அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் :1975
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.
பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்து சேர்ந்தேன்.
அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது "நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நீயே அதைக் கண்டாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்" என்று சொன்னார்கள். அதற்கு நான், "முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?" என்று கேட்டேன். அதற்கு, "இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
باب بَيَانِ أَنَّ لِكُلِّ بَلَدٍ رُؤْيَتَهُمْ وَأَنَّهُمْ إِذَا رَأَوْا الْهِلَالَ بِبَلَدٍ لَا يَثْبُتُ حُكْمُهُ لِمَا بَعُدَ عَنْهُمْ
பாடம் : 5 ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே (கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்). ஓர் ஊரில் பிறை பார்த்தால்,வெகு தொலைவில் உள்ளவர்களுக்கு அது பொருந்தாது.
இமாம் திர்மிதி (ரஹி):
باب مَا جَاءَ لِكُلِّ أَهْلِ بَلَدٍ رُؤْيَتُهُمْ
ஒவ்வொரு நாட்டவரும் அவரவர் பார்க்கும் பிறையே(கணக்கில் கொள்ளப்படும்)
இமாம் அபுதாவுத் (ரஹி):
பிற நாடுகளுக்கு பிறை தெரிவதற்கு ஒரு இரவு முன் அந்த நாட்டில் பிறை தென்படல் பற்றிய பாடம்
(9)باب إِذَا رُؤِيَ الْهِلاَلُ فِي بَلَدٍ قَبْلَ الآخَرِينَ بِلَيْلَةٍ
இமாம் நஸஈ (ரஹி):
இரு நாட்டு மக்களிடம் பிறை காண்பது பற்றி கருத்து வேறுபாடு
(7) باب اخْتِلاَفِ أَهْلِ الآفَاقِ فِي الرُّؤْيَةِ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் :1975
இந்த ஹதீஸை ஸஹபாக்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்கள்:
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் 1983. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.
பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்து சேர்ந்தேன்.
அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது "நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நீயே அதைக் கண்டாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்" என்று சொன்னார்கள். அதற்கு நான், "முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?" என்று கேட்டேன். அதற்கு, "இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இந்த ஹதீஸை ஹதீஸ் தொகுப்பாளர்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்கள்:
இமாம் முஸ்லிம் (ரஹி) இவ்வாறு தலைப்பு இடுகிறார்கள்:باب بَيَانِ أَنَّ لِكُلِّ بَلَدٍ رُؤْيَتَهُمْ وَأَنَّهُمْ إِذَا رَأَوْا الْهِلَالَ بِبَلَدٍ لَا يَثْبُتُ حُكْمُهُ لِمَا بَعُدَ عَنْهُمْ
பாடம் : 5 ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே (கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்). ஓர் ஊரில் பிறை பார்த்தால்,வெகு தொலைவில் உள்ளவர்களுக்கு அது பொருந்தாது.
இமாம் திர்மிதி (ரஹி):
باب مَا جَاءَ لِكُلِّ أَهْلِ بَلَدٍ رُؤْيَتُهُمْ
ஒவ்வொரு நாட்டவரும் அவரவர் பார்க்கும் பிறையே(கணக்கில் கொள்ளப்படும்)
இமாம் அபுதாவுத் (ரஹி):
பிற நாடுகளுக்கு பிறை தெரிவதற்கு ஒரு இரவு முன் அந்த நாட்டில் பிறை தென்படல் பற்றிய பாடம்
(9)باب إِذَا رُؤِيَ الْهِلاَلُ فِي بَلَدٍ قَبْلَ الآخَرِينَ بِلَيْلَةٍ
இமாம் நஸஈ (ரஹி):
இரு நாட்டு மக்களிடம் பிறை காண்பது பற்றி கருத்து வேறுபாடு
(7) باب اخْتِلاَفِ أَهْلِ الآفَاقِ فِي الرُّؤْيَةِ
பிறையில் பிரியும் சமூகம்:
பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள், பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள் என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். பிறையைக் காண்பதன் மூலமே ரமழான் பிறக்கின்றது! ஷவ்வால் பிறை தென்படுவதன் மூலமே ரமழான் முடிகின்றது. பிறை தென்படாவிட்டால் மாதத்தை முப்பதாகத் தீர்மானிக்க வேண்டும். இதுவே நபி(ச) அவர்களின் போதனையாகும்.
நவீன விஞ்ஞான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதால் பிறை உதிப்பதை விஞ்ஞானக் கருவிகளினூடாக கணிப்பிட்டு நோன்பைத் தீர்மானிக்கலாம் என சிலர் கருதுகின்றனர். பிறை தோன்றினால் நோன்பு பிடியுங்கள் என நபி(ச) அவர்கள் கூறவில்லை. பிறையைக் கண்டால் நோன்பு பிடியுங்கள் என்றுதான் கூறியுள்ளார்களே தவிர பிறை தோன்றினால் ரமழானை ஆரம்பியுங்கள் என்று கூறவில்லை. எனவே, இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிறையைக் கண்டு பிடியுங்கள், கண்டு விடுங்கள் என்று நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் நோன்பு வைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஒவ்வொரு நாட்டவரும் தத்தமது பகுதியில் காணப்படும் பிறையின் அடிப்படையிலேயே நோன்பை நோற்க வேண்டும், விட வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். இந்த ஹதீஸை இரண்டு மாதிரியும் எடுத்துக் கொள்ள வழியிருந்தாலும் நபி(ச) அவர்களோ அல்லது கலீபாக்களோ இன்டர்னெஷனல் பிறையின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடிய தில்லை. அவ்வப்பகுதியில் காணப்படும் பிறையின் அடிப்படையிலேயே செயற் பட்டுள்ளனர்.
இஜ்திஹாதுடைய விடயத்தில் தனது கருத்தை விட்டுக் கொடுத்துச் செயற்படுவது ஆகுமானதாகும். இவ்வாறே இஜ்திஹாதுடைய மஸ்அலாக்களில் மாற்றுக் கருத்தை எதிர்த்தல் என்பது இல்லை. எனவே, குறித்த அந்த ஹதீஸில் இருந்து, தான் புரிந்து கொண்ட விளக்கத்தின் அடிப்படையில் செயற் படுவதற்காக மக்கள் மத்தியில் ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டியதில்லை.
அடுத்து, நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்பன ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டிய பொது விடயங்களாகும். இந்த அடிப்படையில் எமது நாட்டில் உள்நாட்டுப் பிறையின் அடிப்படையில் மக்கள் செயற்பட்டு வருவதால், அப்படியே நபி(ச) அவர்களும் செயற்பட்டு வந்துள்ளதால் சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டில் உள்ள சகோதரர்கள் தமது நிலைப்பாட்டை மார்க்கத்தினதும், சமூகத்தினதும் நலனைக் கருத்திற் கொண்டு மார்க்கமும் இது விடயத்தில் விசாலப் போக்கை அனுமதித்துள்ளதால் விட்டுக் கொடுத்துச் செல்வது சிறந்ததாகும்.
மூலம்: http://www.ismailsalafi.com/
கேள்வி:
உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு ‘மக்கா” பிறையை மையமாகக் கொண்டு ரமழானைத் தீர்மானிக்கும்படியும் ஏனைய அம்சங்களைச் செய்யும்படியும் அழைப்புவிடுப்போர் உள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்:
வானியல் நோக்கில் இந்த வாதம் நடைமுறைச் சாத்தியமற்றதாகும். ஷைக்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகின்றது போல் சந்திர உதயம் இடத்துக்கு இடம் மாறுபடக் கூடியது என்பதில் வானியலாளர்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் உள்ளனர். சந்திர உதயம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது எனும் பொது மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும் வானியலின் அடிப்படையிலும் அந்தந்த நாட்டில் காணப்படும் பிறையின் அடிப்படையில் செயற்படுவதே சரியாகும்.
இதற்கான மார்க்க ஆதாரம் பின்வருமாறு,
‘யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்.” (2:185)
ரமழானை அடைந்தவர்களை அழைத்து நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கூறுகின்றான். பூமியின் ஒரு பகுதியில் இருப்பவர்கள் ரமழான் மாதத்தை அடையவில்லை. அதாவது, பிறையைக் காணவில்லை. உதாரணமாக, மக்காவாசிகள் பிறையைக் கண்டுவிட்டனர். பிறையைக் காணாத மக்கள் ரமழானை அடைந்தால் நோன்பு பிடியுங்கள் என்ற இந்தக் கட்டளைக்கு மாதத்தை அடையாமல் எவ்வாறு உள்வாங்கப்படுவார்கள்?
நபி(ச) அவர்கள் கூறினார்கள். ‘பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமாக இருந்தால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.”
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி), ஆதாரம்: புஹாரி- 1909, முஸ்லிம்- 2597
இவ்வாறு நபி(ச) அவர்கள் கூறியிருக்கும் போது, உதாரணமாக மக்காவாசிகள் பிறை கண்டுவிட்டனர். பாகிஸ்தான் அவர்களுக்குப் பின்னால் உள்ள கிழக்கு மக்களும் நோன்பு பிடிக்க வேண்டும் என்று எப்படி நாம் அவர்களை நிர்ப்பந்திக்க முடியும்?
நபி(ச) அவர்கள், ‘பிறையைக் கண்டு பிடியுங்கள்” என்று சொல்லியிருக்க, வானில் பிறை இன்னும் உதிக்கவில்லை என்பதை வானியல் அடிப்படையில் அறிந்து வைத்துள்ள நாம் குறித்த நாளில் நோன்பு பிடிக்க வேண்டும் என்று எப்படிக் கூற முடியும்?
அடுத்து, இந்த வாதம் பிழையானது என்பதை அறிவுப்பு+ர்வமாகவும் நாம் உணரலாம். முரண்பட முடியாத சரியான ஒப்பீட்டு ஆய்வின் மூலம் நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்.
பூமியின் மேற்குப் பக்கத்தை விட கிழக்குப் பக்கத்தில்தான் பஜ்ர் முதலில் உதிக்கின்றது என்பதை நாம் அறிவோம். கிழக்குப் பக்கத்தில் பஜ்ர் உதிக்கும் போது இரவுப் பொழுதில் இருக்கும் எமக்கு நோன்பு நோற்பது கடமையாகுமா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும்.
கிக்குப் பக்கத்தில் சூரியன் மறையும் போது பகல் பொழுதில் இருக்கும் எமக்கு நோன்பைத் திறப்பது ஆகுமானதா? நிச்சயமாக இல்லை.
அப்படியென்றால், சந்திரனும் சூரியனைப் போன்றதே! பிறை என்பது மாதத்தைக் காட்டும். சு+ரியன் என்பது நாட்களைக் காட்டும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் நோன்பு பற்றிப் பின்வருமாறு கூறுகின்றான்.
‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர் இரவு வரை நோன்பைப்பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் மஸ்ஜித்களில் (தங்கி) இஃதிகாப் இருக்கும் போது அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை நெருங்காதீர்கள். இவ்வாறே, மனிதர்கள் (தன்னை) அஞ்சி நடப்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை அவர்களுக்கு தெளிவு படுத்துகின்றான்.” (2:187)
இவ்வாறு கூறிய அல்லாஹ்தான் அந்த மாதத்தை உங்களில் எவர் அடைகின்றாரோ அவர் நோன்பிருக்கட்டும் என்று கூறுகின்றான்.
(பஜ்ரை அடைந்தவர் நோன்பைப் பிடித்து, சு+ரிய மறைவை அடைந்தவர் நோன்பைத் திறப்பது போல் பிறை உதிப்பில் வேறுபாடு இருப்பது போல் பிறை எங்கு தென்பட்டதோ அவர்கள் மீதே நோன்பு பிடிப்பதும், விடுவதும் மார்க்க விதியாகும். மக்கா பிறையை வைத்து பிறை உதிக்காத பகுதியில் இருப்பவர்கள் நோன்பிருக்க முடியாது.
இந்த அடிப்படையில் நோன்பு மற்றும் பெருநாள் விடயத்தில் அல்லாஹ் தனது வேதத்திலும் நபியவர்கள் தமது ஸுன்னாவிலும் காட்டித் தந்த சந்திரனைக் காணுதல் அல்லது பஜ்ரை அடைதல் என்ற உணர்வு ரீதியான அடிப்படையில் அவரவர்குரிய தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இயங்குவதே சரியானதாகும்.
(அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்))
மூலம்: http://www.manhaj.in/index.php/fatwas/140-ramadan-fatawa
திர்மிதி 11. நிங்கள் (ஒன்றுக்கூடி) நோன்பு நோற்கும் தினம்தான் நோன்பு நாள்; நீங்கள் நோன்பை விடும் தினம்தான் நோன்பு பெருநாள்; நீங்கள் குர்பானி கொடுக்கும் தினம் தான் ஹஜ்ஜுப் பெருநாள்

No comments:
Post a Comment