Saturday, March 23, 2019

சுப்ஹில் குனூத்

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ



'நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை சுப்ஹில் குனூத் ஓதி வந்தார்கள்' என்ற செய்தியின் நிலை
 'நபி (ஸல்) அவர்கள் உலகத்தை விட்டுப் பிரியும் வரை சுப்ஹில் குனூத் ஓதி வந்தார்கள்' என்று அனஸ் (ரழி) அறிவிப்பதாக ஒரு செய்தி முஸன்னப் அப்;துர்ரஸ்ஸாக், சுனன் தார குத்னீ, முஸன்னப் இப்னு அபீ ஷைபா, முஸ்னத் அஹ்மத், பைஹகீ போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
அனஸ்(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் இந்தச் செய்திக்கு மூன்று அறிவிப்பாளர் வரிசைகள் உள்ளன. மூன்றுமே பலவீனமானதாகும்.
முதலாவது அறிவிப்பாளர் வரிசையில் 'அபூ ஜஃபர் அர்ராஸீ' என்பவர் இடம்பெறுகின்றார்.
இவர் பலவீனமானவர் என்று அதிகமான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களில் பின்வருவோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
- இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)
- இமாம் யஹ்யா பின் மயீன் (ரஹ்)
- இமாம் அம்ரு பின் அலீ (ரஹ்)
- இமாம் அபூ ஸுர்ஆ (ரஹ்)
- இமாம் நஸாஈ (ரஹ்)
- இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்)
(
பார்க்க : தஹ்தீப் அத்தஹ்தீப் 1257)
- இமாம் இப்னு கதீர் (ரஹ்)
(
பார்க்க : தப்ஸீர் இப்னு கதீர் 321)
 இரண்டாவது அறிவிப்பாளர் வரிசையில் இஸ்மாயில் பின் முஸ்லிம் அல் மக்கீ மற்றும் அம்ரு பின் உபைத் அல் முஃதஸிலீ ஆகிய இரண்டு அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர். அவர்கள் இருவருமே கடுமையான பலவீனமானவர்கள் என்பதை இமாம்களான அஹ்மத் பின் ஹன்பல், இப்னு மயீன், அலி பின் அல்மதீனி, அபூ ஹாதம், நஸாஈ, இப்னு ஹிப்பான் போன்றோர் உறுதிப்படுத்துகின்றனர்.
(
பார்க்க : தஹ்தீபுத் தஹ்தீப் 862)
 மூன்றாவது அறிவிப்பாளர் வரிசையில் 'தீனார் பின் அப்துல்லாஹ்' என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்பதை இமாம்களான இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) (அல்;இலல் 1444) இமாம் அத்துர்குமானி, இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (அத்தல்கீஸ் 1245), இப்னுல் கைய்யும் (ஸாதுல் மஆத் 199) 
எனவே இந்த ஹதீஸ் ஆதாரமாக எடுப்பதற்கு தகுதியற்றதாகும்.
- அல்லாஹ் மிக அறிந்தவன்

மூலம்:https://www.facebook.com/ML.Mubarack.Madani.Ph.D/posts/2326086057423901

மேலும் விபரங்களுக்கு:
இமாம் குனூத் ஓதினால், அவருடம் நாமும் குனூத்திற்கு ஆமீன் கூற வேண்டும். 
 இதற்கு ஆதாரமாக ஷைக் அல்பானி ரஹி, கீழ்கண்டா ஹதீஸை பதிவு செய்கிறார்கள்:

ஸஹீஹ் முஸ்லிம் பாடம் : 19 இமாமை மஃமூம் பின்தொடர்தல். 
694. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களது வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே, நாங்கள் அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிடவே அவர்கள் எங்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்தவாறே தொழுதோம். அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தாச் செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் (குனிந்து நிமிரும்போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறினால் நீங்கள் ரப்பனா லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள். அவர் அமர்ந்தவாறு தொழுதால் நீங்கள் அனைவரும் அமர்ந்தவாறே தொழுங்கள்.

மேலும் விபரங்களுக்கு:





No comments:

Social Media Encourages the Dayyooth – An Islamic Perspective

  Scholars have said ‘خير فيمن لا غيرة له لا’, ‘There is no good in a person who has no protective jealousy and honour’ [Kitab al Kaba’ir]. ...