Monday, June 15, 2015

அகீதா அல்லாத இஜ்திஹாதுடைய விடயத்தில் தனது கருத்தை விட்டுக் கொடுத்துச் செயற்படுவது ஆகுமானதாகும்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அகீதா அல்லாத இஜ்திஹாதுடைய விடயத்தில் தனது கருத்தை விட்டுக் கொடுத்துச் செயற்படுவது ஆகுமானதாகும்:
1. எந்த நாளில் மக்கள் நோன்பை நிறைவு செய்து நோன்பு நோற்காமல் பெருநாள் கொண்டாடுகிறார்களோ, அதுவே ஈதுல் ஃபித்ருடைய நாளாகும். எந்த நாளில் மக்கள் குர்பானி கொடுக்கிறார்களோ அதுவே குர்பானிப் பெருநாளாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ :802, இப்ன் மாஜா: 1660

2. உதுமான் (ரலி) மினாவில் தங்கிய போது 4 ரக்காத்துகள் தொழுதார்கள். இதை கண்ட இப்ன் மஸ்ஊத் (ரலி) "நான் நபிகளாருடன் இரண்டு ரக்காத்துகள், அபூபக்கர்(ரலி) அவர்களுடன் இரண்டு ரக்காத்துகள், உமர்(ரலி) அவர்களுடன் இரண்டு ரக்த்துகளே தொழுதுள்ளேன். அனால் தங்களால் இது மாற்றபட்டுவிட்டதே. இந்த 4 ரக்காத்துகளில் 2 ரக்காத்துகள் இறைவனால் ஏற்றுக்கொளப்படும் என நம்புகிறேன்" என்று கடிந்து கூறினார். பிறகு இப்ன் மஸ்ஊத் (ரலி) 4 ரக்காத்துகள் தொழுதார்கள். "தாங்கள் உதுமான்(ரலி) அவர்களை கடிந்துகொண்டீர்கள். ஆனால் தாங்கள் 4 ரக்காத்துகள் தொழுதீர்களே?" என்று வினவியபோது "மாறுடுதல் தீயது!" என்று பதில் அளித்தார்கள். அபூதாவூத் (1/307)
இந்த ஹதீஸின் தொடர் ஸஹீஹானது. இதைபோன்றே இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களின் முஸ்னத்(5/155) அபூதர்தா(ரலி) அவர்களிடமிருந்த்து மற்றொரு ஹதீஸும் அறிவுக்கபட்டுள்ளது.

3. நபி (ஸல்) அவர்கள்  கஅபாவை இடித்துவிட்டு இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டவில்லை, மாறாக தான் அவ்வாறு செய்யதாற்கு "(குறைஷி) சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருங்கிய காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின் நான் அதைக் கட்டியிருப்பேன்" என்று கூறி நியாயப் படுத்தினார்க்கள். ( ஸஹீஹ் முஸ்லிம் :2585 )

4.இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி(ஸல்) அவர்கள், 'பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்" என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், 'பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்" என்று கூறினர். வேறு சிலர், '(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; ('வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்" என்று கூறினர். நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.(ஸஹீஹ் புகாரி :4119)

5.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
ஒருவர் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத கேட்டேன். அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அவரை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தேன். அப்போது அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் சாயல்) படிந்திருப்பதை உணர்ந்தேன். அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள். (எல்லா விஷயங்களிலும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (ஒவ்வொரு விஷயத்திலும்) கருத்து வேறுபாடு கொண்டு தான் அழிந்து போனார்கள்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி: 3476)

மார்கத்தை பிளவு படுத்தி தங்கள் பள்ளிகளில் இமாமுக்கு கட்டுபடாமல் , குறிப்பாக ரமளான் மாதத்தில் வித்ரு தொழுகை விஷயத்தில் இமாம்களோடு (மத்ஹபை காரணம் கூறி) வேறுபடும் மக்கள், மேற்கூறபட்ட ஹதீஸைகளை மனதில் கொள்ள வேண்டும்.
அதே போல் வானவியல் ஆராய்சிகளின் மூலம், பெருபான்மை மக்களை விட முந்தியோ, பிந்தியோ நோன்பு பிடிப்பதிலும் எந்த தவறும் இல்லை என நினைப்பவர்கள், இந்த ஹதீஸைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

நிச்சயமாக அல்லாஹ்வின் கரம், ஜமாத்தின் மீதே உள்ளது.
(ஸஹீஹ் ஸுனன் அன்நஸாயீ :4032)



படம்: ஜாக் தருமபுரியில் ஊரை விட்டு விளகி ஒரு நாள் முன்பு பெருநாள் கொண்டாட்டம்

No comments:

Little movements in prayer

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The evidence that small movements, or repeated movements that are not continuous, do not invalidate ...