بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
உழ்ஹிய்யாவை கட்டாயக் கடமை என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(வ) கூறினார்: ‘நான் நபி((ﷺ) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10 வது) நாளில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘(பெருநாள்) தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதனிடத்தில் (அதற்கு பதிலாக) வேறொன்றை (தொழுகைக்குப் பின்) அறுக்கட்டும். அறுக்காமல் இருப்பவர் (தொழுகை முடிந்தவுடன்) அறுக்கட்டும்;” என்று கூறினார்கள். (புகாரி: 5562)
தொழுகைக்கு முன்னர் அறுத்தவருக்கு மீண்டும் அதற்குப் பகரமாக நபி((ﷺ) அவர்கள் தொழுகையின் பின்னர் அறுக்குமாறு கூறியுள்ளார்கள். எனவே, இது கட்டாயமான கடமை. கடமை இல்லை என்றால் மீண்டும் அறுக்குமாறு நபி((ﷺ) அவர்கள் உத்தர விட்டிருக்கமாட்டார்கள் என்பது இவர்களின் வாதமாகும்.
‘துல் ஹஜ் (முதல்) பத்தில் நுழைந்துவிட்டால் உங்களில் உழ்ஹிய்யா கொடுக்க யாரேனும் விரும்பினால் அவர் தனது நகம், முடி, என்பவற்றைக் களைய வேண்டாம்” என நபி((ﷺ) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்- 1977, அஹ்மத்- 6ஃ289, தாரமீ- 1991, இப்னுமாஜா- 3149)
இந்த ஹதீஸ் உழ்ஹிய்யா கொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் பிறை ஒன்றில் இருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை நகம், முடி போன்றவற்றைக் களையக் கூடாது என்று கூறுகின்றது. அவர் இக்காலகட்டத்தில் இல்லறத்தில் ஈடுபடுவது, மணம் பூசுவது போன்றன ஆகுமானதாகும்.
இந்த ஹதீஸில் உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாக் கொடுக்க விரும்பினால் என நபி((ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, உழ்ஹிய்யா என்பது கட்டாயக் கடமை அன்று. விரும்பினால் கொடுக்கக் கூடியது என்று மற்றும் சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
உழ்ஹிய்யா சார்பில் வலியுறுத்தி வந்துள்ள ஹதீஸ்களையும் இது போன்ற அறிவிப்புக்களையும் இணைத்துப் பார்க்கும் போது இது கட்டாயக் கடமை (வாஜிப்) அல்ல ஆனால், சுன்னா முஅக்கதா (வலியுறுத்தப்பட்ட சுன்னத்) என்பதை அறியலாம்.
1. அபு பக்ர்(ரலி) அவர்க்ளும், உமர் (ரலி) அவர்களும் உழ்ஹிய்யா கொடுக்கவில்லை (அத்-தபராணி அல்-இர்வாவில் (4/354) அல்பானி ஸஹீஹ் எனக் கூறுகிறார்கள்)
2. அபூமஸுத் அல்-அன்சாரி (ரலி) அறிவிக்கிறார்கள்: எனது அக்கம் பக்கத்தார் அது கடமையாக கருதூவார்கள் என்று எண்ணி என்னால் இயன்ற பொழுதிலும் உழ்ஹிய்யா நான் கொடுப்பதில்லை (அத்-தபராணி அல்-இர்வாவில் (9/445) அல்பானி ஸஹீஹ் எனக் கூறுகிறார்கள்)
மேலும் விவரங்களுக்கு:
No comments:
Post a Comment