தொழுகை, ஸகாத் இவைகளுக்கு ஆதாரமாகவும், ஏக தெய்வக்கொள்கையின் விளக்கமாகவும் கீழ் காணும் இறைவசனம் அமைந்துள்ளது.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ
இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே அன்றி, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.[ 98 ஸூரத்துல் பய்யினா : 5]
இஸ்லாமிய அரசு நாடுகளில்
ஜக்காத் வழங்காதவர்களின் சொத்துக்களில் பாதியை பறிமுதல் செய்ய இஸ்லாமிய அரசுகளுக்கு உரிமை உண்டு.(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுப்பீராக! அதனால் அவர்களை நீர் சுத்தப்படுத்தி அவர்களின் அகங்களை தூய்மையாக்கி வைப்பீராக! மேலும், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதியளிப்பதாகும், மேலும் அல்லாஹ், செவியேற்கிறவன், மிக்க அறிகிறவன். (9:103)
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் பகுதிக்கு அனுப்பி வைத்தபோது, ‘நிச்சயமாக நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தினரிடம் செல்கிறீர்கள். நீங்கள் அவர்களைச் சென்றடைந்ததும், அவர்களிடம் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் ஒருவனே என்றும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் சாட்சி பகருமாறு கூறுங்கள். அவர்கள் உங்கள் கூற்றுக்கு கட்டுப்பட்டுவிட்டால், அல்லாஹ் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கியிருக்கிறான் என்றும் கூறுங்கள். அதிலும் அவர்கள் உங்கள் கூற்றுக்குக் கட்டுப் பட்டுவிட்டால், அல்லாஹ் அவர்கள் மீது ஜக்காத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்றும் ஜக்காத் செலுத்துபவர்களிடமிருந்து (பணக்காரர்களிடமிருந்து) ஜக்காத்தை வசூலித்து, அவர்களில் ஜக்காத்தைப் பெறத் தகுதியுள்ளவர்களுக்கு (ஏழைகளுக்கு) பங்கிடுங்கள். (புஹாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:‘மேயும் ஒட்டங்களுக்கு மூன்று வயதுள்ள ஒரு பெண் ஒட்டகம் (ஜக்காத்தாக) கொடுக்கப்பட வேண்டும். பெண் ஒட்டகங்களை எண்ணிக்கையில் சேர்ப்பதிலிருந்து தவற விடக்கூடாது. நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஜக்காத் வழங்குபவனுக்கு, நன்மைகள் உண்டு. எவரேனும் ஜக்காத் வழங்கத் தவறினால், அவரது சொத்தில் பாதி அல்லாஹ்வுக்கு உரியதாக எடுத்துக் கொள்ள உரிமை உண்டு. முஹம்மதுவின் குடும்பத்தார் எவருக்கும் ஜக்காத்தில் எதனையும் பெற்றுக்கொள்ள அனுமதியில்லை’ என பஹ்ஷ் இப்னு ஹாக்கிம் தனது பாட்டனார் தனக்கு தெரிவித்தாக தெரிவிக்கும் இந்த ஹதீஸ் நஸயீ, அபுதாவூத் (பாகம் 2 பக்கம் 411 – 2 – ஹதீஸ் எண்: 1570)
இஸ்லாமிய அரசு நடைபெறாத நாடுகளில்
(விசுவாசங்கொண்டோரே) தங்கள் செல்வங்களை (தர்மத்திற்காக) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களே அத்தகையோர் - அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. அவர்களுக்கு மறுமையில் யாதொரு பயமுமில்லை. (இம்மையில் விட்டுச் சென்றதைப் பற்றி) அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள். [2:274]
‘தமீம் குலத்தைச் சார்ந்த மனிதர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்: ‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமானச் செல்வமும்;, பெரிய குடும்பமும், பெரும் சொத்துக்களும் இருக்கின்றன. நான் எனது விருந்தாளிகளை மதிக்கும் பண்புடன் இருக்கிறேன். நான் என்னுடைய வாழ்க்கையை எப்படி நடத்துவது? நான் என்னுடைய செல்வத்தை எப்படிச் செலவு செய்வது என்று எனக்கு அறிவுரை கூறுங்கள்’ என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்களது செல்வங்களிலிருந்து ஜக்காத்தைச் செலுத்துங்கள். ஜக்காத் தூய்மைப்படுத்தக் கூடியது என்பதால், அது உம்மைத் தூய்மைப்படுத்தும். உறவுகளிடம் கருணையுடனும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டுக்காரர்களுக்கும், கையேந்துபவர்களுக்கும் உரியதை வழங்குங்கள். உங்கள் செல்வத்தில் வீண்செலவு செய்யாதீர்’ என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் – ஆதார நூல்: முஸ்னத் அஹ்மத் – ஹதீஸ் எண்: 11945)
ஜக்காத் யாருக்கு
தர்மங்களெல்லாம்
1.) வறியவர்களுக்கும்,
2.) ஏழைகளுக்கும்,
3.) அதற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும்,
4.) (புதிதாக இஸ்லாத்தை தழுவியோரில்) எவர்களின் இதயங்கள் அன்பு செலுத்தப்பட வேண்டுமோ அத்தகையோருக்கும், இன்னும்
5.) (அடிமைகளின்) பிடரிகளை விடுதலை செய்வதற்கும்,
6.) கடனில் மூழ்கியவர்களுக்கும்,
7.) அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பதிலும்,
8.) வழிப்போக்கருக்கும்
உரித்தானதாகும், (இது) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும், மேலும், அல்லாஹ் நன்கறிகிறவன். தீர்க்கமான அறிவுடையவன். [ஸூரத்துத் தவ்பா 9:60]
الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَهِيَ عَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழைகளுக்கு தர்மம் செய்வது ஒரு தர்மம் மட்டுமே. அதையே உறவினருக்குச் செய்தால் தர்மம், உறவை பேணுதல் ஆகிய இரண்டு தர்மங்கள் ஆகும். இதை சல்மான் பின் ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி:549, புகாரி:1466, முஸ்லிம் 1818)
அணியும் நகைகளுக்கு ஜகாத்
وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي ذَلِكَ فَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ فِي الْحُلِيِّ زَكَاةَ مَا كَانَ مِنْهُ ذَهَبٌ وَفِضَّةٌ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَعَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ . وَقَالَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمُ ابْنُ عُمَرَ وَعَائِشَةُ وَجَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ وَأَنَسُ بْنُ مَالِكٍ لَيْسَ فِي الْحُلِيِّ زَكَاةٌ . وَهَكَذَا رُوِيَ عَنْ بَعْضِ فُقَهَاءِ التَّابِعِينَ وَبِهِ يَقُولُ مَالِكُ بْنُ أَنَسٍ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
وَلاَ يَصِحُّ فِي هَذَا الْبَابِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْءٌ
இமாம் திர்மிதி(ரஹ்) கூறுகின்றார்கள்:
அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா என்பது குறித்து அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். நபிதோழர்கள் மற்றும் தாபி உ அறிஞர்களில் சிலர், "தங்கம் மற்றும் வெள்ளியாலான அணிகலன்களுக்கு ஜகாத் உண்டு" என்கின்றனர். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்), அப்துல்லாஹ் பின் அல் முபாரக்(ரஹி) ஆகியோரும் இவாறே கூறுகின்றனர்.
இப்னு உமர்(ரலி), ஆயிஷா(ரலி), ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி), அனஸ் பின் மாலிக்(ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் சிலர், "(அணியும்) நகைகளுக்கு ஜகாத் இல்லை" என்கின்றனர். இவ்வாறே தாபி உ சட்ட அறிஞர்களில் சிலரிடமிருந்தும் அறிவிக்கபட்டுள்ளது. மாலிக் பின் அனஸ்(ரஹ்), ஷாஃபிஈ(ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறுகின்ரனர்.
அணியும் நகைகளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என்பது குறித்து வந்துள்ள (ஹதீஸ்) எதுவும் ஸஹீஹ் தரத்தில் அமைந்ததல்ல
[ஜாமிஉத் திர்மிதி 575, 576]
ஹன்பலி மத்ஹபின் மாற்க மேதையான இப்ன் குதாமா(ரஹி) அவர்கள் கூறுகிறார்கள்,"ஒரு பெண் நகையை தான் அணிந்தாலும், அல்லது இரவலாக கொடுத்தாலும் அதற்கு ஸகாத் இல்லை. இதுவே ஹன்பலி மத்ஹபின் சட்டமாகும். இவ்வாறே இப்ன் உமர், ஜாபிர், அனஸ், ஆயிஷா, அஸ்மா (ரலி) போண்றோரிடமிருந்து அறிவிக்கபட்டுள்ளது. இதுவே அல்-காஸிம், அஷ்-ஷ'அபி, கதாதா, முஹம்மத் இப்ன் அலி, 'அமராஹ், மாலிக், அஷ்-ஷாஃபி, அபு உபைத், இஷ்ஹாக் மற்றும் அபு தஃவ்ர் (ரஹி) அகீய சட்ட வல்லுன்நர்களின் தீர்பாகும்.
அவ்வாறே தற்கால அறிஞர்களான ஷைக் ஸாலிஹ் அல்-முனாஜித், ஷைக் ஸல்மான் அல்-அவ்தா, ஷைக் அப்துல் அஜீஸ் அத்-தாரிஃபி போன்ற சுவுதி உலமாக்களும் கூறுயுள்ளனர்.
https://twitter.com/abdulaziztarefe/status/355346566900486145
https://www.islamweb.net/en/fatwa/286222/
https://www.facebook.com/almunajjid.en/posts/989899394445710
ஜக்காத் கொடுக்காதவர்களின் நிலை
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஜக்காத் வழங்காதவர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனை உண்டு என எச்சரித்துள்ளார்கள்.الَّذِينَ لَا يُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ
எவர்கள் ஜகாத்து கொடுப்பதில்லையோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம்.[41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா :7]
எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர் களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.[3 ஸூரத்துல்ஆல இம்ரான்:180]
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ-ஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ் வழங்கிய செல்வங்களிலிருந்து, ஜக்காத் வழங்காதவர்கள் யாரோ, மறுமை நாளில் அவனது செல்வம் முழுவதும் வழுக்கைத் தலையுள்ள, கண்களில் கருநிற புள்ளிகளைக் கொண்ட விஷப்பாம்பாக மாற்றப்படும். ‘நான்தான் உனது செல்வம்: நான்தான் உனது பொக்கிஷம்’ என அந்த பாம்பு அவனது கழுத்தைச் சுற்றி, அவனது கன்னங்களைக் கடித்துக் கொண்டே கூறும்;.’ எனக் கூறினார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருள்மறை குர்ஆனிலிருந்து கீழ்க்காணும் வசனத்தை நினைவூட்டினார்கள்: ‘அல்லாஹ்; தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் – அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்கு தான்: அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;:’ (அத்தியாயம் 3 – ஸூரத்துல் ஆல – இம்ரான் 180வது வசனத்தின் ஒரு பகுதி.) (புகாரி : 486.)
செல்வங்களைச் சேமித்து வைத்திருக்கும் ஒருவர் அவைகளுக்குரிய ஜக்காத்தை வழங்கவில்லையானால், அது (அவர்களது செல்வம்) நெருப்பில் சூடாக்கப்பட்டு, அவரது இரு விலாக்களும், நெற்றியும் அதன் மூலம் சுடப்படும். இது ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுள்ள நாளில், அல்லாஹ் தனது அடியார்களுக்கு தீர்ப்பு வழங்குகிற வரை நடந்து கொண்டிருக்கும். பின்னர் தனது வழியை அவன் காண்பான். (அந்த வழி) ஒன்று சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ இருக்கும்’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு - முஸ்லிம் : 2163)
ஜக்காத்தை தடுப்பவர்களின் நிலை
விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர், மனிதர்களின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணுகிறார்கள், இன்னும், (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதற்கும் தடை விதிக்கின்றனர், (ஆகவே, இவர்களுக்கும்) இன்னும், பொன்னையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரே அத்தகையவர்களுக்கும், (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக. (பொன், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பின்னர் அவற்றைக்கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடுபோடப்படும் நாளில்-“உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தது இதுதாம், ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்ததை சுவைத்துப் பாருங்கள்” (என்று அப்போது அவர்களுக்குக் கூறப்படும்). [9 ஸூரத்துத் தவ்பா: 34, 35](நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கின்றான். அன்றி, அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். [2 ஸூரத்துல் பகரா: 268]
மறுமை நாளின் அறிகுறியாக ஜக்காத்
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது (முஸ்லிம் 1681)
No comments:
Post a Comment