Tuesday, March 26, 2019

ஸஹாபி என்றால் யார்?

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ



ஸஹாபி என்றால் யார் ??

கேள்விகள்


1 - ஸஹாபாக்கள் கவ்ஸர் தடாகத்திலிருந்து அப்புறப்படுத்தப் படுவார்கள்.

2 - ஸஹாபாக்களில் சிலர் வந்த வழியே திரும்பி விட்டார்கள்.

3 - ஸஹாபாக்களில் சிலர் பித்அத் செய்தார்கள்.

பதில்கள்


1 - ஸஹாபி என்பதின் சரியான வரைவிலக்கணம்?
من لقي النبي صلى الله عليه وسلم مؤمناً به ومات على ذلك

எவர் நபி ஸல் அவர்களை ஈமான் கொண்ட நிலையில் சந்தித்து அதே ஈமான் கொண்ட நிலையில் மரணிக்கிறாரோ அவரே ஸஹாபி ஆவார்.

ஸஹாபி நபி ஸல் அவர்களை சந்திக்கும் போது ஈமானை ஏற்றவராக இருக்க வேண்டும். அவ்வாறே தனது மரணித்தின் போதும் ஈமான் கொண்ட நிலையிலேயே மரணித்தவராக இருக்க வேண்டும்.

ஒருவர், நபி ஸல் அவர்களை சந்திக்கும் போது ஈமான் கொண்டவராக இருந்து தனது மரணத்தின் போது மதம் மாறிவிட்டால் அவர் ஸஹாபியாக ஆக மாட்டார்.

2 - கவ்ஸர் தடாகத்திலிருந்து அப்புறப்படுத்தப் படுபவர்கள் யார்?

கவ்ஸர் தடாகம் தொடர்பான ஹதீஸ்களை ஒன்று திரட்டினால், அதிலிருந்து அறிய முடிவது கவ்ஸர் தடாகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுபவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள், மதம் மாறியவர்கள் ஆவார்கள்.

فَيُقَالُ إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ
'இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்' என்று சொல்லப்படும். (புகாரி - 3447)

فَيَقُولُ إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ ، إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى
அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான். (புகாரி - 6585)

கவ்ஸர் தடாகத்திலிருந்து அப்புறப்படுத்தப் படுவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய நபர்கள் ஆவார்கள் என்பதை ஹதீஸின் வாசகங்களை வைத்தே அறியலாம்.

3 - இமாம் கத்தாபி ரஹ் அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் கருத்தை இந்த ஹதீஸிற்கு விளக்கமாக கூறும் போது,

கவ்ஸர் தடாகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவர்கள் யாரென்றால் நபி ஸல் அவர்களின் மரணித்திற்கு பிறகு முஸைலமா போன்ற பொய்யர்களை நபியாக ஏற்று மதம் மாறியவர்களும், ஜகாத் என்ற கடமையை நிறைவேற்ற மாட்டோம் என்று மறுத்த கிராமவாசிகளே ஆவார்கள்.

ஸஹாபாக்களில் யாரும் இதில் இடம் பெற மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

கவ்ஸர் தடாகத்திலிருந்து அப்புறப் படுத்தப்படுபவர்களில் ஸஹாபாக்கள் வர மாட்டார்கள் என்பதற்கு இந்த ஹதீஸே ஆதாரமாகும். ஸஹாபாக்களின் வரைவிலக்கணமும் இந்த கருத்தையே உறுதிப்படுத்துகிறது.

4 - கவ்ஸர் தடாகம் தொடர்பான ஹதீஸை வைத்து இதில் ஸஹாபாக்களும் வருவார்கள் என்ற நச்சுக் கருத்தை ஷியாக்களை தவிர வேறு யாரும் இஸ்லாமிய வரலாற்றில் சொன்னதில்லை.


ஆக்கம்
மௌலவி ஹசன் அலி உமரி

No comments:

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...