بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
தக்பிர் எதற்கு:
நேர்வழி காட்டியதற்காக, நன்றி செலுத்துவதற்காகவுமே!
ஹஜ் பெருநாள் தக்பீர்
لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ ۗ
உங்களை அவன் நேர்வழியில் செலுத்தியதற்காக (தக்பீர் கூறி) அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுங்கள் (ஸூரத்துல் ஹஜ் 22:37)
நோண்பு பெருநாள் தக்பிர்
اللَّهُ أَكْبَرُ- اللَّهُ أَكْبَرُ-,اللَّهُ أَكْبَرُ -لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ اللَّهُ أَكْبَرُ - لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ، أَعَزَّ جُنْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ وَغَلَبَ الأَحْزَابَ وَحْدَهُ، فَلاَ شَىْءَ بَعْدَهُ "
அல்லாஹ்வை உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே (ஸூரத்துல் பகரா :2:185)
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ
" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
وَحْدَهُ، أَعَزَّ جُنْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ وَغَلَبَ الأَحْزَابَ
وَحْدَهُ، فَلاَ شَىْءَ بَعْدَهُ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரில் எதிரிகள் தோல்வி யுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும்போது),
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லாயிலாஹ இல்லல்லாஹு. வஹ்தஹு. அஅஸ்ஸ ஜுன்தஹு. வ நஸர அப்தஹு. வ ஃகலபல் அஹ்ஸாப வஹ்தஹு. ஃபலா ஷைய்அ பஅதஹு" என்று கூறிவந்தார்கள்
(பொருள்: அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவினான். கூட்டுப் படையினரை அவனே தனியொருவனாக வென்றான். அவனுக்குப் பின்னால் (நிலையானது) வேறெதுவும் இல்லை.) [ஸஹீஹ் முஸ்லிம் : 5270, ஸஹீஹுல் புகாரி:4114]
يَقُولُ
" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى
كُلِّ شَىْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونُ سَاجِدُونَ،
لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ،
وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜி லிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது முதலில் மூன்று முறை, “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு பின்வருமாறு கூறுவார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியன. அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையோன்.
நாங்கள் பாவங்களிலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வழிபட்டவர்களாகவும், எங்கள் இறைவனுக்குச் சிரம்பணிந்தவர்களாகவும் அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம். அல்லாஹ் தனது வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டுப் படையினரை தோற்கடித்துவிட்டான். [ஸஹீஹுல் புகாரி:4116]
மேலும் விவரங்களுக்கு:
1. https://islamqa.info/en/answers/158543/eid-takbir-what-are-the-different-formulas
No comments:
Post a Comment