்பத் தக்கது என்பதற்குச் இந்த ஆயத்து சான்றாக அமைந்துள்ளது.


No comments:

Little movements in prayer

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The evidence that small movements, or repeated movements that are not continuous, do not invalidate ...